Thursday, 9 May 2013

கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்


தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற மனிதனது தேடலில் இருந்து தத்துவக் கண்ணோட்டங்கள் தோன்றின.

சமூகம் வர்க்கமாக பிரியும் போது, நடைமுறையில் காணப்படும் சமூகத்தை நிலைநிறுத்துவதற்கு  -நியாயப்படுத்துவதற்கு- தத்துவம் முயற்சிக்கும் போது, அத்தத்துவம் சார்புத் தன்மையை பெறுகிறது. இந்த சுரண்டலுக்கு ஆதரவுதருகின்ற தத்துவப் போக்கிற்கு கருத்துமுதல்வாதம் என்று பெயர். மற்றொன்று பொருள்முதல்வாதம்.இது சுரண்டலுக்கு எதிராககுரல் கொக்கிறது.

தத்துவத்தின் அடிப்படை கேள்விக்கு அளிக்கப்படும் பதிலைக் கொண்டு பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம என்று பிரித்தறியப்படுகிறது.

ஆன்மா முதலா? இயற்கை முதலா?

இதற்கு ஆன்மா முதல் என்று கூறுபவர்கள், கருத்துமுதல்வாதிகள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்கள் இயற்கையின் தோற்றத்துக்கு ஆன்மா தான் காரணம் என்று விளக்குகின்றனர். இவர்களது விளக்கம் உலகம் ஏதோ ஒரு விதத்தில் படைக்கப்பட்டது என்ற அனுமானதத்தில் இருந்து தொடங்கிறது.

இயற்கை தான் முதன்மையானது என்று கருதுபவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்களாவர்கள்.

இதனை எங்கெல்ஸ் (லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடியும்) கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்னும் இவ்விரண்டு கூற்றுகளும் தொடக்கத்தில் இதைத் தவிர வேறு எதையும் குறிக்கவில்லை. தமது நூலிலும் வேறு எந்தப் பொருளிலும் அவை பயன்படுத்தப்படவில்லை. அவற்றுக்கு வேறு ஏதாவது பொருள் தரும்பொழுது, குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்.

தத்துவத்தின் அடிப்படை கேள்வியில் மற்றொன்றும் இருக்கிறது, எதார்த்த உலகத்தை அறிந்துணரும் திறம் நம் மனித சிந்தனைக்கு உண்டா?

கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில் இதற்கு ஆம் என்றும் இல்லை என்று இரண்டுவிதமான பதிலளிப்பவர்கள் இருக்கின்றனர். இல்லை என்பவர்கள் அறிவொண்ணாவாதி என்றழைக்கப்படுகின்றனர்.  இவர்கள் உலகத்தை முழுமையாக அறிந்துணர்தல் என்பது சாத்தியம் இல்லை என்கின்றனர்.  இவர்களில் நவீன தத்துவ அறிஞர்கள் ஹியும், கான்ட் ஆகியோராவர். இவர்களின் கண்ணோட்டத்தை மறுப்பதற்குரிய தீர்மானகரமான கருத்தை புறநிலைக் கருத்துமுதுல்வாத நிலையிலிருந்து அறிந்துணர்தல் சாத்தியம் என்று ஹெகலால் கூறப்பட்டது. ஆனால் ஆம் என்பவர்களின் புகழ் பெற்ற அறிஞரான ஹெகல் அவர்களின் அறிய முடியும் என்ற கூற்று, கஅறுதி கருத்துக என்ற பிரம்மத்தின் படிப்படியான மெய்யுருவக்காட்சியாக விளக்கப்படுகிறது. அதாவது, எதார்த்த உலகில் நாம் அறிந்துணர்வது, துல்லியமாக அதன் எண்ண உள்ளடக்கத்தைத்தான், அந்த எண்ண உள்ளடக்கமே உலகத்தை நிரந்தரக் கருத்து (absolute idea) அதாவது பிரம்மத்தை அறிதல் என்ற நிலைக்கு அவர்கரின் தத்துவம் செல்கிறது.

