Monday 22 July 2019

10) மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தின் முக்கியத்துவம் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


மார்க்சிய-லெனினியம் தத்துவஞானத்தில் மெய்யான புரட்சியை நிறைவேற்றியிருக்கிறது. அது முற்றிலும் புதிய உலகக் கண்ணோட்டத்தை, பாட்டாளி வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டத்தை, மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தைப் படைத்திருக்கிறது.

உலகம் பொருளாயதமான இயல்பைக் கொண்டது, அதில் எல்லாமே மாறிக் கொண்டும் வளர்ச்சியடைந்து கொண்டும் இருக்கின்றன, கீழ்நிலையானவற்றிலிருந்து உயர் நிலையானவற்றுக்கு, பழமையிலிருந்து புதுமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்று நிரூபிக்க முனைந்த ஒரே விஞ்ஞானத் தத்துவம் மார்க்சிய-லெனினியத் தத் துவஞானமே. அது மற்ற எல்லா விஞ்ஞானங்களின் முடிவுகளையும் தொகுப்பதுடன் அவற்றுக்கு அறிதலைப் பற்றிய இயக்கவியல் முறையை, நிகழ்வுகளை ஆராய்வதற்குச் சரி யான அணுகுமுறையைத் தருகிறது.

மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் உலகத்தைப் பற்றிய சரியான சித்திரத்தைத் தருவதன் மூலம், இயற்கை மற்றும் சமூகத்தின் வளர்ச்சியின் அதிகப் பொதுவான விதிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் புரட்சிகரமான நடவடிக்கைக்கு சக்தி வாய்ந்த கருவியாக, ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ் வின் எல்லாவிதமான வடிவங்களையும் எதிர்த்துப் போராடி நியாயமான, புதிய சமூகத்தை நிர்மாணிக்கின்ற கோடிக் கணக்கான மக்களின் உலகக் கண்ணோட்டமாக இருக்கிறது. மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் மார்க்சியக் கட்சிகளின் போர்த்திட்டம் மற்றும் செயல்தந்திரத்தின் தத்துவ அடிப்படையாக இருக்கிறது.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

9) வரலாற்றில் பெருந்திரளான மக்களின் பாத்திரமும் தனிநபருடைய பாத்திரமும் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உழைக்கும் மக்கள் பொருளாய்தச் செல்வத்தைப் படைப்பதில் தலைமையான பாத்திரத்தை வகிக்கிறார்கள். அவர்கள் உழைப்புக் கருவிகளைச் செய்கிறார்கள், அவற்றை அபிவிருத்தி செய்கிறார்கள், தம்முடைய அனுபவத்தையும் அறிவையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மாற்றிக் கொடுக்கிறார்கள். உழைக்கும் மக்கள் உலக மக்களுக்கு உணவளிக்கிறார்கள், உடையளிக்கிறார்கள், வாழ்க்கையிலுள்ள சிறந்த பொருட்கள் அனைத்தையும் படைக்கிறார்கள்.

உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி வரலாற்றையும் படைக்கிறார்கள்; ஏனென்றால் அவர்கள்தான் முன்னேற்றத்தின் பிரதான இயக்கு சக்தி. அடிமை உடைமை முறையும் நிலப்பிரபுத் துவமும், தாமாகவே அழிந்து விடவில்லை, ஒடுக்குபவர்களை எதிர்த்து உழைக்கின்ற ஆண்களும் பெண்களும் நடத்திய கடுமையான புரட்சிகரப் போராட்டத்தின் விளைவாக அவை அழிந்தன. பெருந்திரளான மக்களின் படைப்பாற்றல் ருஷ்யாவில் முதலாளித்துவத்தை ஒழித்து மாபெரும் அக் டோபர் சோஷலிசப் புரட்சியின் போது குறிப்பிடத்தக்க வேகத்துடன் வெளிப்பட்டது.

மக்கள் பொருளாயதச் செல்வத்தை மட்டுமன்றி பொரு ளாய்தம் இல்லாத, ஆன்மிக, அறிவு மதிப்புகளையும் படைக் கிறார்கள். அறிவியல், இலக்கியம், கலைகள் பெருந்திரளான மக்களுடைய முயற்சிகளினால்தான் வளர்ச்சியடைந்திருக் கின்றன.

வரலாற்றில் தனிமனிதன் வகிக்கின்ற பாத்திரம் என்ன? பெரும்பான்மையினரை ஒடுக்குவதற்கு சிறுபான்மையினரது உரிமையை நியாயப்படுத்துவதற்காக முதலாளித்துவ சித்தாந்திகள் மக்களுடைய உணர்வில் கட்டுப்பாடற்ற கும்பல் மற்றும் ''தலைவர்' என்னும் பிற்போக்கான தத்துவத்தை விதைப்பதற்கு முயல்கிறார்கள். அரசர்கள், ராணுவத் தலைவர்கள், சட்ட கர்த்தாக்கள் ஆகியோரைப் போன்ற தலைசிறந்த மனிதர்களே வரலாற்றைப் படைக் கிறார்கள்; அவர்கள் தம்முடைய விருப்பத்துக்கேற்ப வரலாற்றுப் போக்கைத் திருப்ப முடியும் என்னும் அனு மானத்தை இத்தத்துவம் அடிப்படையாகக் கொண்டிருக் கிறது. உழைக்கும் மக்கள் திரளினர் செயலற்றவர்கள், வரலாற்று ரீதியில் சக்தியற்றவர்கள், கட்டுப்பாடற்ற கும்பல் என்று இத்தத்துவம் காட்டுகிறது.

மனித சமூகத்திலிருக்கின்ற எல்லாமே ஒரு சிலரால் உருவாக்கப்பட்டவை என்ற தத்துவத்தை மார்க்சிய (லெனினியம் தகர்த்து விட்டது. எனினும் வரலாற்றில் தனிநபர் வகிக்கின்ற பாத்திரத்தை மார்க்சிய-லெனினியம் முற்றிலும் புறக்கணிக்கிறது என்பது இதன் பொருளல்ல. மனித சமூக வரலாற்றில் எந்த வர்க்கமும் அதன் மாபெரும் அரசியல் தலைவர்களை உருவாக்காமல், அரசியல் இயக்கத்தை அமைத்து அதற்குத் தலைமை தாங்குகின்ற தகுதியுடைய பிரதிநிதிகள் இல்லாமல் தலைமையான நிலையை ஒருபோதும் அடைந்ததில்லை. மக்களுடைய தேவைகளையும் முன்னுரிமைகளையும் புரிந்துகொண்ட முற் போக்கான தலைவர்கள் சமூகத்திற்கு முன்புள்ள பிரச்சினை களுக்கு மிகச் சிறந்த தீர்வைக் கண்டுபிடித்து அதன் மூலம் வரலாற்று நிகழ்வுப் போக்குகளை விரைவுபடுத்துகிறார்கள். அதற்கு எதிர்மாறாகப் பிற்போக்காளர்கள் இந்த நிகழ்வுப் போக்குகளின் வேகத்தைக் குறைக்கிறார்கள், சமூக வளர்ச்சி யைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.

தலைசிறந்த மனிதர்கள் பெருந்திரளான மக்களுக்கு, சமூக வர்க்கங்களுக்குத் தலைவர்களாக இருக்கிறார்கள். இந்த வர்க்கங்களும் சமூகப் பிரிவுகளும் தருகின்ற ஆதர வினால் அவர் கள் வலிமை அடைகிறார்கள். இத்தலைவர் கள் எவ்வளவுதான் அறிவாளிகளாக, உண்மையாகவே எவ்வளவு சிறந்தவர்களாக இருந்தாலும் இந்த ஆதரவு மட்டும் இல்லையென்றால் அவர்கள் வரலாற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சக்தியற்றவர்களாக இருப் பார்கள். பெருந்திரளான மக்களுடைய நடவடிக்கைகளி லிருந்தே தலைவர்கள் தம்முடைய பலத்தைப் பெறுகிறார்கள்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

8) சமூக உளவியலும் சித்தாந்தமும்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


சமூக உளவியலும் சித்தாந்தமும். சமூக உணர்வு இரண்டு துறைகளிலும் இரண்டு மட்டங்களிலும் இருக்கிறது. சமூக உளவியல் மற்றும் சித்தாந்தம் அத்துறைகளாகும்.

சமூக உளவியல் என்பது அன்றாட வாழ்க்கையின் தாக்கத்தில் சமூகப் பிரிவுகளிலும் வர்க்கங்களிலும் (தேசிய இனங்களில் கூட) தோன்றுகின்ற உணர்ச்சிகள், எண்ணங் கள், விருப்பார்வங்கள், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், மனோநிலைகள் ஆகியவற்றின் மொத்தமாகும். சித்தாந்தம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்குரிய அரசியல், சட்டவியல், தார்மிக, தத்துவஞான, சமய மற்றும் அழகியல் கருத்துகளின் மொத்தம் ஆகும்.

சமூக உளவியல் என்பது மக்கள் தம்முடைய சமூக வாழ்நிலையைப் புரிந்து கொள்வதன் ஆரம்பக் கட்டமாகும். அதற்கு மாறுபட்ட முறையில் சித்தாந்தம் சமூக உணர்வின் உயர்ந்த மட்டமாக, வாழ்க்கையின் பொருளாயத நிலைமை களை மக்கள் இன்னும் அதிக ஆழமாகப் புரிந்து கொள்வதாக இருக்கிறது. சித்தாந்தம் வர்க்கங்கள், தேசிய இனங்கள், சமூகப் பிரிவுகளுக்கு இடையிலான உறவுகளின் சாராம் சத்தை வெளிப்படுத்த வேண்டும், இந்த உறவுகளைத் தொடர வேண்டிய அல்லது மாற்ற வேண்டிய அவசியத்தை ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நிலையிலிருந்து நிறுவ வேண்டும். தன்னியல்பாகத் தோன்றுகின்ற உளவியலைப் போலன்றி சித்தாந்தம், சித்தாந்திகள் என்றழைக்கப்படும் ஒரு சிறப்புக் குழுவினருடைய பணியின் விளைவாகும்.

வர்க்க சமூகத்தில் சமூக உளவியலும் சித்தாந்தமும் தனிவகையான வர்க்கத் தன்மையைக் கொண்டிருக்கின்றன, ஒவ்வொரு வர்க்கமும் அதற்குரிய உளவியலையும் சித் தாந்தத்தையும் கொண்டிருக்கிறது; அவை சமூக உற்பத்தி அமைப்பில் அதன் இடத்தைப் பிரதிபலித்து அதன் தேவைகளையும் நலன் களையும் வெளியிடுகின்றன. இதைப் பற்றி லெனின் பின்வருமாறு எழுதினார்: "நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவ தொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போ தும் இருப்பார்கள். (வி. இ. லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 1, பக்கம் 109. 110)

தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம் மார்க்சிய-லெனினி யம் ஆகும். அதன் வர்க்கம் உள்ளடக்கமும் இலட்சியங்களும் முந்திய எல்லா சித்தாந்தங்களிலிருந்தும் முழுமையாக வேறுபட்டிருக்கிறது. முதலாவதாக, மார்க்சிய-லெனினியம் சுரண்டுகின்ற வர்க்கத்தின் நலன்களுக்குப் பாடுபடவில்லை, அது தொழிலாளி வர்க்கத்தின், எல்லா உழைக்கும் மக்களின் நலன்களுக்கும் பாடுபடுகிறது. இரண்டாவதாக, மார்க்சிய-லெனினியம் சுரண்டலை ஒழித்துப் புதிய சமூகத் தை நிர்மாணிக்க வேண்டிய அவசியத்தைத் தத்துவ ரீதியில் நிறுவியிருக்கிறது. மூன்றாவதாக, மார்க்சிய-லெனினியம் பெருந்திரளான மக்களின் மிகச் சிறந்த நலன்களுக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற முறையில் உலகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதில், நீதி, சுதந்திரம், மக்கள் மற்றும் தேசிய இனங்களின் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்துவதில் சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கிறது.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

7) சமூக உணர்வு மற்றும் சித்தாந்தம் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


சமூக உணர்வின் பாத்திரம். சமூக உணர்வு என்பது சமூகத்தில் இருக்கின்ற, மக்களுடைய வாழ்க்கையின் பொருளாயத நிலைமைகளைப் பிரதிபலிக்கின்ற கருத்துகள், தத்துவங்கள், எண்ணங்கள், கண்ணோட்டங்கள், உணர்ச்சிகள், பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளின் மொத்தம் என்று மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் வரையறுக்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சமூக உணர்வு சமூக வாழ்நிலையை அல்லது மக்களுக்கு இடையிலுள்ள பொருளாயத உறவுகளைப் பிரதிபலிக்கிறது. சமூக வாழ் நிலை என்பது மக்களுடைய பொருளாயத வாழ்க்கையையும் பொருளாய்தச் செல்வத்தின் உற்பத்தி நிலைமைகளை யும் குறிக்கிறது என்றால் "சமூக உணர்வு”' என்னும் கருத்தமைப்பை அவர்களுடைய அறிவு சார்ந்த நடவடிக் கைக்கும் கையாள முடியும்.

