Thursday, 9 May 2013

தத்துவம்


தத்துவம் என்பது பற்றி மக்களிடம் பலதரப்பட்ட கருத்து நிலவுகிறது. தத்துவம் என்பது ஓய்வு பெற்ற, குடும்ப பொறுப்புகளை முடித்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது.  மேட்டுகுடியினரால் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியது, புரிந்து கொள்வதற்கு கடினமானது, அத்துடன் தத்துவம் வாழ்வியலுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தையும்  சமூகத்தில் பார்க்க முடிகிறது.

தத்துவக் கண்ணோட்டம் இன்றி, அதாவது ஒர் உலகக் கண்ணோட்டமில்லாத ஒரு நபரையும் சமூகத்தில் பார்த்திட முடியாது என்பது தான் உண்மை. குறிப்பிட்ட  சமூகத்தில் வாழும் ஒரு நபர் நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான நிகழ்வுகளைக் காண்கிறார், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி தனக்கென்று சில கருத்துக்கள்உடையவராக இருக்கிறார். இதனோடு இயற்கை நிகழ்வுகளைப் பற்றியும் எண்ணிப்பார்க்காமல் அவரால் இருக்க முடியாது. இந்த உலகம் எங்கிருந்து வந்தது? மனித இனம்  இவ்வுலகில் எவ்வாறு தோன்றியது? இறப்பிற்கு பின் மக்களுக்கு ஏற்படுவது என்ன? மகிழ்ச்சி என்றால் என்ன? வாழ்க்கையின் சாரம் என்ன? இது போன்ற கேள்விகளைப்  பற்றி சிந்திக்கும் போது தன்னை அறியாமலேயே அவர் தத்துவயியலின் அடிப்படைகளைப் பற்றி சிந்திக்கிறார். இந்தக் கேள்விகளுக்கு எந்த விடையளித்த போதிலும் அதற்கு ஒரு  தத்துவயியலின் உட்பொருள் இருக்கும்.  இவை அவர் சார்ந்திருக்கும் வர்கத்திற்குத் தக்கப்படி அமைந்திருக்கும். இவ்வகையில் தத்துவம் சமூக வாழ்வின் பிரதிபிலிப்பகாகவே திகழ்கிறது.

இயற்கை  நிகழ்வுகள், சமூக சிந்தனை ஆகியவைகளை கட்டுப்படுத்தும் மிகப் பொதுவான விதிகளை ஆராய்கிறது தத்துவம். அதாவது இயற்கை, சமூகம், சிந்தனை இவற்றுடைய  வளர்ச்சியின் மிகப் பொதுவான விதிகளைப் பற்றிய அறிவியல் என்று தத்துவயியலைக் கூறலாம்.

உலகத்தைப் பற்றிய ஒரு பொதுக்கருத்து நமக்குத் தேவை. அதில் நடைபெறும்  நிகழ்ச்சிகளுடன், செயலற்ற முறையில் நில்லாமல், அவற்றின்  மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்தக் கருத்து தேவைப்படுகிறது.

வாழ்க்கையின்  பொருள் என்ன? மகிழ்ச்சி என்பது என்ன? என்ற கேள்விகளுக்கு முதலாளித்துவ சிந்தனையாளர்களும், பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்களும் வெவ்வேறு  பதில்களை அளிக்கின்றனர். முதலாளித்துவ சிந்தனையாளர்கள் மகிழ்ச்சி என்பது முதன்மையாகச் செல்வமேயாகும் என்கின்றனர். அதுவே வாழ்க்கையின் குறிக்கோள், அதனை எப்படியாகிலும் அடைய வேண்டும் என்று கருதுகின்றனர்.  பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்களுக்கு பாட்டாளிகள் யாருடன் சேர்ந்து உழைக்கிறார்களோ அந்தத் தொழிலாளர்களால், தங்களுக்கும் தங்களைப் போன்ற மக்களுக்கும் மகிழ்ச்சி  கிடைப்பதில், விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரு புதிய மகிழ்ச்சிகரமான வாழ்வை எட்டுவதற்காகவும், உழைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கும், தங்களைப் போன்ற மக்களுக்கும் பயன்படும்படியாக வாழ  வேண்டும் என்பதிலும், இதற்காக நடத்தும் போராட்டத்திலும், அவர்களது மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.