இந்தியாவைப் பொருத்தளவில் அகநிலைக் கருத்துமுதல்வாதிலிருந்து விடுபட முடியாமல் பலர் இருக்கின்றனர்.  விவேகானந்தரைத் தொடர்ந்து நவீன காலத்தில் பல்வேறு அகநிலைக் கருத்துமுதலவாத சிந்தனையாளர்கள் இன்றைய நவீன வடிவத்துடன் காணப்படுகின்றனர். இதில் பல்வேறு இந்திய கம்யூனிஸ்டுகளும் மார்க்சிஸ்டுகளும் அடங்குவர். தங்களை மார்க்சியவாதிகள் என்றழைத்துக் கொள்பவர்களில் பல அறிஞர்கள் அகநிலைக் கருத்துமுதல்வாதப் பிடியிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கின்றனர்.

உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதத்தினர் கருதுகின்றனர். இவர்களில் புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் இங்கிலாந்தில் பெர்க்லி, ஆஸ்திரிரேலியாவில் மாஹி, இந்தியாவில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோர்.

அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம், இருத்தலியல், பின்நவீனத்துவம் போன்றவற்றை குறிப்பிடலாம்.

புறநிலைக் கருத்துமுதல்வாதிகள், காணப்படும் உலகம், மனித உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டதும் வெளியில் இருக்கக் கூடியதுமான முழுமுதற் கருத்தின் விளைபொருள் என்றுரைக்கின்றனர்.

புறநிலை கருத்துமுதல்வாதத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், கிரேக்கத்தில் பிளாட்டோ, ஜெர்மனியில் ஹெகல், இந்தியாவில் ராமானுசர், மத்துவர் போன்றோர்கள்.
மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் இயற்கையும் சமூகத்தையும் அறிந்திட முடியும். இவை இரண்டும் நமக்கு புறத்தே நம்மை சார்ந்திடாமல் புறநிலையில் இயங்குகின்றன என்கிறது.

இயற்கை பற்றிய அறிதலை இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றும், சமூகம் பற்றிய அறிதலை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று தத்துவத்தை இரண்டு பிரிவாக மார்க்சியம் பகுத்தளிக்கிறது.

பொருள்முதல்வாத சிந்தனையாளர்கள், உலகை உள்ளது உள்ளபடியே காணவேண்டும் என்பதையும், உலகின் பொருளாயத ஒருமையின் அடிப்படையை பருப்பொருளில் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.  

பொருள்முதல்வாத சிந்தனையில் புகழ்பெற்றவை கிரேக்கத்தில் டெமாக்கிரிட்டஸ் தத்துவம், இந்தியாவில் சாங்கியம், ஆதிபுத்தர், உலகாயதர். சார்வாகர், அணுவாதம் பேசும் வைசேஷிகர் போன்றோரின் சிந்தனைகள்.

இயக்கவியல் பொருள்முதல்வாத  சிந்தனையாளர்யாளர்களில் புகழ்பெற்றவர் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஜார்ஜ் தாம்சன், இந்தியாவில் தேவிபிரசாத் சாட்டோபாத்தியாயா, கோசாம்பி, ஆர்.கே.சர்மா, நா,வானமாமலை, இலங்கையில் கைலாசபதி போன்றோர்கள்.

தத்துவத்தின் அடிப்படைக் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதிலின் அடிப்படையில் தான் அவரவர்களது உலகக் கண்ணோட்டம் உருவாகிறது. இந்த உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் தாங்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கான அணுகுமுறையை அமைத்துக் கொள்கின்றனர்.

கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் குறிப்பிட்ட வர்க்கங்களின் நலன்களோடு தொடர்புடையவை என்கிறது மார்க்சியம்.

மற்றொரு போக்கும் இருக்கிறது. பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும் அளிக்கின்ற பதிலைத் தாண்டி, எங்களது கண்ணோட்டம்  மேலானதும் அதற்கு அப்பாற்பட்டதும் ஆகும் என்றுரைக்கின்றனர். இவர்களின் இப்போக்கு தத்துவம் எழுப்புகின்ற கேள்விகளை தவிர்க்க முயற்சிக்கிறது.