சமூக வாழ்நிலை சமூக உணர்வின் உள்ளடக்கத்தையும் அதன் வர்க்க சாராம்சத்தையும் நிர்ணயிக்கிறது. அதே சமயத்தில் சமூக உணர்வு செயலற்றதல்ல, அதற்கு முதலில் உயிர் கொடுத்த சமூக வாழ்நிலையின் மீது தாக்கம் செலுத்துகிறது.

இத்தாக்கம் சமூக உணர்வின் தன்மையை, அதாவது அதிலடங்கியிருக்கின்ற கருத்துகள், தத்துவங்கள், கண்ணோட்டங்களைப் பொறுத்திருக்கிறது. இந்த சமூகத் தத் துவங்களும் கருத்துகளும் உள்ளடக்கத்தில் இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவை. ஒரு பக்கத்தில் பழமையானவை, பிற்போக்கானவை; மறு பக்கத்தில் புதியவை, முற்போக்கானவை, பழைய கருத்துகளும் தத்துவங்களும் மறைந்து கொண்டிருக்கின்ற வர்க்கங்களின் நலன்களைப் பிரதிபலித்து வெளியிடுகின்றன, ஆகவே அவை சமூக வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சியின் மீது பாதகமான தாக்கத்தைக் கொண் டிருக்கின்றன, ஏனென்றால் அவை இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகின்றன. இதிலிருந்து மாறுபட்ட முறையில் புதிய, முற்போக்கான கருத்துகளும் தத்துவங்களும் முற்போக்கான வர்க்கங்கள், சமூகப் பிரிவுகளின் நலன்களைப் பிரதிபலிக்கின்றன; அதன் விளைவாக அவை சமூக முன் னேற்றத்தைத் தூண்டுகின்றன.

உணர்வு சமூக உணர்வு, தனிமனித உணர்வு என்னும் இரண்டு ரகங்களைக் கொண்டிருக்கிறது. தனிமனித உணர்வு என்பது ஒரு தனி நபருடைய ஆன்மிக உலகமாகும்; அவருடைய சிந்தனைகள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் விருப்பார்வங்கள். அது ஒரு குறிப்பிட்ட மனித ருடைய வாழ்க்கையில், அவருடைய செய்முறை நடவடிக்கையின் நிகழ்வுப் போக்கில் உருவாகி அவருடைய இருத்த லின் பொருளாயத நிலைமைகளைப் பிரதிபலிக்கிறது. தனி மனித உணர்வு என்பது ஒரு தனி நபருடைய செய்முறை அனுபவம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் வெளி யீடாகும்.

மக்களுடைய பொது நலன்களை வெளியிடுகின்ற கருத்து கள், கண்ணோட்டங்கள், உணர்ச்சிகள், விருப்பார்வங்கள் சமூக உணர்வாக இருக்கின்றன. ஒரு வர்க்க சமூகத்தில் இவை ஒரு வர்க்கம், சமூகப் பிரிவின் அல்லது ஒரு மக்கள் கூட்டின் பொது நலன்களாக இருக்கின்றன.

உணர்வின் இந்த இரண்டு ரகங்களும் பின்னிப் பிணைந் திருக்கின்றன; அவை இயக்கவியல் ஒற்றுமையில் இருக்கின்றன. சமூக உணர்வு தனிமனித உணர்வின் மூலமாகவே வெளிப்படுகிறது; ஏனென்றால் எந்த ஒரு நபரும் சமூகத்தில் வாழ்கிறார், உழைக்கிறார், ஒரு குறிப்பிட்ட வர்க்கம், தேசிய இனம் மற்றும் சமூகக் கூட்டைச் சேர்ந்தவராக இருக்கிறார்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

6) அரசு என்பது என்ன? – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


அரசு. அரசு என்பது என்ன? அது எப்படித் தோன்றியது? அரசின் தோற்றமும் அதன் இருத்தலும் வர்க்கங்கள் இருத்தலுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. பூர்விகக் கூட்டு வாழ்க்கைச் சமூகத்தில் வர்க்கங்கள் இல்லை, அங்கே அரசும் இல்லை. ஆனால் சமூகத்தில் தனியுடைமை தோன்றிய பொழுது, சமூகம் பகைமையான வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்ட பொழுது அரசு உருவாகியது.

பகையியல் சமூகங்கள் எல்லாவற்றிலும் ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற் குரிய பொறியமைவாக அரசு இருக்கிறது. சுரண்டல்காரர் கள் உழைக்கும் மக்களைத் தமக்கு அடிபணியச் செய்வதற் குரிய கருவியாகவும் அது இருக்கிறது. இது சுரண்டல் அரசின் வர்க்க சாராம்சம் ஆகும். சுரண்டல்காரர்கள் தம்முடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு ராணுவம், நீதிமன்றங்கள், சிறைகள், தண்டிக்கின்ற அமைப்புகள் ஆகியவற்றை உபயோகிக்கிறார்கள். அவர்கள் நேரடியான ஒடுக்குமுறை அமைப்புகளை உபயோகிப்பதுடன் எல்லா சித்தாந்த ஒடுக்குமுறைச் சாதனங்களையும் (கல்வி நிலையங்கள், பத்திரிகைகள், வானொலி, திரைப்படங்கள், இதர தகவல் தொடர்புச் சாதனங்களை) உபயோகிக்கிறார்கள்.

சோஷலிசப் புரட்சி சுரண்டல் அரசை அகற்றி விட்டு சோஷலிச அரசைக் கொண்டு வருகிறது. அது கீழே தள்ளப்பட்ட சுரண்டல்காரர்கள் மீது தொழிலாளி வர்க்கத் தின், சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினருடைய ஆதிக்கத்தின் அரசியல் ஸ்தாபனமாக இருக்கிறது. சோஷலிச அரசின் முக்கியமான கடமை ஒடுக்குமுறை இல்லாத அரசியல் அமைப்பை, உழைக்கும் மக்கள் மத்தியில் சமத் துவமான சமூக அமைப்பை நிர்மாணிப்பதாகும்.

அரசுக்குப் பல வடிவங்களும் ரகங்களும் உள்ளன. அரசு எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்கிறது என்பதைப் பொறுத்து அதன் ரகம் நிர்ணயிக்கப்படுகிறது, அது அடிமை உடைமையாளர்களுக்குச் சேவை செய்தால் அது அடிமை உடைமை அரசு ஆகும், நிலப்பிரபுத்துவ நிலக்கிழார்கள் அதிகாரத்தை வகித்தால் அது நிலப்பிரபுத்துவ அரசு ஆகும். முதலாளிகள் முதலாளித்துவ அரசை நடத்துகிறார் கள். அரசின் இம்மூன்று ரகங்களிலும் சுரண்டல்காரர் சுளின் ஆட்சி குணாம்சமாகும்; அவர்களது வர்க்க சாராம் சத்தை இவை வெளிப்படுத்துகின்றன்.

சோஷலிசத்தின் நிர்மாணமும் அமைப்பு என்ற முறையில் அதைத் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்தலும் அரசின் புதிய ரகத்தினால், சோஷலிச அரசினால் நிறைவேற்றப்படு இன்றன. புதிய சமூகம் முதலாளித்துவத்திலிருந்து உடனடியாக, நேரடியாக வெளிவருவதில்லை. "... முதலாளித்துவ சமுதாயத்துக்கும் சோஷலிச சமுதாயத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாய்ப் புரட்சிகர மாற்றமடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணையாய் அரசியல் இடைக்கால கட்டமும் ஒன்று உள்ளது; இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரம் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது'' என்று கார்ல் மார்க்ஸ் எழுதினார். (மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் சமூகம், மாஸ்கோ , முன்னேற்றுப் பதிப்பகம், 198.7, பக்கங்கள் 56-57.)

சோஷலிசம் நிர்மாணிக்கப்பட்ட பிறகு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு பொது மக்களுடைய அரசாக, தொழிலாளி வர்க்கம் தலைமையான பாத்திரத்தை வகிக் கின்ற அனைத்து மக்களின் அரசியல் ஸ்தாபனமாக மாற்றமடைகிறது.

அரசின் ரகம் அதன் வர்க்க சாராம்சத்தை எடுத்துக் காட்டுகிறது; அதன் வடிவம் அது எந்த அரசாங்க ரகம் (முடியாட்சி, குடியரசு, இதரவை) என்பதையும் அதன் அரசியல் ஆட்சி முறையையும் (மிதவாத ஜன நாயகம், ராணுவ-பாசிச சர்வாதிகாரம்) அதன் நிர்வாகக் கட்டமைப்பையும் (ஒற்றையாட்சி, கூட்டாட்சி) எடுத்துக் காட்டுகிறது.

முதலாளித்துவ அரசுகள் பல வடிவங்களைக் கொண் டிருக்கின்றன; ஆனால் அவற்றின் சாராம்சம் ஒரே மாதிரி யானதே. அவை அனைத்துமே மூலதன ஆதிக்கத்தின் கருவிகளே. முதலாளித்துவ அரசின் வடிவம் எப்படியிருந் தாலும், அதன் பெயர் எப்படியிருந்தாலும் அதன் சுரண்டு கின்ற சாராம்சத்தை, ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற கருவி என்னும் பாத்திரத்தை அதனால் மாற்ற முடியாது. ''முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பல்வேறாக இருக்கின்றன; ஆனால் அவற்றின் சாராம்சம் ஒன்றே. இந்த அரசுகள் எல்லாமே, அவற்றின் வடிவங்கள் எப்படியிருந்தாலும், கடைசிப் பகுப்பாய்வில் தவிர்க்க இயலாதபடி முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகார மாகவே இருக்கின்றன'' என்று லெனின் எழுதினார். (# வி. இ. லெனின், நூல்: திரட்டு, இரண்டாம் பாகம், பக்கம் 2.55,) முதலாளித்துவ அரசு உழைப்பின் மீது மூலதனம் ஆதிக்கம் செலுத்துகின்ற கருவியாகும்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

5) வர்க்கப் போராட்டம்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


வர்க்கப் போராட்டம் - சமூக வளர்ச்சியின் தோற்றுவாய். வர்க் கங்கள் என்றால் என்ன, அவை எப்படித் தோன்றின் என்னும் கேள்விகளை மக்கள் நெடுங்காலமாகவே சிந்தித்து வந்திருக்கிறார்கள். வர்க்க ஏற்றத்தாழ்வு நெடுங்காலத் திலிருந்தே இருந்து வந்திருக்கிறது, அது ஒருபோதும் மறையாது, கடவுள் செல்வர்களையும் ஏழைகளையும் நிரந் தரமாகப் படைத்திருக்கிறார் என்று சுரண்டுபவர்கள் போதிக்கிறார்கள்.