இவ்வாறாக தத்துவம் சிந்தனைக்கு இரண்டு அணுகுமுறைகள் இருப்பதை, அதாவது முதலாளித்துவ கண்ணோட்டம், பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் இருப்பதை அறிந்து  கொள்ள முடிகிறது. வர்க்கம் தோன்றியது முதல், கண்ணோட்டங்கள் தனித்தனியாக செயல்படுகிறது. பண்டைய பொதுவுடைமை சமூகத்தின் சிதையிலிருந்துஅதாவது ஏட்டிலேறிய வரலாற்றிலிருந்து தத்துவக் கண்ணோட்டமும்  பிரிவுப்பட்டே காணப்படுகிறது.

சமூகம் பகைமைப்பட்ட வர்க்கங்களாகப் பிரிவுபட்டதிலிருந்து, எந்தப் பொதுவானதொரு உலகக் கண்ணோட்டத்தையும் காண முடியாது. ஒரு வர்க்கத்திற்கு ஒரு தத்துவயியலும்மற்றொன்றிற்கு வேறொரு தத்துவயியலுமாக இரண்டு பட்டே காணப்படுகிறது. பாட்டாளிகள், உழைக்கும் மக்கள் இவர்களது வாழ்க்கை நலன்களும், முதலாளிகளின் வாழ்க்கை நலன்களும முரணாகவும், பகையாகவும் இருக்கிறது. உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் வெவ்வேறு வழிகளில் மறுவினை புரிகிறார்கள். ஒவ்வொரு வர்க்கமும் தனக்கே உரித்தான  வழியில் அவற்றைப் புரிந்து கொள்கிறது. எனவே உலகக் கண்ணோட்டத்தில், அதாவது தத்துவக் கண்ணோட்டத்தில் வேறுபடுகிறார்கள். இதை தவிர்த்து  நடுநிலையான தத்துவம் என்பது கிடையாது, அதாவது அனைத்து மக்களுக்கும், பகைமைக் கொண்டுள்ள வர்க்கம் அனைத்திற்கும் ஒரேவிதமான பொதுத் தத்துவம் என்பது இருக்க முடியாது. தத்துவம் என்பது வர்க்க சார்புடையதேயாகும்.

பொருள்முதல்வாதிகள் தங்களின் கண்ணோட்டத்தை இயற்கை, பருப்பொருள், வாழ்நிலை என புறநிலையிலிருந்து தொடங்குகிறார்கள். கருத்துமுதல்வாதிகள் துவக்கத்தை ஆன்மீகமாக, அதாவது கருத்து, சிந்தனை, சங்கல்பம் என அகநிலையிலிருந்து தொடங்குகிறார்கள்.

பொருள்முதல்வாதிகள் உலகை விளக்குவதற்கு வெளிச் சேர்க்கைகள், கற்பனை வளங்கள் போன்றவற்றின் துணையை நாடாது, உலகில் காணப்படுபவைகளிலிருந்தே தமது கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். இதனால் தான் இதற்கு பொருள்முதல்வாதம் என்று பெயர்.

கருத்துமுதல்வாதிகள் உலகத்தின் தொடக்கத்தையும், இருப்பையும் உலகத்திற்கு அப்பால் உள்ளவற்றிலிருந்து விளக்குகிறார்கள், அதனால், சமூகத்தின் சாரத்தை அறிந்து கொள்ள முடியாமல், விடிவை சமூகத்திற்கு வெளியே தேடுகிறார்கள்.

சுரண்டுவோருக்கு கருத்துமுதல்வாதம் துணைபுரிகிறது, தொழிலாளிகளுக்கு பொருள்முதல்வாதம் உதவுகிறது.