தத்துவத்தில் இரண்டு கண்ணோட்டத்துக்கு இடையே நடுபோக்கு என்று ஏதும் கிடையாது. ஓன்று பொருள்முதல்வாதம் மற்றொன்று கருத்துமுதல்வாதம். தத்துவம் எழுப்பும் கேள்விக்கு பதில் அளிப்பதில் இருந்து விலகுவதின் மூலம் இவர்கள் கருத்துமுதல்வாதப் போக்கையே பின்பற்றுகின்றனர்.

அனைத்து கருத்துமுதல்வாதிகளும், மத நம்பிக்கையாளர்களும் தன்னுணர்வோடே பிற்போக்கைக் கைகொள்கின்றனர் என்று சொல்வது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட பார்வைத்தான். இவர்களிடையே சில சமூகக் கருத்தில் முற்போக்குடையவர்கள் இருக்கின்றனர் என்பது உண்மையே. ஆனால் கருத்துமுதல்வாதிகளும் மத நம்பிக்கையாளர்களும் விரும்பினாலும்  விரும்பாவிட்டாலும் இந்தக் கண்ணோட்டத்தின் உள்ளடக்கம் பிற்போக்கான வர்க்கங்களின் நலன்களுக்கே இறுதியில் சேவை செய்கிறது.

கருத்துமுதல்வாத மதவழிபட்ட தத்துவம் உலகத்தையும் சமூகத்தையும் புறநிலை உண்மையாக புரிந்து கொள்வதற்கு பெரும் தடையாக இருக்கிறது. எதார்த்த சமூகம் வளர்ச்சி அடைவதையும், அதன் வளர்ச்சியின் விளைவாய் ஏற்பட்ட உள்முரண்பாட்டில் இணக்கம் காண முடியாமை என்ற நிலையை, மறைக்கும்படி முதலாளித்துவ நலன்கள் கோருகிறது. சமூகத்தின் புறநிலை வளர்ச்சியை மறுப்பதற்கு கருத்துமுதல்வாதமும் மதவழிப்பட்ட பிற்கோக்கும் முதலாளித்துவத்துக்கு துணைபுரிகிறது.

இதன்படியே தத்துவம் என்பது கட்சி சார்புத் தன்மையானது என்கிறது மார்க்சியம்.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் பாட்டாளி வர்க்கம் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்கிறது. இதில் தான் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தத்துவத்தின் வர்க்கச் சார்பு அடங்கியிருக்கிறது.

இயற்கையைப் பற்றிய விதிகளை ஆராய்வது இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றும், சமூகம் பற்றிய விதிகளை ஆராய்வது வரலாற்றியல் பொருளம்துலவாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

7 comments:

  1. சிறபான முயற்சி மகிழ்ச்சி தோழர்

    ReplyDelete
  2. உங்கள் முயற்சிக்கு எனது புரட்சிகர வாழத்துக்கள் தோழரே...
    தோழர் லெனின் தேர்வு நூல்கள் 1முதல் 12 வரையான புத்தகங்களையும் பிரசுரித்தால் என்ன?....
    அது காலத்தின் தேவையென்றே நான் கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. லெனினது தொகுப்பு நூல் பாரதிப் பதிப்பகத்தால் வெளியிட உள்ளது. விரைவில் கிடைத்திடும் என்று நினைக்கிறேன்

      Delete
  3. நீங்கள் வழங்கிய பத்தியானது கருத்தியல் மற்றும் பொருள்முதல்வாதத்தின் தத்துவ முன்னோக்குகளின் சுருக்கமான கண்ணோட்டத்தை முன்வைக்கிறது, குறிப்பாக தத்துவத்தின் அடிப்படைக் கேள்விகள் மற்றும் சமூக நலன்களுடன் அவற்றின் தொடர்பு தொடர்பாக. முக்கிய புள்ளிகளின் முறிவு இங்கே:

    கருத்தியல்வாதம்: கருத்தியல் என்பது சமூகச் சுரண்டலை நியாயப்படுத்தும் ஒரு தத்துவப் போக்கு என விவரிக்கப்படுகிறது. ஆன்மா அல்லது ஆன்மீக அம்சம் முதன்மையானது மற்றும் இயற்கையின் தோற்றத்திற்கு பொறுப்பு என்று அது அறிவுறுத்துகிறது. புதிய தாராளவாதிகள் இந்தக் கண்ணோட்டத்தை ஆதரிப்பவர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள், அவர்கள் உலகம் ஏதோ ஒரு வழியில் உருவாக்கப்பட்டது என்று நம்புகிறார்கள்.