சமூகத்தில் ஏழைகள், செல்வர்கள், சுரண்டுபவர்கள், சுரண்டப்படுபவர்கள் என்னும் பிரிவினை வர்க்கப் பிரிவினை ஆகும். சமூகத்தில் ஒரு பகுதியினர் நிலத்தை உடைமையாக வைத்திருக்கிறார்கள், மறு பகுதியினர் அந்த நிலத்தில் பாடுபடுகிறார்கள் என்றால் அங்கே இரண்டு பகை வர்க்கங் கள் - நிலக்கிழார்கள் மற்றும் விவசாயிகள் - இருக்கின்றன என்று அர்த்தமாகும். மக்களில் ஒரு பிரிவினர் பாக்டரிகளை யும் தொழிற்சாலைகளையும் உடைமையாகக் கொண்டிருக் கின்ற பொழுது, மறு பிரிவினர் அவற்றில் பாடுபடுகின்ற பொழுது நாம் முதலாளிகள், தொழிலாளர்கள் என்னும் இரண்டு வர்க்கங்களைப் பார்க்கிறோம். முதலாளிகள் தொ ழிலாளர்களுடைய வருமானத்தில் கணிசமான பகுதியை சுவீகரிக்கிறார்கள். உற்பத்திச் சாதனங்களின் பால் தமக்கு இருக்கின்ற வேறுவிதமான உறவை ஆதாரமாகக் கொண்டு மக்களில் ஒரு பிரிவினர் மற்றவர்களுடைய உழைப்பை சுவீகரித்துக் கொள்கின்ற பொழுது அந்த மக்கட் பிரிவுகள் வர்க்கங்கள் எனப்படும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் உற்பத்திச் சாதனங்கள் பாலான தம்முடைய உறவினால், உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் தாங்கள் வகிக்கின்ற பாத்திரத்தினால், பொதுச் செல்வத்தை சுவீகரிக்கின்ற முறையினால், அதன் அளவினால் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்ற மக்கட் குழுக்கள் வர்க்கங்கள் ஆகும்.

வர்க்கங்கள் எப்பொழுதும் இருந்திருக்கின்றனவா, அவை எப்பொழுதும் இருக்குமா? வர்க்கங்கள் இல்லாத காலம் ஒன்று இருந்தது. பூர்விக சமூக அமைப்பில் மக்கள் சமத்துவ உரிமைகளைக் கொண்டு சிறு சமூகங்களாக வாழ்ந்தார்கள். அவர்கள் கூட்டாக உழைத்தார்கள், தங்களிடமிருந்த எல்லா வற்றையும் பொதுவாக வைத்திருந்தார்கள். அவர்களுக்கு என்ன கிடைத்தாலும் அது எல்லோருடைய உடைமையாக வும் இருந்தது. எல்லோரும் அதைச் சமமாகப் பகிர்ந்து கொண்டனர். ஆனால் பொருளாதார வளர்ச்சி மிகவும் கீழ்நிலையில் இருந்தபடியால் மனிதனுக்கு மிகக் குறைவான உணவே கிடைத்தது; அது அவன் உயிர் வாழ்வதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இத்தகைய நிலைமை களில் ஒரு நபர் மற்றொருவரைச் சுரண்டி அவருடைய உழைப்பில் வாழ்க்கை நடத்த முடியாது.

கம்யூனிசத்தின் கீழ் வர்க்கப் பிரிவினைகள் மறைந்துவிடும். ஒரு சமயத்தில் லெனின் சொற்பொழிவாற்றச் சென்ற அரங்கத்தில் “தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி நிரந்தரமாக இருக்கும்'' என்று எழுதப்பட்ட சுவரொட் டியைப் பார்த்தார். இந்தக் கோஷம் தவறானது என்பதை லெனின் அக்கூட்டத்தில் விளக்கினார். தொழிலாளர்களது இலட்சியம் வர்க்கம் என்ற முறையில் தங்களை நிரந் தரமாக்கிக் கொள்வது அல்ல, வர்க்க வேறுபாடுகளை ஒழித்து, வர்க்கமற்ற சமூகத்தை, கம்யூனிசத்தை நிர் மாணிப்பதே அவர்களுடைய இலட்சியம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

வர்க்கங்கள் முதலில் எப்பொழுது, எப்படித் தோன்றின? வர்க்கமற்ற பூர்விக சமூகம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவியது; அக்காலத்தில் மெதுவாக, ஆனால் தொடர்ச்சியாக உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடைந்து பூர்விக சமூகத்தின் வாழ்க்கை முறை மாறியது. காலப் போக்கில் பூர்விக சமூகத்தில் படி.வரிசை நிலை ஏற்பட்டது. சிலர் செல்வர்களானார்கள்; நிலத்தை, கால் நடைகளை, உற்பத்திக் கருவிகளைக் கைப்பற்றித் தம்முடையதாக்கிக் கொண்டார்கள். உடைமை இல்லாத மற்றவர்கள் செல்வர் களுக்குப் பணிந்து உழைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது; அவர்கள் படிப்படியாக செல்வர்களுடைய அடிமைகளாக மாறினார்கள்.

நிலம், காடுகள், நீர், உழைப்புக் கருவிகளில் தனியுடைமை இப்படி உருவாயிற்று. பிரெஞ்சுத் தத்துவஞானியும் எழுத்தாளரும் அறிவியக்கவாதியுமான ழான் மாக் ரூஸேT (1712-1778) முதன்முதலாக நிலத்தில் வேலியமைத்து "இது என்னுடைய நிலம்!'' என்று கூறியவர் களைப் பற்றிக் கடுஞ்சீற்றத்துடன் பேசினார். தனியுடைமையும் அதன் விளைவாகிய ஆபத்துகளும் துன்பங்களும் சில தனி நபர்களது தீய எண்ணங்களால் தோன்றின என்று அவர் கருதியது ஓரளவுக்கு வெகுளித்தனமே. எனினும் அதில் சிறிதளவு உண்மை உண்டு. தனியுடைமை வர்க்கங் களைத் தோற்றுவித்தது; சமூகத்தை ஆண்டாலும், அடிமை யும், ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும் என்ற பகைமை யான இரண்டு வர்க்கங்களாகப் பிரித்தது.

ஒவ்வொரு பகையியல் சமூகத்திலும் அடிப்படையில் எதிரெதிரான இரண்டு வர்க்கங்கள் இருப்பதும் அவை ஒன்றையொன்று எதிர்த்துப் போராடுவதும் குணாம்சங் களாகும். உதாரணமாக, அடிமை உடைமைச் சமூகத்தில் அடிமைகளும் அடிமை உடைமையாளர்களும் இருந்தார்கள்; நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலக்கிழார்களும் விவசாயிகளும் இருந்தார்கள்; முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகள், தொழிலாளர்கள் என்னும் இரண்டு எதிர்நிலையான வர்க்கங்கள் இருக்கின்றன. மனித சமூகம் பகைமையான வர்க் கங்கள் தோன்றிப் பிளவுற்ற கால் முதலாகவே மனித சமூக வரலாறு என்பது ஒடுக்குபவர்களை எதிர்த்து ஒடுக்கப் பட்டவர்களின் தீவிரமான போராட்டத்தின் வரலாறாக இருந்தது. சோஷலிசம் வெற்றியடைகின்ற வரை இந்த நிலை நீடித்தது. சுரண்டப்படுகின்ற வர்க்கங்கள் தம்முடைய விடுதலைக்குப் போராடுகின்றன. சுரண்டுபவர்கள் தம் முடைய செல்வத்தையும் அதிகாரத்தையும் இழக்க விரும்புவது இல்லை. அவர்கள் மெய்யாகவே என்ன செய்கிறார்கள் என்றால் உழைக்கும் மக்களை இன்னும் அதிகமாக அடிமைப்படுத்தி அதன் மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கே பாடுபடுகிறார்கள்.

''சுதந்திரம் உடை யோனும் அடிமையும், பட்ரீஷிய உயர்குலச் சீமானும் பிலேபியப் பாமரக் குடியோனும், நிலப்பிரபுவும் பண்ணை யடிமையும், கைவினைச் சங்க ஆண்டானும் கைவினைப் பணியாளனும், சுருங்கக் கூறுமிடத்து ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண் டோராய், ஒரு நேரம் மறைவாகவும் ஒரு நேரம் பகிரங் கமாகவும் இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது போராடும் வர்க்கங்கள் து பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று" என்று மார்க்சும் எங்கெல்சும் எழுதினார்கள். (கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், தொகுதி 1, பக்கம் 191.)

சுரண்டல் அமைப்பின் கீழ் வர்க்கங்களுக்கு இடையில் போராட்டம் சமூக வளர்ச்சியின் விதியாக, சமூக முன்னேற்றத்தின் சக்தி வாய்ந்த இயக்கு சக்தியாக இருக்கிறது. சுரண்டப்படுகின்ற வர்க்கங்களின் புரட்சிகரமான போராட்டம் பழைய, காலாவதியான எல்லாவற்றையும் அகற்று கிறது, அதே சமயத்தில் புதியனவற்றுக்கு, முற்போக் கானவற்றுக்குக் களத்தைச் சுத்தமாக்குகிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் அடிமை முறை நிலவிய பொழுது ஸ்டார்ட்ட கஸ்) தலைமையில் அடிமைகள் கலகம் செய்தது அத்தகைய போராட்டங்களில் ஒன்றாகும். 16ஆம் நூற்றாண்டில் ஜெர் மனியில் நடைபெற்ற மாபெரும் விவசாயிகள் போர், 14-15ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சில் நடைபெற்ற ஜாக் கெரி, 18ஆம் நூற்றாண்டில் ருஷ்யாவில் (நிலப்பிரபுத்துவ அமைப்பின் கீழ்) புகச்சோவ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் போர், பிரான்சில் முதலாளித்துவ அமைப்பை நிறுவிய, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சி, உலகத்தில் சோஷலிச சகாப்தத்தைத் தொடக்கிய ருஷ்யாவின் மாபெரும் அக் டோபர் சோஷலிசப் புரட்சி ஆகியவை மற்ற உதாரணங் களாகும்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

4) சமூக-பொருளாதார உருவாக்கம்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


சமூக-பொருளாதார உருவாக்கம். சமூக-பொருளாதார உரு வாக்கம் என்பது சமூகத்தின் ஒரு ரகம்; ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய பிரத்யேகமான விதிகளைக் கொண்டு இயங்குகின்ற, வளர்ச்சி படைகின்ற ஒருங்கிணைந்த சமூக அமைப்பு அது.

உற்பத்தி முறையின் முக்கியமான அம்சம் அது எல்லாக் காலத்திலும் மாறிக் கொண்டும் வளர்ச்சியடைந்து கொண்டும் இருக்கிறது என்பதாகும். உற்பத்தியில் மாற்றுங்களும் வளர்ச்சியும் உற்பத்திச் சக்திகளின் மாற்றங்களுடன் தொடங்குகின்றன என்பது முக்கியமாகும். இம்மாற்றங் களைத் தொடர்ந்து உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பின்னர் அவை மொத்த சமூக அமைப்பின், சமூகத்தின் மேற்கட்டுமானமாக இருக்கின்ற சமூகக் கருத்துகளின், அரசியல் கண்ணோட்டங்களின் மாற்றத்துக்கு இட்டுச் செல்கின்றன.