10 comments:

  1. தொடர்ந்து எழுதுங்கள் தோழர்
    உங்களிடம் கற்றுக்கொள்ள ஆர்வத்தோடு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எழுதுவேன் தோழர். உங்களைப் போன்று படிப்பவர்களும், கற்றுக் கொள்பவர்களும் இருக்கும்வரை தொடர்வேஙன.

      Delete
  2. good words i am follow in many days in you writing

    ReplyDelete
  3. தத்துவம் குறித்து எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள் அருமை தோழர்.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி

      இதனை எனது "மார்க்சிய தத்துவம்" என்ற நூலில் சேர்த்துள்ளேன்

      Delete
  4. நன்றி தோழர் உங்கள் பணி தொடர எனது புரட்சிகர வாழ்த்துக்கள்
    தோழர்... லெனின் தேர்வு நூல்கள் 1-12 பாகங்கள், தத்துவத்தின் அகராதி எனக்கு தேவைப்படுகிறது எங்கு எப்படி பெற்றுக்கொள்வது? உதவுங்களே தோழர்.....

    ReplyDelete
  5. மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்களின் தொகுதி தற்போது என்சிபிஎச் நிறுவனத்தல் வெளியிடப்பட இருக்கிறது. தற்போது முன்பதிவு செய்யப்படுகிறது.

    இதற்கு அடுத்து லெனின் நூல்களின் தொகுதி வர இருக்கிறது. தமிழில் தத்துவத்தின் அகராதி தனியாகத் தொகுக்கத்ததாக தெரியவில்லை

    ReplyDelete
  6. பொருள்முதல்வாதம், ஒரு தத்துவக் கண்ணோட்டமாக, பொருள் உலகம் முதன்மையான உண்மை, மற்றும் பொருளாதார மற்றும் பொருள் நிலைமைகள் போன்ற உறுதியான மற்றும் கவனிக்கக்கூடிய நிகழ்வுகள் மனித சமூகம் மற்றும் தனிநபர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நம்பிக்கையைக் குறிக்கிறது. அது எந்த ஒரு குறிப்பிட்ட சமூக வகுப்பினரையும் இயல்பாக ஆதரிப்பதோ அல்லது ஆதரவளிப்பதோ இல்லை.

    சமூக-பொருளாதார அமைப்புகளின் பின்னணியில், பொருள்முதல்வாதம் என்பது சமூக கட்டமைப்புகள் மற்றும் சக்தி இயக்கவியலை வடிவமைப்பதில் வளங்கள், உற்பத்தி வழிமுறைகள் மற்றும் பொருளாதார உறவுகள் போன்ற பொருள் நிலைமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக புரிந்து கொள்ள முடியும். இந்தக் கண்ணோட்டத்தில், பொருளாதாரக் காரணிகளும் வர்க்கப் போராட்டமும் சமூக சமத்துவமின்மை மற்றும் சுரண்டலைப் புரிந்துகொள்வதற்கு அடிப்படை என்பதை பொருள்முதல்வாதம் அங்கீகரிக்கிறது.

    பொருள்முதல்வாதத்தின் ஆதரவாளர்கள், ஊதியம், வேலை நிலைமைகள் மற்றும் வளங்களை அணுகுதல் போன்ற பொருள் நிலைமைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், சுரண்டல் மற்றும் சமூக அநீதிக்கான மூல காரணங்களை பகுப்பாய்வு செய்து தீர்வு காண முடியும் என்று வாதிடுகின்றனர். இந்த பகுப்பாய்வு, சமத்துவமின்மையை நிலைநிறுத்தும் அமைப்பு ரீதியான தடைகள் மற்றும் கட்டமைப்புகளை அடையாளம் காண உதவுகிறது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியமான உத்திகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.