    பொருள்முதல்வாதம்: பொருள்முதல்வாதம், கருத்தியல்வாதத்திற்கு மாறாக, சுரண்டலுக்கு எதிராக வாதிடுகிறது. இது இயற்கை முதன்மையானது என்று வலியுறுத்துகிறது மற்றும் ஆன்மா அல்லது ஆன்மீக அம்சம் முன்னுரிமை பெறுகிறது என்ற கருத்தை நிராகரிக்கிறது. பொருள்முதல்வாதம் என்பது பொருள் உலகின் புறநிலை இருப்பை வலியுறுத்தும் பல்வேறு பிரிவுகள் மற்றும் சிந்தனையாளர்களை உள்ளடக்கியது.

    இலட்சியவாதம்: இலட்சியவாதம் என்பது உண்மையான உலகத்தைப் பற்றிய முழுமையான புரிதலை கேள்விக்குள்ளாக்கும் நிலையாக சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹை மற்றும் கான்ட் போன்ற சில நவீன தத்துவவாதிகள், உலகத்தைப் பற்றிய முழுமையான புரிதல் சாத்தியமில்லை என்று நம்பும் அறிவுஜீவிகள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். ஹெகலின் புறநிலை இலட்சியவாதமும் குறிப்பிடப்பட்டுள்ளது, அங்கு அறிவு என்பது பிரம்மத்தின் படிப்படியான காட்சிப்படுத்தலாகக் கருதப்படுகிறது, மேலும் சிந்தனை உள்ளடக்கம் உலகின் முழுமையான யோசனையாகக் கருதப்படுகிறது.

    அகநிலை இலட்சியவாதம்: அகநிலை இலட்சியவாதம் உலகில் உள்ள அனைத்தையும் மனித நனவின் தயாரிப்புகளாகக் கருதும் ஒரு கண்ணோட்டமாக முன்வைக்கப்படுகிறது. பெர்க்லி, மஹி, ஆதி சங்கரர், ரமணன் மற்றும் விவேகானந்தர் போன்ற சிந்தனையாளர்கள் அகநிலை இலட்சியவாதத்தின் ஆதரவாளர்களாக குறிப்பிடப்படுகிறார்கள்.

    புறநிலைவாதம்: புறநிலைவாதம் என்பது கவனிக்கப்பட்ட உலகம் மனித உணர்வுக்கு வெளிப்புறமான ஒரு முதன்மையான கருத்தின் விளைவாகும் என்ற நம்பிக்கையாக விவரிக்கப்படுகிறது. பிளாட்டோ, ஹெகல், ராமானுஜரா மற்றும் மத்துவர் ஆகியோர் புறநிலை இலட்சியவாதத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.

    மார்க்சிய பொருள்முதல்வாதம்: மார்க்சியம் ஒரு தத்துவ கட்டமைப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது, இது தத்துவத்தை மாறும் பொருள்முதல்வாதம் (இயற்கையின் அறிவு) மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம் (சமூகத்தின் அறிவு) என பிரிக்கிறது. மார்க்சிய பொருள்முதல்வாதம் இயற்கை மற்றும் சமூகத்தின் புறநிலை புரிதலை வலியுறுத்துகிறது, அவை மனித செல்வாக்கிலிருந்து சுயாதீனமாக செயல்படுவதாகக் கருதுகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்துடன் தொடர்புடைய முக்கிய சிந்தனையாளர்களில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஜார்ஜ் தாம்சன் மற்றும் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு அறிஞர்கள் அடங்குவர்.

    இந்த பத்தியானது சிக்கலான தத்துவக் கண்ணோட்டங்களின் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுருக்கப்பட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், மேலும் இந்த யோசனைகளைப் பற்றிய விரிவான புரிதலுக்கு மேலும் ஆய்வு மற்றும் ஆய்வு அவசியம்.