மேற்கட்டுமானம் பொருளாதார அடிப்படையிலிருந்து (உற்பத்தி, பரிவர்த்தனை மற்றும் வினியோகச் செயல்முறையில் நிலவுகின்ற உற்பத்தி உறவுகளின் மொத்தம்) சுயேச்சையாக இருப்பது மட்டுமின்றி, அடிப்படையின் மீதும் தாக்கம் செலுத்துகிறது என்று மார்க்சியத்தின் மூலவர்கள் வலியுறுத்தினார்கள், "அரசியல், சட்டவியல், தத்துவஞானம், சமயம், இலக்கியம், கலை, இதரவற்றின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் ஒன்றின் மீதொன்றும் பொருளாதார அடிப்படை மீதும் தாக்கம் செலுத்துகின்றன. பொருளாதார நிலைமைதான் காரணம் மற்றும் சுறுசுறுப்பான ஒரே சக்தி, மற்றவை அனைத்தும் செயலற்ற தாக்கத்தையே கொண்டிருக்கின்றன. என்று ஒருவர் கருத முடியும். இல்லை, அதற்கு மாறாக, இடைச்செயல் பொருளாதார அவசியத்தின் அடிப்படையில் - முடிவில் அது எப்பொழுதும் தன்னை நிறுவிக் கொள்கிறது - நடைபெறுகிறது” என்று எங்கெல்ஸ் எழுதினார். (Marx, F, Engels, Selected Correspondence, pp. 441-442.)

மார்க்சிய-லெனினியம் சமூக வாழ்க்கையில் எல்லா அம் சங்களின் இடைச்செயலைப் பகுப்பாய்வு செய்வதிலிருந்து முன்னேறுகிறது; இந்த இடைச்செயலில் பொருளாய்தச் செல்வத்தின் உற்பத்தி முறையை முக்கியமான, நிர்ணயகரமான, தலைமையான சக்தி என்று கருதுகிறது.

ஒரு சமூக-பொருளாதார உருவாக்கத்தை மற்றொரு சமூக-பொருளாதார உருவாக்கம் ஏன் அகற்றுகிறது. எப்படி அகற்றுகிறது?

உற்பத்தி முறையில் மிகவும் சுறுசுறுப்பான அம்சம் உற்பத்திச் சக்திகளே. அவை தொடர்ச்சியான இயக்கத்தில் இருக்கின்றன, உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன, உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளிலிருந்து பின் தங்கி விடுகின்றன, அவற்றுடன் மோது கின்றன, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. பழைய உற்பத்தி உறவுகளுக்கு பதிலாகப் புதிய உற்பத்தி உறவுகள் ஏற்படுவதன் மூலம் இம்மோதல் தீர்க்கப்படுகிறது.

உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் இயல்பு, வளர்ச்சி நிலையுடன் பொருந்தியிருக்க வேண்டும் என்னும் மார்க்சிய விதியின் சாரம் இதுவே. இந்த விதி பொருளாயத் உற்பத்தியின் முன்னேற்றத்துக்கும் அதனுடன் சேர்ந்து மொத்தமாக சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் அடிப்படையான இயக்குச் சக்தியாக இருக்கிறது. மனித சமூகத்தின் வரலாறு முழுவதிலும் இயங்கியுள்ள, மிகவும் சர்வப்பொதுவான விதிகளில் இதுவும் ஒன்று ஆகும்.

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதல் பழைய சமூக-பொருளாதார உருவாக்கம் அழிக்கப்பட்டு அதனிடத்தில் புதியது ஒன்று ஏற்படுவதை அவசியமாக்குகிறது. அதனால்தான் வரலாற்று ரீதியான வளர்ச்சி என்னும் பாதையில் சமூகம் முன்னேறி வருகின்ற பொழுது பழைய சமூக-பொருளாதார உருவாக்கங்கள் அழிந்து அவற்றுக்குப் பதிலாகப் புதியவை ஏற்படுகின்றன. வரலாற்றில் ஐந்து சமூக-பொருளாதார உருவாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன: பூர்விகக் கூட்டு வாழ்க்கை, அடிமை உடைமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் (அதன் முதல் கட்டம் சோஷலிசம் எனப்படும்).

ஒரு சமூக-பொருளாதார உருவாக்கத்திலிருந்து அடுத்த தற்கு மாற்றம் ஆழமான சமூகக் கொந்தளிப்பைக் குறிக் கிறது; அது புரட்சி என்ற வடிவத்தை மேற்கொள்கிறது. அடிமை உடைமைச் சமுதாயம் நிலப்பிரபுத்துவ சமுதாயத் துக்கும் அது முதலாளித்துவ சமூகத்துக்கும் வழிவிட்டதைப் போல் அந்த சமூகம் கம்யூனிசத்துக்கு இடம் கொடுக்கப் போவது உறுதி. இது மனித சமூகத்தின் வளர்ச்சியில் சமூக வரலாற்று மற்றும் விதிவழிப்பட்ட நிகழ்வுப் போக்கு ஆகும்.

சமூக வளர்ச்சியின் முற்போக்கான இயல்பை அறிதல் மாபெரும் செய்முறை முக்கியத்துவத்தைக் கொண்டிருக் கிறது; ஏனென்றால் அது உழைக்கும் மக்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும் தங்களுடைய வெற்றியைப் பற்றி உறுதியையும் கொடுக்கிறது. தங்களுடைய இலட்சியம் வெற்றியடையும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்; ஏனென்றால் வரலாற்று வளர்ச்சி விதிகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றன,
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

3) பொருளாயத உற்பத்தி - வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சி பின் அடிப்படை– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


பொருளாயத உற்பத்தி - வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சி பின் அடிப்படை. பொருளாயத உற்பத்தியில் ஏராளமான அம்சங்கள் அடங்கியிருக்கின்றன. முதலாவதாக, மனிதன் தனக்குத் தேவையான பொருட்களை உருவாக்குவதற்கு அவசியமான முதல் பொருட்கள் - இவற்றில் பூமி, அதன் உட்பகுதி, தாவர உலகம், பிராணி உலகம் அடங்கும்; வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மனிதன் தனது உழைப்பில் பயன்படுத்துகின்ற பொருட்கள் அல்லது உழைப்புப் பொருட்கள் தேவைப்படுகின்றன, பொருளாயத உற்பத்தியில் ஈடுபடுவதற்கு உழைப்புச்சாதனங்கள் அல்லது மக்கள் தமக்கும் உழைப்புப் பொருட்களுக்கும் இடையில் வைக்கின்ற, அதா வது உழைப்புப் பொருட்களின் மீது செயல்படுகின்ற பொருட்கள் அவசியமாக இருக்கின்றன. இந்த ரகத்தில் முதலாவதாக, உழைப்புக் கருவிகள் (கோடரி, ரம்பம், கடைசல் கருவி, பலவிதமான இயந்திரங்கள், இதரவை) அடங்கும். இக்கருவிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படுகின்றன. உழைப்புப் பொருட்களும் உழைப்புக் கருவிகளும் உற்பத்திச் சாதனங்கள் ஆகும்.

உற்பத்திச் சாதனங்கள் தாமாகவே செயல்பட முடியாது. பொருளாயதச் செல்வத்தைப் படைக்கின்ற நிகழ்வுப் போக்கில் உழைக்கும் மக்கள், (அவர்களுடைய அறிவு, ஆற்றல்) தலைமையான பாத்திரத்தை வகிக்கின்றனர். மக் கள் உடைப்புச் சாதனங்களைப் படைத்து அவற்றை இயக்கு கிறார்கள். உழைப்புச் சாதனங்களும் பொருளாயுதச் செல்வத்தைப் படைக்கின்ற மக்களும் சமூகத்தின் உற்பத்திச் சக்திகளாக இருக்கிறார்கள். உற்பத்திச் சக்திகள் சமூகத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான பொருளாயத உறவுகளைக் குணாம்சப்படுத்துகின்றன. அவற்றின் வளர்ச்சி மட்டம் இயற்கையின் மேல் மனிதனுடைய ஆதிக்கத்தின் அளவை எடுத்துக் காட்டுகிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மட்டம் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியின் அளவினால், உற்பத்தியில் மனித சக்தியின் விகிதாசாரத் தினால், மக்களுடைய தொழில் தேர்ச்சியினால், அவர்களுடைய தொழில் நுட்ப அறிவு மற்றும் அனுபவத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது.

மக்கள் பழங்காலத்திலிருந்தே உயிர் வாழ்வதற்காக, தம்மைச் சுற்றியுள்ள பகைமையான சூழலிலிருந்து ஜீவனத்தைப் பெறுவதற்காக, காட்டு விலங்குகளையும் பாதகமான பருவ நிலைமைகளையும் எதிர்த்துப் போராடுவதற்காக ஒன்றுசேர்ந்து வாழ வேண்டியிருந்தது. சில மனிதர்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்கின்ற இந்த நிலை உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியுடன் சேர்ந்து அதிகரித்தது. உழைப்புச் சாதனங்கள், உற்பத்தி அனுபவம் மற்றும் உழைப்பின் உற்பத்திப் பொருட்கள் மக்களுடைய கூட்டு நடவடிக்கைகளின் விளைவாக ஏற்பட்டன.

மக்கள் பொருளாயதச் செல்வத்தைப் படைக்கின்ற செயல்முறையில் அவசியமாகவே தமக்குள் உற்பத்தி உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் உற்பத்திச் சாதனங்கள் மீதான உடைமையை அடிப்படையாகக் கொண் டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், உற்பத்திச் செயல்முறையின் போது மக்களுக்கு இடை யிலான உறவுகள் பிரதானமாக உற்பத்திச் சாதனங் களுக்கு யார் உடைமையாளர் என்பதைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன.