    பொருள்முதல்வாதம் மட்டுமே குறிப்பிட்ட தீர்வுகள் அல்லது சித்தாந்தங்களை நிர்ணயிக்கவோ அல்லது பரிந்துரைக்கவோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சோசலிசம் மற்றும் கம்யூனிசம் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் தத்துவ முன்னோக்குகள், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக வாதிடுவதற்கு பொருள்முதல்வாத பகுப்பாய்வுகளை இணைத்துள்ளன. இருப்பினும், பொருள்முதல்வாதத்திற்கும் தொழிலாளர் நலன்களுக்கும் இடையிலான உறவு சிக்கலானது, மேலும் பொருள்முதல்வாத கட்டமைப்பிற்குள் பல்வேறு விளக்கங்கள் மற்றும் அணுகுமுறைகள் உள்ளன.

    சமூக உறவுகளை வடிவமைப்பதில் கருத்துக்கள், மதிப்புகள் மற்றும் நனவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இலட்சியவாதம் போன்ற மாற்றுத் தத்துவக் கண்ணோட்டங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த முன்னோக்குகள் பொருள் நிலைமைகளுக்கு அப்பாற்பட்ட காரணிகளில் கவனம் செலுத்தலாம் மற்றும் மனித அனுபவத்தின் கலாச்சார, கருத்தியல் மற்றும் அகநிலை அம்சங்களைக் கருத்தில் கொள்ளலாம்.

    சுருக்கமாக, பொருள்முதல்வாதம் தொழிலாளர்கள் மற்றும் சமூக வர்க்க இயக்கவியலை பாதிக்கும் பொருள் நிலைமைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்க முடியும், அதன் விளக்கம் மற்றும் பயன்பாடு வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் கோட்பாடுகளில் வேறுபடுகிறது. இந்தக் கட்டமைப்பிற்குள்தான் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிட்ட உத்திகள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.

    ReplyDelete
  7. தத்துவம் என்பது ஒரு சிக்கலான மற்றும் மாறுபட்ட ஆய்வுத் துறையாகும், இது யதார்த்தம், அறிவு, நெறிமுறைகள் மற்றும் இருப்பு பற்றிய அடிப்படை கேள்விகளைக் கையாள்கிறது. இது பரந்த அளவிலான தலைப்புகள் மற்றும் அணுகுமுறைகளை உள்ளடக்கியது, மேலும் வெவ்வேறு தத்துவவாதிகள் இந்த சிக்கல்களில் மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கலாம்.

    தத்துவம் என்பது உயர்சாதியினருக்கானது என்றோ அல்லது அது உயிரியலுக்கு அப்பாற்பட்டது என்றோ கூறுவது சரியானது அல்ல. தத்துவம் என்பது வாழ்க்கை மற்றும் உலகம் பற்றிய அடிப்படை கேள்விகளை ஆராய்வதில் ஆர்வமுள்ள எவருக்கும் திறந்திருக்கும் ஒரு துறையாகும். சில தத்துவ நூல்கள் மற்றும் கருத்துக்கள் புரிந்துகொள்வதற்கு சவாலாக இருக்கலாம் என்பது உண்மைதான் என்றாலும், புதிய விஷயத்திற்கு வருபவர்களுக்கு பல அணுகக்கூடிய மற்றும் அறிமுக ஆதாரங்கள் உள்ளன.

    ஒவ்வொருவருக்கும் ஒரு தத்துவக் கண்ணோட்டம் அல்லது உலகக் கண்ணோட்டம் உள்ளது என்ற கருத்து சரியான புள்ளியாகும். உலகின் இயல்பு, மனித இருப்பு, ஒழுக்கம் மற்றும் மகிழ்ச்சி பற்றிய தத்துவ கேள்விகள் தனிநபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி சிந்திக்கும் உலகளாவிய கவலைகள். இந்தக் கேள்விகள் நம்மை எப்படிப் புரிந்துகொள்கிறோம், சமூகத்தில் நமது இடம் மற்றும் நாம் செய்யும் தேர்வுகள் ஆகியவற்றில் தாக்கங்களைக் கொண்டுள்ளன.