    ReplyDelete
  4. நீங்கள் வழங்கிய பத்தியானது ஒரு குறிப்பிட்ட முன்னோக்கை வலியுறுத்துகிறது, மார்க்சிய பொருள்முதல்வாதத்துடன் இணைகிறது மற்றும் கருத்தியல் மற்றும் மத தத்துவத்தை உலகம் மற்றும் சமூகத்தின் புறநிலை யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு தடையாக சித்தரிக்கிறது. வழங்கப்பட்ட முக்கிய புள்ளிகளின் முறிவு இங்கே:

    இரண்டு பார்வைகள்: தத்துவத்தில் இரண்டு முக்கியக் கண்ணோட்டங்கள் உள்ளன என்று பத்தியில் கூறுகிறது: பொருள்முதல்வாதம் மற்றும் கருத்தியல். தத்துவக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்ப்பது கருத்தியல்வாதத்துடன் ஒத்துப்போகிறது என்று அது அறிவுறுத்துகிறது.

    கருத்தியல் மற்றும் பின்தங்கிய நிலை: கருத்தியல், குறிப்பாக மத தத்துவத்தில், உலகம் மற்றும் சமூகத்தை புறநிலை யதார்த்தமாக புரிந்துகொள்வதைத் தடுக்கிறது என்று பத்தி வாதிடுகிறது. இந்த பார்வையின் உள்ளடக்கம் இறுதியில் பின்தங்கிய வகுப்பினரின் நலன்களுக்கு சேவை செய்கிறது மற்றும் சமூகத்தின் புறநிலை வளர்ச்சியை மறுப்பதில் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறது.

    கட்சி சார்புடைய தத்துவம்: மார்க்சியம் தத்துவம் கட்சி சார்புடையது என்று வலியுறுத்துவதாக குறிப்பிடப்படுகிறது. பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை பிரதிபலிக்கும் இயக்கவியல் பொருள்முதல்வாதம், கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவத்தின் வர்க்க சார்புகளை பிரதிபலிக்கிறது என்று பத்தி கூறுகிறது.

    மாறும் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்: இயற்கையைப் பற்றிய சட்டங்களின் ஆய்வு மாறும் பொருள்முதல்வாதம் என்று குறிப்பிடப்படுகிறது, அதே சமயம் சமூகத்தைப் பற்றிய சட்டங்களின் ஆய்வு வரலாற்று பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சொற்கள் மார்க்சிய தத்துவத்துடன் தொடர்புடையவை.

    இந்த பத்தியானது ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் தத்துவ நிலைகளின் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் பக்கச்சார்பான விளக்கத்தை அளிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு தத்துவக் கண்ணோட்டங்கள் உள்ளன, மேலும் தத்துவத் துறையானது பரந்த அளவிலான கருத்துக்கள், விவாதங்கள் மற்றும் விளக்கங்களை உள்ளடக்கியது.

    ReplyDelete
  5. நீங்கள் வழங்கிய பத்தியானது கருத்தியல் மற்றும் பொருள்முதல்வாதத்தைப் பற்றி தொடர்ந்து விவாதிக்கிறது, குறிப்பாக சமூகப் பிளவுகள், சமூகத்தை நியாயப்படுத்துவதில் தத்துவத்தின் பங்கு மற்றும் பல்வேறு தத்துவக் கண்ணோட்டங்களுடன் தொடர்புடைய சார்புகள். வழங்கப்பட்ட முக்கிய புள்ளிகளின் முறிவு இங்கே:

    Soul First vs. Nature as Primary: ஆன்மாவை முதலில் நம்புபவர்கள் புதிய தாராளவாதிகள் என்று குறிப்பிடுகிறார்கள், அவர்கள் இயற்கையின் தோற்றத்தை ஆன்மாவுக்குக் காரணம் என்று விளக்குகிறார்கள் மற்றும் உலகம் ஏதோ ஒரு வழியில் உருவாக்கப்பட்டதாகக் கருதுகிறார்கள். மறுபுறம், இயற்கையை முதன்மையாகக் கருதுபவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