உற்பத்திச் சாதனங்கள் பொது உடைமையாக இருக்கின்ற அமைப்பில் மக்களுக்கு இடையில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி என்னும் உறவுகள் ஏற்படுகின்றன; அவர்களுடைய உழைப்பின் பலன்கள் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன. தனியுடைமை சுரண்டல், ஒடுக்குமுறை ஆகிய உறவுகளைத் தோற்றுவிக்கின்றது. சுரண்டல்காரர்கள் சுரண்டப்படுகின்ற வர்க்கங் களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருளாய்தச் செல்வத்தில் மாபெரும் பகுதியைச் சுவீகரிக்கின்றார்கள்; ஒடுக்கப்பட்ட மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் மொத்தமாக உற்பத்தி முறை எனப்படும். உற்பத்தி முறையும் அதன் உட்பகுதிகளும் -உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் - மக்களுடைய விருப்பம், சித்தம், உணர்விலிருந்து சுயேச்சையான முறையில் புறநிலை எதார்த்தமாக இருக் கின்றன. லெனின் உற்பத்தி முறையை சமூகத்தின் 'எலும் புக்கூடு'', "தசை, ரத்தத்தினால்"', அதாவது மற்ற எல்லா சமூக நிகழ்வுகள், உறவுகள் மற்றும் நிறுவனங்களினாலும் மூடப்பட்ட எலும்புக்கூடு என்று வர்ணித்தார். (* V.I. Lenin, Collected Works, vol. 1, p. 317.)அவை ஒன்று சேர்ந்து ஒரு வாழ்கின்ற மொத்தமாக, ஒரு குறிப் பிட்ட சமூக அமைப்பாக, குறிப்பிட்ட சமூக-பொருளாதார உருவாக்கமாக இருக்கின்றன.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

2) சமூகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் உழைப்பின் பாத்திரம்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


சமூகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் உழைப்பின் பாத்திரம். மனிதன் தோன்றியதிலிருந்து மனித சமூகம் தொடங்கியது. பூமியில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் இன்றைய வடிவத்தில் தோன்றினான்; ஆனால் உயிரின் தோற்றம், மிகப் பூர்விகமான, எளிமையான வடிவங்களிலிருந்து மனிதனைப் படைத்த உயிருலகத்தின் பரிணாமம் அதற்குப் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

மனிதன் விலங்குலகத்திலிருந்து தோன்றினான், இன்னும் துல்லியமாகக் கூறுவதென்றால் மிகவும் வளர்ச்சியடைந்த மனிதக் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதை சார்லஸ் டார்வின் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தார். ஆனால் அது எப்படி ஏற்பட்டது, ஏன் ஏற்பட்டது என்பதை அவரால் விளக்க முடியவில்லை. மனிதனுடைய தோற்றத்தில் உழைப்பு கேந்திரமான பாத்திரத்தை வகித்தது என்பதை எங்கெல்சே நிரூபித்தார்.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனுடைய மிகப் பழங்காலத்து முன்னோர்கள் தம்முடைய உறுப்புகளின் முனைப் பகுதிகளை எளிமையான காரியங்களுக்கு, ஒரு பொருளைப் பற்றிப் பிடிக்கின்ற செயல்களுக்குப் பயன்படுத்துவதற்குக் கற்றுக் கொண்டார்கள். மனிதனு டைய கரத்தின் செயலில் ஏற்பட்ட இந்த மாற்றம், அவன் நிமிர்ந்து நின்றது ஆகியவை மொத்த மனித உடலின் வளர்ச்சியையும் பாதித்தன. இதன் விளைவாக மக்கள் ஒன்றுசேருதல் ஆரம்பமாயிற்று; அவர்கள் பரஸ்பரம் உதவி செய்து கொண்டார்கள், கூட்டு நடவடிக்கைகள் தொடங்கின. உழைப்பு நிகழ்வுப் போக்கிலிருந்து, உழைப்புடன் சேர்ந்து மனித உறவுக்கு அவசியமான மொழியும் திருத்த மான பேச்சும் தோன்றின.

உழைப்பும் திருத்தமான பேச்சும் மனிதக் குரங்கின் மூளை மனித மூளையாகப் படிப்படியாகப் பரிணமிப் பதற்கு முக்கியமான தூண்டுவிப்பிகளாக இருந்தன. "... கையின் வளர்ச்சியுடன் படிப்படியாக மூளையும் வளர்ச்சி பெற்றுச் சென்றது. ஆரம்பத்தில், நடைமுறையில் பயனுள்ள தனித்தனி செய்கைகளுக்கு அவசியமான சூழ்நிலைகளைப்பற்றிய உணர்வும், பின்னர், அதிக சாதக நிலையிலுள்ள மக்களிடையே, அந்த உணர்விலிருந்து, அந்தச் சூழ்நிலைகளை ஆளும் இயற்கை நியதிகளைப் பற்றிய உட்பார்வையும் வந்தன. இயற்கையின் நியதிகளைப் பற்றிய அறிவு விரைவாகப் பெருகப்பெருக இயற்கையின் மீது எதிரியக்க மாகச் செயல்படுவதற்கான சாதனங்களும் வளர்ந்தன...'' என்று எங்கெல்ஸ் எழுதினார். (பி. எங்கெல்ஸ், இயற்கையின் இயக்கவியல், மாஸ்கோ பதிப்பகம், 1973, பக்கம் 61.)
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

1) பொருளாயதச் செல்வத்தின் உற்பத்தி முறை - சமூக வளர்ச்சியில் பிரதான காரணி – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருதுகோள். மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது சமூகத்தின் தோற்றுவாய்களையும் வளர்ச்சியையும் ஆராய்கின்ற விஞ்ஞானமாகும். சமூகம் என்றால் என்ன, அது எப்படித் தோன்றியது. அது எப்படி முன்னேறுகிறது, அந்த வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற விதிகள் எவை என்ற கேள்விகளை மக்கள் பல நூற்றாண்டுகளாகவே எழுப்பினார்கள். சமூகத் தைப் பற்றிய ஸ்தூலமான விஞ்ஞானங்களாகிய வரலாறு, அரசியல் பொருளாதாரம், சட்டவியல், இதரவற்றிலிருந்து வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வேறுபடுகிறது. அது சமூக வளர்ச்சியின் மிகவும் பொதுவான விதிகளை ஆராய்கிறது.

கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அல்லது வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருதுகோளை உருவாக்கி சமூகத்தைப் பற்றி அன்றைக்கிருந்த கருத்துகளில் புரட்சியை நிறை வேற்றினார்கள். லெனின் அவர்களுடைய பணியைத் தொடர்ந்தார்.

அதுவரை வரலாறு பகுத்தறிவுக்குப் புறம்பான முறையில் கருத்துமுதல்வாத அடிப்படையில் அறியப்பட்டது. இப்புதிய விஞ்ஞானம் அதை மாற்றி விஞ்ஞான, பொருள்முதல்வாத அறிவைக் கொடுத்தது. மக்கள் தம்முடைய உணர்வு மற்றும் சித்தத்தின் மூலமாக வரலாற்றைப் படைக்கிறார்கள் என்று மார்க்சுக்கு முந்திய சிந்தனையாளர்கள் கூறினார்கள், ஆகவே சமூக வளர்ச்சியில் எல்லா மாற்றங்களும் கருத்துகளை, தத்துவங்களைப் பொறுத்திருக்கின்றன என்று அவர்கள் முடிவு செய்தார்கள். சமூக முன்னேற்றமும் மக்களினங்களின் வாழ்க்கையும் ஒரு வகையான இயற்கைக்கு மேம்பட்ட தெய்விக சக்திகளினால் இயக்கப்படுகின்றன என்று சில தத்துவஞானிகள் நம்பினார்கள். இந்தச் சக்திகள் மக்களுடைய விதிகளையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் முடிவு செய்கின்றன என்று அவர்கள் கருதினார்கள். இக்கருத்துகள் அனைத்தையும் கருத்துமுதல்வாதம் கான்றுதான் வகைப்படுத்த முடியும்.

சமூக வளர்ச்சியை ஒருங்கிணைந்த, விதி வழிப்பட்ட நிகழ்வுப் போக்காக விளக்குவதற்குரிய திறவுகோலை மார்க்சியமே தருகிறது. சமூகம் குறிப்பிட்ட விதிகளின் அடிப் படையில் வளர்ச்சியடைகிறது; அவை மக்களது விருப்பங்கள், ஆர்வங்களிலிருந்து சுயேச்சையானவை, அவை இருத் குலையும் இல்லாதிருத்தலையும் பற்றி மனிதனுடைய அறிவிலிருந்து சுயேச்சையானவை, ஆனால் மனிதன் இந்த விதி களை அறிந்தவுடன் அவற்றைத் தன்னுடைய சொந்த நலன்களுக்குச் சிறப்பான முறையில் பயன்படுத்துகிறான், மக்கள் பகுத்தறியும் திறனுடையவர்கள். அவர்கள் குறிப் பிட்ட இலட்சியங்களை நிறுவி அவற்றைச் சாதிப்பதற்குரிய மனோவலிமையும் விருப்பமும் உடையவர்கள். அதனால் தான் அவர்களுடைய நடவடிக்கைகள் சமூகத்தின் ஏறுமுக வளர்ச்சியின் மீது தாக்கம் செலுத்துகின்றன.

மக்கள் அரசியல், விஞ்ஞானம், கலைகளை அறிவதற்கு முன்னால் உணவைச் சேகரிப்பது எப்படி, இருப்பிடம் அமைப்பது எப்படி, உடைகளைத் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மார்க்சும் எங்கெல்சும் எடுத்துக் காட்டினார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மக்களுடைய வாழ்க்கையின் பொருளாயத நிலைமைகள் அல்லது அவர்களுடைய சமூக இருத்தல் அவர்களுடைய ஆன்மிக, கலாசார, அறிவுத் தேடல்களை, உணர்வு மற்றும் தத்துவங்களை - இவையே சமூகத்தின் அறிவு சார்ந்த வாழ்க்கையாக அமைகின்றன - முன்நிர்ணயிக்கின்றன.

பொருளாய்தச் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற செயல் முறை, மனிதனுடைய உழைப்பு மற்ற எல்லா சமூக நிகழ்வுப் போக்குகளுக்கும் தலைமையானதாக இருக்கிறது. அந்த செயல்முறை நித்தியமாக, இயற்கையான அவசியமாக, மனித சமூகத்தின் இன்றியமையாத நிபந்தனையாக இருக்கிறது.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

Sunday 21 July 2019

9. உண்மை என்பது என்ன? – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உண்மை பற்றிய கோட்பாடு. உண்மை என்பது ஒரு பொருள் மற்றும் நிகழ்வைப் பற்றிய அறிவு; அது எதார்த்தத்துடன் பொருந்தியிருக்கிறது, உண்மையான நிலையைப் பிரதிபலிக் கிறது. உண்மையான அறிவு எதார்த்தத்துடன் பொருந்தி யிருப்பதால் அது தனி மனிதரையோ, மனித சமூகத் தையோ பொறுத்திருக்கவில்லை''. (V. I. Lenin, Collected Works, vol. 14, p. 122. ) உண்மையான அறிவு நம்மிலிருந்து புறநிலையாக, சுயேச்சையாக இருக்கின்ற வெளியுலகத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அறிவு புறநிலையான உண்மை எனப்படும்.

புறநிலையான உண்மை மாறாதிருக்க முடியாது; ஏனென்றால் அதன் தொடர்ச்சியான இயக்கத்தில் இருக்கிறது, எப்பொழுதும் மாறிக் கொண்டும் வளர்ச்சியடைந்து கொண்டும் இருக் கிறது. ஆனால் நம்முடைய அறிவில் பிரதிபலிக்கப்படுகின்ற பொருள் மாறுகிறது என்றால், அது ஒரு பண்பு ரீதியான நிலையிலிருந்து மற்றொரு நிலையை அடைகிறது என்றால், அது தன்னுடைய இயல்புகள், தொடர்புகள் சிலவற்றை இழந்து வேறு சிலவற்றை உருவாக்கிக் கொள்கிறது என் றால் இப்பொருளைப் பற்றிய நம்முடைய அறிவும் மாறாமல் இருக்க முடியாது. முடிவான உண்மையாக இருப்பதற்குக் குறிப்பிட்ட பொருளைப் பற்றி நம்முடைய அறிவும் மாற வேண்டும், கூடுதலாகச் சேர்க்கப்பட்டு மாறுகின்ற எதார்த் தத்துடன் பொருந்தும்படிச் செய்யப்பட வேண்டும், அதனால்தான் புறநிலையான உண்மை சார்புநிலையாக இருக்கிறது. அது சமூக அறிவின் வளர்ச்சியுடன் சேர்ந்து, மாறுகின்ற எதார்த்தம் மற்றும் தன்னுடைய இருத்தலின் நிலைமைகளுடன் சேர்ந்து தவிர்க்க முடியாதபடி மாறு கிறது. எதார்த்தத்துடன் அரைகுறையாகப் பொருந்துகின்ற தம்முடைய அறிவு, அதாவது அறிதல் செயல்முறையின் போது இன்னும் அதிகத் துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டிய அறிவு சார்புநிலை உண்மை எனப்படும்.