    தத்துவம் உண்மையில் இயற்கை நிகழ்வுகள் மற்றும் சமூக சிந்தனையை நிர்வகிக்கும் பொதுவான சட்டங்களை ஆய்வு செய்கிறது, ஆனால் இது வழக்கமான அர்த்தத்தில் ஒரு அறிவியலாக மட்டும் அல்ல. இயற்கை அறிவியலைப் போலல்லாமல், முதன்மையாக அனுபவ கவனிப்பு மற்றும் பரிசோதனையை நம்பியிருக்கிறது, தத்துவம் பெரும்பாலும் பகுத்தறிவு விசாரணை, விமர்சன சிந்தனை மற்றும் தர்க்கரீதியான பகுப்பாய்வு ஆகியவற்றை சுருக்கமான கருத்துக்கள் மற்றும் வாதங்களை ஆராய பயன்படுத்துகிறது.

    வாழ்க்கையின் அர்த்தமும் மகிழ்ச்சியின் தன்மையும் வரலாறு முழுவதும் தத்துவஞானிகளால் சிந்திக்கப்பட்ட கேள்விகள். முதலாளித்துவ மற்றும் பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்கள் உட்பட பல்வேறு தத்துவக் கண்ணோட்டங்கள் இந்தக் கேள்விகளுக்கு மாறுபட்ட பதில்களை வழங்கலாம். கலாச்சார, சமூக மற்றும் தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் தத்துவ முன்னோக்குகள் மாறுபடும் என்பதை அங்கீகரிப்பது முக்கியம், மேலும் "சரியான" பதில் எதுவும் இல்லை.

    வெவ்வேறு சமூக வர்க்கங்கள் மாறுபட்ட உலகக் கண்ணோட்டங்களையும் தத்துவங்களையும் கொண்டிருக்கலாம் என்பது உண்மைதான் என்றாலும், தனிநபர்கள் வர்க்க எல்லைகளைத் தாண்டி, குறுகிய வர்க்க நலன்களைத் தாண்டி தத்துவ விசாரணையில் ஈடுபடுவதும் சாத்தியமாகும். தத்துவக் கண்ணோட்டங்கள் காலப்போக்கில் உருவாகலாம் மற்றும் மாறலாம், கல்வி, வெவ்வேறு யோசனைகளை வெளிப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் உட்பட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

    பொருள்முதல்வாதம் மற்றும் கருத்தியல் என்பது இரண்டு தத்துவ அணுகுமுறைகளாகும், அவை யதார்த்தம் மற்றும் இருப்பின் தன்மை பற்றிய தனித்துவமான முன்னோக்குகளை வழங்குகின்றன. பொருள்முதல்வாதிகள் பொதுவாக இயற்பியல் உலகில் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் அனுபவ சான்றுகள் மற்றும் இயற்கை விதிகளின் அடிப்படையில் விளக்கங்களைத் தேடுகிறார்கள். மறுபுறம், கருத்தியல்வாதிகள், யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதில் அகநிலை அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் நனவின் பங்கை வலியுறுத்தலாம்.

    பொருள்முதல்வாதம் பிரத்தியேகமாக சுரண்டுபவர்களை ஆதரிக்கிறது மற்றும் கருத்தியல் என்பது தொழிலாளர்களுக்கு மட்டுமே உதவுகிறது என்று சொல்வது மிகவும் எளிமையானது. தத்துவக் கண்ணோட்டங்கள் ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தை ஆதரிக்கும் ஒரு எளிய இருவகையாகக் குறைக்கப்பட முடியாது. பல்வேறு தத்துவவாதிகள் மற்றும் தத்துவப் பள்ளிகள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன. தத்துவத்தை திறந்த மனதுடன் அணுகுவதும், வெவ்வேறு கண்ணோட்டங்களை மதிப்பிடுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் விமர்சன சிந்தனையில் ஈடுபடுவது முக்கியம்.

    ReplyDelete