    நிஜ உலகத்தைப் புரிந்துகொள்வது: மனித சிந்தனையால் நிஜ உலகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா என்ற கேள்வியைப் பத்தி விவாதிக்கிறது. கருத்தியலாளர்கள் வெவ்வேறு பதில்களை வழங்குகிறார்கள், சிலர் ஆம் என்றும் மற்றவர்கள் இல்லை என்றும் கூறுகின்றனர். புத்திஜீவிகள் உலகத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்று நம்புபவர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். ஹி, கான்ட் மற்றும் ஹெகல் போன்ற பல்வேறு தத்துவவாதிகள் இந்த தலைப்பு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    அகநிலை இலட்சியவாதம் மற்றும் புறநிலை இலட்சியவாதம்: அகநிலை இலட்சியவாதத்தின் இருப்பை, குறிப்பாக இந்திய மெய்யியலில், உலகில் உள்ள அனைத்தும் மனித நனவின் விளைபொருள்கள் என்று சிந்தனையாளர்கள் நம்பும் பத்தியை எடுத்துக்காட்டுகிறது. இந்த சூழலில் குறிப்பிடப்பட்ட முக்கிய நபர்களில் பெர்க்லி, மஹி, ஆதி சங்கரர், ரமணா மற்றும் விவேகானந்தர் ஆகியோர் அடங்குவர். புறநிலைவாதிகள் கவனிக்கப்பட்ட உலகம் மனித உணர்வுக்கு அப்பாற்பட்ட வெளிப்புற ஆதிக்கக் கருத்தின் விளைவாகும் என்று வாதிடுகின்றனர். பிளாட்டோ, ஹெகல், ராமானுஜரா மற்றும் மத்துவர் ஆகியோர் புறநிலை இலட்சியவாதத்துடன் தொடர்புடைய சிந்தனையாளர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.

    மார்க்சியப் பொருள்முதல்வாதம்: இப்பகுதி மார்க்சியப் பொருள்முதல்வாதத்தை முன்வைக்கிறது, இது இயற்கையும் சமூகமும் மனித செல்வாக்கிற்கு வெளியே புறநிலையாக இயங்குகிறது என்பதை வலியுறுத்துகிறது. இது தத்துவத்தை இயக்கவியல் பொருள்முதல்வாதம் (இயற்கையின் அறிவு) மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம் (சமூகத்தின் அறிவு) எனப் பிரிப்பதைக் குறிப்பிடுகிறது. டெமாக்ரிட்டஸ், சாங்க்யா, ஆதிபுத்திரன், உலகாயதர், சர்வாகர், வைசேஷிகர் போன்ற பொருள்முதல்வாத சிந்தனையாளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். மார்க்சியத்துடன் தொடர்புடைய மாறும் பொருள்முதல்வாத சிந்தனையாளர்களில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஜார்ஜ் தாம்சன், தேவிபிரசாத் சட்டோபதியாயா, கோசாம்பி, ஆர்.கே.சர்மா, நா வானமாமலை மற்றும் கைலாசபதி ஆகியோர் அடங்குவர்.

    கட்சி சார்புடையதாக தத்துவம்: மார்க்சியம், தத்துவம் கட்சி சார்புடையது என்பதை வலியுறுத்துவதாக முன்வைக்கப்படுகிறது, இயக்கவியல் பொருள்முதல்வாதம் பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை பிரதிபலிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவத்தின் வர்க்க சார்பு இந்தக் கண்ணோட்டத்தில் உள்ளது என்று அது அறிவுறுத்துகிறது.

    கேள்விகளைத் தவிர்ப்பது: பொருள்முதல்வாதம் மற்றும் கருத்தியல்வாதத்தால் எழுப்பப்பட்ட கேள்விகளைத் தவிர்க்க முயற்சிக்கும் மற்றொரு போக்கைப் பத்தி குறிப்பிடுகிறது, உயர்ந்த மற்றும் அதற்கு அப்பாற்பட்ட முன்னோக்கைக் கோருகிறது.

    இந்த பத்தியில் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது மற்றும் தத்துவ நிலைகளின் ஒரு குறிப்பிட்ட விளக்கத்தை முன்வைக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். துறையில் பல்வேறு தத்துவக் கண்ணோட்டங்கள் மற்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன, மேலும் இந்த பத்தியில் முழு தத்துவ சிந்தனையும் உள்ளடக்கப்படவில்லை.

    ReplyDelete