ஆனால் நம்முடைய அறிவின் சார்புநிலையான தன்மை) தனிமுதலான உண்மை என்பதை இல்லாமற் செய்து விடவில்லை. ஏனென்றால் சார்புநிலையானதில் தனிமுத லான அம்சம் இருக்கிறது. புறநிலையான உண்மை சார்பு நிலையாகவும் இருக்கிறது, தனிமுதலாகவும் இருக்கிறது. அது எதார்த்தத்தின் சில அம்சங்களையும் அதற்குள்ளே இருக்கின்ற சில உறவுகளையும் சரியாகப் பிரதிபலிக்கின்ற படியால் தனிமுதலானது. அதே சமயத்தில் அது எதார்த் தத்தைப் பூரணமாகவும் முழுமையாகவும் ஒரு போதும் பிரதி பலிப்பதில்லை, குறிப்பிட்ட பொருளின் மொத்த உள் ளடக்கத்தை (அது முடிவில்லாதது) தழுவவில்லை - தழுவ முடியாது என்பது மெய்யே -என்பதால் சார்புநிலையானது.

நம்முடைய அறிவு எப்பொழுதுமே சார்புநிலையானது என்று கூறுகின்ற பொழுது அது புறநிலையானது அல்ல, ஆகவே அது தனிமுதலானது அல்ல என்று புரிந்து கொள்ளக் கூடாது. சரி .மனித சிந்தனை தன் இயல்பு காரணமாகச் சார்புநிலையான உண்மைகளின் கூட்டு மொத்தமாகிய தனிமுதலான உண்மையைக் கொடுக்க முடியும், அது அப்படிக் கொடுக்கிறது. அறிவியல் வளர்ச்சியரின் ஒவ்வொரு காலடியும் தனிமுதலான உண்மை என்னும் மொத்தத்தில் புதிய கூறுகளைச் சேர்க்கிறது; ஒவ்வொரு அறிவியல் கருதுகோளின் மெய்ம்மையின் வரையறைகளும் சார்பு நிலையானவை, அவை அறிவின் வளர்ச்சியுடன் ஒரு சம்யத்தில் விரிவடைகின்றன, மறு சமயத்தில் குறுகிவிடுகின்ன.
                (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)


8. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிதல் தத்துவம் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உலகம் அறியப்படக் கூடியதா? மார்க்சிய-லெனினியத் தத்துவம் இக்கேள்விக்கு "ஆம், உலகம் அறியப்படக் கூடியதே" என்ற தெளிவான, விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்ட பதிலைத் தருகிறது. உலகத்தை அறிய முடியும் என்னும் இந்த நம்பிக்கை நடைமுறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

அறிதல் என்பது மனிதனுடைய உணர்வில் எதார்த்தத் தின் பிரதிபலிப்பு ஆகும். நம்மைச் சுற்றியுள்ள உலகமே நம்முடைய அறிதலின் ஒரே தோற்றுவாய் ஆகும். இந்த உலகம் மனிதன் மீது தாக்கம் செலுத்துகிறது; அவனிடம் சில உணர்ச்சிகளை, எண்ணங்களை, கருத்தடைமப்புகளைத் தோற்றுவிக்கிறது; அவன் பின்னர் அவற்றைத் தன்னுடைய நடைமுறை நடவடிக்கையில் சோதித்துப் பார்க்கிறான்.

இயற்கை, சமூகம் ஆகிய இரண்டையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மனிதனுடைய நடவடிக்கையே நடைமுறை ஆகும். அது மனிதனுடைய செயலையும் பொருளாயத உற்பத்தியையும் அடிப்படையாகக் கொண் டிருக்கிறது; அரசியல் போராட்டம், வர்க்கப் போராட்டம், தேசிய விடுதலை இயக்கம், அறிவியல் பரிசோதனை ஆகிய வற்றை அது உள்ளடக்கியிருக்கிறது. சுற்றியுள்ள உலகத்தை அறிய முயலுவதன் ஆரம்பம் மற்றும் முடிவுக் கட்டமாக நடைமுறை இருக்கிறது.

இரண்டு பொருட்கள் - அவற்றில் ஒன்று அடுத்த பொரு ளைப் போல நூறு மடங்கு அதிக எடையுள்ளது - ஒரே உயரத்திலிருந்து கீழே போடப்படுகின்ற பொழுது அதிக எடையுள்ள பொருள் குறைவான எடையுள்ள பொருளைக் காட்டிலும் நூறு மடங்கு வேகத்துடன் பூமியில் விழும் என்று மத்திய காலத்தில் சமயவாதிகள் உறுதியாக் கூறினார் கள். கலிலியோ (1564-1642) இக்கருத்து தவறானது என் பதை நிரூபித்தார். அவர் ஒரு உயரமான ஸ் தூபியிலிருந்து வெவ்வேறு எடையுள்ள இரண்டு உருண்டைகளை கீழே போட்டார். அவை இரண்டும் ஒரே சமயத்தில் பூமியின் மீது விழுந்தன. சமயவாதிகளின் கருத்து தவறானது, கீழே விழுகின்ற பொருட்களின் எடை எப்படியிருந்தாலும் அவை ஒரே வேகத்தைக் கொண்டிருக்கின்றன என்பவற்றை அவர் நடைமுறையில் நிரூபித்தார்.

நடைமுறை அறிதலின் ஆரம்ப நிலையாக, அடிப்படை யாக இருக்கிறது. ஏனென்றால் அறிதல் நடைமுறை நடவடிக் கையிலிருந்து தோன்றுகிறது. உதாரணமாக, மனிதன் தன் னுடைய பிறந்த கால முதலாகவே உழைத்தான்; தன் னுடைய கடுமையான உழைப்பின் போது இயற்கைச் சக்திகளைப் பற்றி அறிந்து கொண்டான், அவைப் பற்றிய அறிவைச் சேகரித்தான்.

அறிதலின் நோக்கமும் நடைமுறையே; ஏனென்றால் மனிதன் உலகத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதும் அதன் வளர்ச்சியின் விதிகளைக் கண்டுபிடிப்பதும் தன்னுடைய நடைமுறை நடவடிக்கையில் அந்த அறிதலின் விளைவு களைப் பயன்படுத்திக் கொள்வதற்கே.

அறிதல் நிகழ்வுப் போக்கு. மனிதன் பிறக்கின்ற பொழுது அவனுடைய தலையில் அறிவு இருப்பதில்லை. அவனுடைய வாழ்க்கையில் அறிதலின் விளைவாக அது சிறிது சிறிதாகச் சேகரிக்கப்படுகிறது. மேலும் அறிதல் என்பது மனிதனுடைய மூளையில் உலகத்தைப் பற்றிய தானியக்கப் பிரதிபலிப்பு மட்டுமல்ல, அது ஒரு சிக்கலான நிகழ்வுப் போக்கு; அதில் அவனுடைய சிந்தனைகள் அறியாமையிலிருந்து அறிவை நோக்கி, அரைகுறையான, துல்லியமற்ற அறிவிலிருந்து அதிக முழுமையான, அதிகத் துல்லியமான அறிவை நோக்கி முன்னேறுகின்றன. உலகம் முடிவில்லாததாக இருப்பதால் அறிதலும் கூட முடிவில்லாததே, அறிதலின் கட்டங்கள் எவை?

முதல் கட்டம் புலனுணர்ச்சி அறிதல். மக்கள் தங் சுளுடைய கண்கள், காதுகள், தொட்டறியக் கூடிய உறுப்பு களின் மூலமாக உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள் கிறார்கள். நாம் பொருளாயத உலகத்தைப் பற்றிய தகவலை அவற்றின் மூலமாகப் பெறுகின்றோம்.

அறிதலின் இரண்டாவது கட்டம் தர்க்க ரீதியான அல்லது சூக்குமமான சிந்தனை எனப்படும். எந்த ஒரு நிகழ்வின் சாரத்தையும் அறிவதற்கு நம்முடைய புலனுறுப்பு களின் உதவியினால் பெற்ற தகவலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; தகவலை முறைப்படுத்த வேண்டும்; தற் செயலான, அற்பமான விவரங்களை ஒதுக்கி விட்டு முக்கியமானவற்றை வெளியே கொண்டு வர வேண்டும்.

ஆனால் நம்முடைய புலனுறுப்புகள் சரியான தகவல் களை அளிக்கின்றன என்று நாம் உறுதியாகக் கருதுவது எப்படி? அந்தத் தகவல் அனுப்பப்படுகின்ற, புரிந்து கொள்ளப் படுகின்ற செயல்முறையின் போது சிதைக்கப்படுதல் சாத்தியமா? அறிதல் செயல்முறையின் மூலம் பெறப்படு கின்ற அறிவு நடைமுறையில் நிரூபிக்கப்பட்ட பிறகுதான் முடிவான உண்மை தனக்குக் கிடைத்திருக்கின்ற அறிவுக்குப் பொருத்தமான என்று கருதப்படுகிறது. ஒரு நபர் விளைவை நடைமுறை நடவடிக்கையில் பெறுவாரானால் இந்த அறிவு முடிவான உண்மைக்கு, எதார்த்தத்துடன் பொருந்துகிறது என்பது அர்த்தமாகும்.
            (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

7. இயக்கவியலின் கருத்தினங்கள்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


இயக்கவியலின் கருத்தினங்கள். வேறு எந்த விஞ்ஞானத்தை யும் போல பொருள்முதல்வாத இயக்கவியல் விதிகளின் அமைப்பு மட்டுமல்ல, அது தத்துவஞானக் கருத்தினங்களின், அதாவது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தின் பொதுவான கூறுகளையும் தொடர்புகளையும், அம்சங்களையும் இயல்பு களையும் தொகுத்துக் கூறுகின்ற கருத்தமைப்புகளின் அமைப்பாகவும் இருக்கிறது.

இனி இயக்கவியலின் கருத்தினங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

தனியானதும் சிறப்பானதும் பொதுவானதும். ஒவ்வொரு பொருளும் நிகழ்வும் அவற்றுக்கு உரிய தனி வகையான, உள்ளுறையான கூறுகளைக் கொண்டிருக்கின்றன. எல்லா அம்சங்களிலும் முற்றான ஒருமையைக் கொண்டிருக்கின்ற இரண்டு பொருட்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் இருக்கின்ற, மற்ற நிகழ்வுகளில் இல்லாத அனைத்தும் தனியானவை எனப்படும். அதே சமயத்தில் மற்ற பொருட்கள், நிகழ்வுகளுடன் பொதுப்படையான எக்கூறுகளையும் கொண்டிராத பொருட்கள், நிகழ்வுகள் கிடையாது. ஒரு நிகழ்வில் மட்டுமின்றி பல நிகழ்வுகளில் இருக்கின்ற. திரும்பத் திரும்பத் தோன்றுகின்ற கூறுகள் பொதுவானவை எனப் படும். ஒரு பொருளை மற்ற பொருட்களுடன் ஒப்பிடுவதன் மூலம் அவற்றின் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் நாம் இனங்காணுகிறோம். ஒப்பிடத்தக்க பொருட்களை வேறுபடுத்திக் காட்டுபவை அவற்றிலுள்ள சிறப்பம்சம் எனப்படும். இயற்கையில் அடிக்கடி காணப்படுகின்ற இரும்பை உதாரணமாக எடுத்துக் கொள்வோம், உயிரற்ற இயற் கையின் கூறு என்ற முறையில் அதைப் பொதுவான நிகழ்வு எனக் கருதலாம்; உலோகம் என்ற முறையில் அது சிறப்பானது; இரும்பு என்ற வகையில் அது தனியான து. பனித சமூகத்தில் சமூகப் புரட்சி ஒரு பொது நிகழ்வு; தேசிய விடுதலைப் புரட்சியைப் புரட்சியின் சிறப்பான ரகம் எனக் கருதலாம்; ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடைபெற்றிருக்கின்ற அதே புரட்சியைத் தனியான நிகழ்வு என்று கூறலாம்.

தனியானவை, பொதுவானவை, சிறப்பானவை ஆகி யவை ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. தனியான து பொது அம்சத்தைக் கொண்டிருக்கிறது. பொதுவானது சிறப்பானதில், சிறப்பானதன் மூலமாக மட்டுமே இருக்கிறது.

காரணமும் விளைவும், ஒரு நிகழ்வை ஏற்படுத்துகின்ற மற்றொரு நிகழ்வு முந்திய நிகழ்வுக்குக் காரணம் எனப் படும். அந்தக் காரணத்தின் முடிவுதான் விளைவாகும். காரணகாரியத் தன்மை என்பது நிகழ்வுகளுக்கு இடையி லுள்ள உள்தொடர்பாகும்; அதில் ஒன்று நடைபெற்றவுடன் அடுத்தது உடனடியாகத் தொடர்கிறது, உதாரணமாக,
நீரைச் சூடாக்குதல் அது நீராவியாக மாறுவதற்குக் காரணம்; ஏனென்றால் நீரின் வெப்பநிலை அதிகரிக்கின்ற பொழுது அது மேன்மேலும் ஆவியாகிறது.

காரணகாரியத் தன்மை பொதுவான தன்மையைக் கொண்டிருக்கிறது. காரணம் இல்லாத நிகழ்வு அல்லது சம்பவம் கிடையாது, அது ஏற்பட முடியாது. நாம் பல நிகழ்வுகளைச் சந்திக்கிறோம், அவை ஏற்படுகின்ற காரணம் இன்னும் நமக்குத் தெரியவில்லை என்பது உண்மையே. எனினும் அறிதல் செயல்முறையின் முன்னேற்றம் இக் காரணங்களை இனங்காணுவதற்கு நமக்கு உதவி செய்யும். பொருளாயத உலகம் மற்றும் பொதுப்படையாகப் பருப் பொருளின் எந்த வளர்ச்சியும் காரணங்களையும் விளைவு களையும் கொண்ட சிக்கலான முடிச்சாகும்.

இன்றியமையாமையும் தற்செயலும். ஒரு நிகழ்வின் உறுப்பு களின் உள்ளார்ந்த தன்மையினால் ஏற்படுகின்ற இயல்பு களும் தொடர்புகளும் இன்றியமையாதவை என்று கூறப்படு கின்றன. வெளிப்புற சந்தார்ப்பங்களின் தாக்கத்தினால் ஏற்படுகின்ற இயல்புகளும் தொடர்புகளும் தற்செயலானவை எனப்படும். உதாரணமாக, ஒரு முதலாளி இன்றியமையா மையின் காரணமாக ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறார்; ஏனென்றால் தொழிலாளி இல்லாமல் முதலாளியினால் தொழிலை நடத்த முடியாது. ஆனால் அவர் இவான், பியோத்தர் அல்லது வேறு எந்தத் தொழி லாளியை வேலைக்கு அமர்த்துகிறார் என்பது தற்செய லானதாகும். குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் நிச்சயமாக நடைபெறுவது இன்றியமையாதது எனப்படும். குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடியது அல்லது நடை பெறாமற் போவது தற்செயலானது எனப்படும். தற்செய லானவற்றில் சம்பவங்கள் கற்பனை செய்யப்படக் கூடிய எந்த முறையிலும் நடைபெறலாம். தற்செயலானது இன்றியமையாமையின் வெளிப்பாடாக, அதற்குத் துணை செய்வதாக இருக்கிறது.

சாத்தியமும் எதார்த்தமும். தகுந்த நிலைமைகளில் நடை பெறக் கூடியது சாத்தியம் எனப்படும். ஏற்கெனவே நடை பெற்றிருப்பது எதார்த்தம் எனப்படும். வேறு வார்த்தை களில் சொல்வதென்றால் எதார்த்தத்தில் இல்லாத ஆனால் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறக் கூடிய எதார்த்தத்தின் உள்ளுறையான ஆற்றலின் காரணமாக எதிர் காலத்தில் தோன்றக் கூடிய இயல்புகள், நிகழ்வுப் போக்குகள், பொருட்கள் ஆகியவற்றை நாம் சாத்தியம் எனக் கருதுகிறோம். சாத்தியம் நிறைவேறுகின்ற பொழுது எதார்த்தமாக மாறுகிறது. ஆகவே எதார்த்தத்தை நிறை வேற்றப்பட்ட சாத்தியம் என்றும் சாத்தியத்தை எதிர்கால எதார்த்தம் என்றும் வரையறுக்கலாம்.

சாத்தியங்கள் எதார்த்தமானவையாகவும் சூக்குமமான வையாகவும் இருக்கக் கூடும். எதார்த்தமான சாத்தியங்கள் விதிவழிப்பட்ட வளர்ச்சிப் போக்கை வெளியிடுகின்றன. இந்த சாத்தியங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமான நிலைமைகள் மெய்யாகவே இருக்கின்றன (உதாரணமாக, சில வளர்முக நாடுகள் புதிய காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற முடியும் என்பதைப் போல). சூக்குமமான சாத்தியங்கள் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தில் எதார்த் தமாக மாறுவதற்கு உரிய நிலைமைகள் இல்லை; ஆனால் இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் தோன்றக் கூடும் (மனிதன் சூரிய மண்டலத்தில் உள்ள இதர கிரகங்களை ஆராய்வதைப் போல).

உள்ளடக்கமும் வடிவமும். எதார்த்தத்தில் எந்தப் பொருளும் உள்ளடக்கம் மற்றும் வடிவத்தின் ஒற்றுமையாக இருக்கிறது. பொருள்முதல்வாத இயக்கவியலின் கருத்தினம் என்ற முறையில் உள்ளடக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்விலுள்ள எல்லாக் கூறுகள், அவற்றின் இடைச்செயல் மற்றும் அவற்றின் மாற்றங்களின் கூட்டு மொத்தம் ஆகும். இந்த நிகழ்வில் உள்ளுறையாகவுள்ள இடைச்செயல்களும் மாற்றங்களும் முறைப்படியாக நடைபெறுகின்றன, சார்பு நிலையில் நிலையான உறவுகளின் அமைப்பையும் நிர்ணயிக் கப்பட்ட கட்டமைப்பையும் கொண்டிருக்கின்றன. உள்ளடக்கத்தின் பல்வித அம்சங்களுக்கும் இடையிலான, சார்பு நிலையில் நிலையான உறவுகளின் அமைப்பு, அதன் கட் டமைப்பு ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் வடிவமாக அமைகின்றன. வடிவமும் உள்ளடக்கமும் பிரிக்கப்பட முடி யாதவை; அவை ஒற்றுமையில் மட்டுமே இருக்கக் கூடிய இரண்டு எதிர்நிலைகள், உள்ளடக்கம் வடிவத்தை நிர் ணயிக்கிறது. அது வடிவத்தைக் காட்டிலும் வேகமாக மாறுகிறது, சீக்கிரத்தில் இரண்டும் மோதுகின்றன. புதிய உள்ளடக்கம் பழைய வடிவத்தை உதறி விட்டுப் புதிய வடிவத்தை அமைத்துக் கொள்கிறது. வடிவம் உள்ளடக்கத் தின் மீது தாக்கம் செலுத்துகிறது. புதிய வடிவம் வளர்ச்சி யை விரைவுபடுத்துகிறது, பழைய வடிவம் அதைப் பின் னால் இழுக்கிறது.

சாராம்சமும் நிகழ்வும். பொருட்கள், நிகழ்வுகளின் வெவ் வேறு அம்சங்களைக் குறிக்கின்ற இரண்டு கருத்தமைப்புகள் ஆகும். சாராம்சம் என்பது ஏதாவதொரு பொருளின் இன்றியமையாத அம்சங்கள் மற்றும் தொடர்புகளின் மொத் தமாகும்; ஒரு நிகழ்வு என்பது இந்த அம்சங்கள் மற்றும் தொடர்புகள் மேற்பரப்பில் வெளிப்படுதல் ஆகும்; அது சாராம்சத்தின் பொருளை வெளிக்கொண்டு வருகிறது. சாராம்சம் நிகழ்வுடன் அங்கக ரீதியில் இணைக்கப்பட் (டிருக்கிறது, தனது உள்ளடக்கத்தை நிகழ்விலும் அதன் மூலமாகவும் மட்டுமே வெளிப்படுத்துகிறது. நிகழ்வு சாராம் சத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அது இல்லாமல் இருக்க முடியாது. லெனின் சாராம்சத்துக்கும் நிகழ்வுக்கும் இடையிலான இடையுறவை ஒரு ஆழமான, வேகமான நீரோட்டத்துக்கு ஒப்பிட்டார்; அதன் ஆழத்தையும் வேகத் தையும் கண்களுக்குத் தெரிகின்ற அலைகளையும் நுரையை யும் கொண்டுதான் மதிப்பிட முடியும். “…மேலே நுரை, கீழே ஆழமான நீரோட்டங்கள், ஆனால் அந்த நுரை கூட சாராம்சத்தின் வெளியீடே” (* V. 1. Lenin, Collected Works, vol. 38, p. 130. )
              (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

6. பொருள்முதல்வாத இயக்கவியலின் பிரதான விதிகள்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


பொருள்முதல்வாத இயக்கவியலின் பிரதான விதிகள். எதிர் நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும், அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் பரிணமித்தல், நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆகியவை இயக்கவியலின் பிரதான விதிகள் ஆகும்.

எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும்

எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும், இயற்கை, சமூகம் மற்றும் அறிதலின் எல்லா நிகழ்வுகளிலும் அவற்றின் உன் எதிர்நிலைகள், முரண்படுகின்ற அம்சங்கள் மற்றும் போக்குகள் குணாம்சமாக இருக்கின்றன. உதாரணமாக, உயிரற்ற இயற்கையில் ஒரு பக்கத்தில் அணுவின் நேர்ச் சக்திக் கருவுக்கும் மறு பக்கத்தில் அதன் எலெக்ட்ரானுக்கும் இடையில் ஒற்றுமை மற்றும் எதிர்நிலையின் மூலம் இதை விளக்க முடியும்; உயிருள்ள இயற்கையில் இந்த எதிர்நிலை களை! தன்மயமாக்கல் மற்றும் சிதைதலில் விளக்க முடியும்; சமூகத்தில் இவை வர்க்க முரணியல்புகள் எனப்படுகின்றன, சிந்தனையில் இவை பகுப்பாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு எனப்படுகின்றன. இந்த இயக்கவியல் முரண்பாட்டில் ஒரு எதிர் நிலையானது மறு எதிர் நிலை இல்லாமல் இருக்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் எதிர் நிலைகள் ஒரே நிகழ்வுக்குள் இருக்கின்றன; ஒருமையில் தம்மை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, தன் பயமாக்கல் மற்றும் சிதைதலில் ஒரு சாதிர்நிலை தன் னுடைய மறு எதிர் நிலையிலிருந்து பிரிந்து விடுவதாகக் கண நேரம் கற்பனை செய்து பாருங்கள். இது உயிருள்ள பொருளைத் தவிர்க்க முடியாதபடி அழித்து விடும், அதாவது அந்த நிகழ்வை அழித்து விடும். அவை பிரிக்கப்பட முடியா தவை: அவை அதே சமயத்தில் சமாதானமான, உடன்பாட்டு முறையில் இருக்க முடியாது, ஏனென்றால் அவை எதிர் நிலை கள், அதனால்தான் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நிகழ்வும் எதிர்நிலைகளின் போராட்டத்தையும் அவற்றின் ஒருமையையும் கொண்டிருக்கின்றன.

ஒரு நிகழ்வினுடைய வளர்ச்சிக்கு அடிகோலுகின்ற போராட்டம் இங்கே தலைமையான பாத்திரத்தை வகிக் கிறது. இந்தப் போராட்டம் பொருட்கள் மற்றும் நிகழ்வு களின் எல்லாக் கட்டங்களிலும் நடைபெறுகிறது. அது அத்தகைய ஒற்றுமையின் ஒவ்வொரு தோற்றத்திலும் அதன் சுற்றுவட்டத்திற்குள்ளேயும் நடைபெறுகிறது. போராட்டம் ஒற்றுமையின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் இன்றியமையாததாக்குகிறது. இந்த ஒற்றுமை நொறுங்கித் தகர்ந்து புதிய ஒற்றுமைக்கு வழி வகுக்கின்ற பொழுது அது குறிப்பிடத்தக்க தீவிரமான வடிவங்களை அடைகிறது. எதிர்நிலைகளின் போராட்டம் பழைய ஒற்றுமை சீர் குலைவதற்கும் அதற்குப் பதிலாகப் புதிய நிலைமைகளுக்குப் பொருத்தமான புதிய ஒற்றுமை ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது.

எதிர்நிலைகளின் ஒற்றுமை போராட்டத்தைப் போன்ற தல்ல, அது தற்காலிகமாக மட்டுமே இருக்கிறது. ஒற்றுமை போராட்டத்தின் விளைவாகத் தோன்றி அது பிணைக்கப் பட்டிருக்கின்ற முரண்பாடு முதிர்ச்சியடைந்து தீர்வு நிலையை அடைகின்ற வரை நீடித்த பிறகு, ஒரு புதிய ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த ஒற்றுமையின் எதிர்நிலைகளின் போராட்டத் தின் விளைவாக அது தகர்கிறது, அதன் பிறகு மற்றொரு ஒற்றுமை ஏற்படுகிறது, அதன் பிறகு நான்காவது ஒற்றுமை ஏற்படுகிறது, இப்படியே முடிவில்லாமல் நடைபெறுகிறது.

முரண்பாடுகள், எதிர்நிலைகளின் போராட்டம் எல்லா நிகழ்வுகள், நிகழ்வுப் போக்குகளின் இயக்கம் மற்றும் வளர்ச்சிக்கு உள் தோற்றுவாயாக இருக்கின்றன. உள் சக்திகளின் மூலம் பருப்பொருள் வளர்ச்சியடைகிறது; அது தனக்குள்ளே இந்த இயக்கத்தின் தோற்றுவாயைக் கொண்டிருக்கிறது.

இயக்கவியல் முரண்பாடுகளை எதிர்நிலைகள் ஒன்றை யொன்று முன்வைத்து, அதே சமயத்தில் ஒன்றையொன்று நிராகரிக்கின்ற பொழுது அவற்றின் இடையுறவு மற்றும் இடைத் தொடர்பு என்று தொகுத்துரைக்க முடியும். அவற்றுக்கு இடையிலான போராட்டமே வளர்ச்சியின் இயக்குச் சக்தியாகவும் தோற்றுவாயாகவும் இருக்கிறது, எதிர்நிலைகளின் ஒற்றுமை மற்றும் போராட்டத்தின் விதி இயக்கவியலின் மிக முக்கியமான குணாம்சங்களில் ஒன்றை வெளியிடுகிறது: இயக்கமும் வளர்ச்சியும் சுய இயக்கம், சுய வளர்ச்சி என்ற முறையில் நடைபெறுகின்றன.

அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் பரிணமித்தல் மற்றும் அதன் எதிரிடை

அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் பரிணமித்தல் மற்றும் அதன் எதிரிடை. எந்தப் பொருளுக்கும் அதை மற்ற பொருட்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற பண்பு உண்டு. அதற்கு ஒரு அளவுநிலை, அதாவது பரி மாணம் மற்றும் எடை இருக்கிறது.

அளவுநிலையும் பண்புநிலையும் நெருக்கமாக இணைந் திருப்பவை; அவற்றைப் பிரிக்க முடியாது. அதே சமயத்தில் அவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. பண்புநிலை மாற்றம் பொருளை மாற்றுகிறது. அது மற்றொரு பொரு ளாக மாறுவதற்கு இட்டுச் செல்கிறது. அளவுநிலை மாற்றங் கள் பொருளை உடனடியாக மாற்றிவிடுவதில்லை. உதார ணமாக, உலோகத்தின் வெப்ப நிலையைப் பத்து டிகிரிகள் - நூறு டிகிரிகள் கூட- அதிகப்படுத்த முடியும். எனினும் அது உடனே உருகி விடுவதில்லை. வெப்ப நிலை உச்ச கட்டத்தை, உருகு நிலையை அடைகின்ற வரை அது தன்னுடைய பெளதிக நிலையில் மாற்றமில்லாதிருக்கிறது; உருகு நிலையை அடைந்தவுடன் கடினமான பொருள் ஒரு திரவமாக மாறுகிறது. திரவம் கொதி நிலையை அடைகின்ற பொழுது வாயுவாக மாறுகிறது. இவ்விதத்தில் அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

அளவு ரீதியான மாற்றங்கள் இடையீடில்லாமலும் படிப் படியாகவும் நடைபெறுகின்றன. பண்பு ரீதியான மாற்றங் கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பாய்ச்சலைப் போல் நடைபெறுகின்றன. இயற்கையிலும் சமூகத்திலும் வளர்ச்சி மெதுவான பரிணாமம், வேகமான பாய்ச்சல்கள் என்னும் இரண்டு வடிவங்களில் நடைபெறுகின்றது.

அளவுநிலை மாற்றம் பண்புநிலை மாற்றமாகப் பரிணமிக் கின்ற நிகழ்வுப் போக்கு, ஒரு பொருள் அல்லது நிகழ்வு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல் பாய்ச்சல் எனப்படும். பண்புநிலை மொத்தமாக, உடனடியாக மாறு கின்ற பொழுது (உதாரணமாக, இரசாயனக் கிரியைகள் அல்லது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்) பாய்ச்சல் மிகவும் திடீரென்று நடைபெறக் கூடும். ஒரு பண்புநிலை மற்றொரு பண்புநிலையாகப் படிப்படியாக மாறுகின்ற பொழுது அது மெதுவாக நடைபெறக் கூடும் (உதாரண மாக, தாவரங்கள் பிராணிகளின் புதிய ரகங்கள் தோன்று தல்). இந்த உதாரணத்தில் பழைய பண்புநிலை புதிய பண்புநிலையாக உடனடியாக, முற்றாக அல்லாமல் பகுதி பகுதியாக மாறுகிறது; பழைய பண்புநிலையின் சில கூறுகள் அழிகின்றன; அவற்றுக்குப் பதிலாகப் புதிய பண்புநிலையின் கூறுகள் ஏற்படுகின்றன.

இந்த ரகத்தைச் சேர்ந்த பாய்ச்சலைப் பழைய பண்பு நிலையின் சுற்றுவட்டத்துக்குள் படிப்படியாக நடைபெறு கின்ற கூறுகளின் அளவு ரீதியான அதிகரிப்புடன் சேர்த்துக் கருதக் கூடாது.

அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங் களாகப் பரிணமித்தல் மற்றும் அதன் எதிரிடையின் விதி என்பது ஒரு பொருளின் அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான அம்சங்களின் இடைத் தொடர்பும் இடைச் செயலும் ஆகும், அங்கே சிறிய, ஆரம்பத்தில் புலனறியப்பட முடியாத, அளவு ரீதியான மாற்றங்கள் படிப்படியாகச் சேர்ந்து அடிப்படையான பண்புநிலை மாற்றங்களை ஏற் படுத்துகின்றன; அவை பாய்ச்சலில் நடைபெற்று பொருளின் இயல்பு மற்றும் அதன் வளர்ச்சியின் நிலைமை வற்புறுத்துகின்ற வடிவத்தை அடைகின்றன.

அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங் களாகப் பரிணமித்தலைப் பற்றிய புறநிலையான விதி பொருளாயத உலகத்தைப் புத்திளமையாக்குவதைக் குறிக் கிறது; அங்கே ஒவ்வொரு பாய்ச்சலும் பழமையை ஒழித்துப் புதுமையைத் தோற்றுவிக்கிறது.

நிலைமறுப்பின் நிலைமறுப்பு

நிலைமறுப்பின் நிலைமறுப்பு. முந்திய நிலையை நிலைமறுப்புச் செய்கின்ற பொழுது மட்டுமே பண்புநிலை மாற்றம் சாத்தியம், நிலைமறுப்பு எந்த வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாத, முறைப்படியான கட்டமாகும். இருத் தலின் பழைய வடிவங்களை நிலைமறுப்புச் செய்யாமல் எத்தகைய வளர்ச்சியும் சாத்தியமல்ல; ஏனென்றால் அப்படி நடைபெறும் பொழுது புதிதாக எதுவும் தோன்றாது என்பது இதற்குக் காரணமாகும். நிலைமறுப்பு என்றால் என்ன?

இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தின்படி நிலைமறுப்பு என்பது பழையனவற்றை முற்றிலும் ஒழித்தல் என்று அர்த்தமல்ல. முதலாவதாக, எளிமையான நிகழ்வு கள் அதிகச் சிக்கலான நிகழ்வுகளுடன் சேர்ந்தே இருக் கின்றன. உதாரணமாக, உயிருள்ள இயற்கையில் 1.1ல் பழங் காலத்து உயிரிகள் மிகவும் அமைப்பு ரீதியான பிற்காலத்துப் பிராணிகளுடன் சேர்ந்து வாழ்கின்றன. இரண்டாவதாக, ஏறுமுக வளர்ச்சி நிகழ்வுப் போக்கின் போது புதியவை பழையனவற்றிலிருந்து தோன்றுகின்ற பொழுது அவற்றிலிருக்கின்ற ஆக்கபூர்வமான மதிப்புடை யவை அனைத்தையும் தன்வயப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக, உயிருள்ள இயற்கையில் ஒவ்வொரு புதிய உயிரினமும் பரிணாம வளர்ச்சியின் போது முந்திய தலைமுறைகள் திரட்டிய ஆக்கபூர்வமான, மதிப்புடைய குணாம்சங்களைப் புனருற்பத்தி செய்து கொள்கிறது. மனித சமூக வரலாற்றிலும் கூட ஒவ்வொரு புதிய சமூக அமைப் பும் முந்திய சகாப்தங்களில் தோற்றுவிக்கப்பட்ட பொரு ளாயத, கலாசார மதிப்புகளை சுவீகரித்துக் கொள்கிறது.

நிலைமறுப்பு இணைப்பை, வளர்ச்சியின் தொடர்ச்சியை முன்னிலைப்படுத்துகிறது. நிலைமறுப்பின் விளைவாகத் தோன்றுகின்ற புதிய நிகழ்வு முந்திய கட்டத்தின் சாதனை களைத் தன்வயப்படுத்திக் கொள்கிறது, அதே சமயத்தில் ஏதோ புதிய ஒன்றாக, சாரத்தில் வளமான ஏதோ ஒன்றாக வெளிவருகிறது. நிலைமறுப்பின் நிலைமறுப்பு விதி வளர்ச்சியின் ஏறுமுகத் தன்மையை, கீழ்நிலையானவற்றி லிருந்து உயர்நிலையானவற்றுக்கு, எளிமையானவற்றி லிருந்து சிக்கலானவற்றை நோக்கி முன்னேறிச் செல்வதை விளக்குகிறது.
                  (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)