சமூக-பொருளாதார
உருவாக்கம்.
சமூக-பொருளாதார உரு வாக்கம் என்பது சமூகத்தின் ஒரு ரகம்; ஒரு குறிப்பிட்ட உற்பத்தி
முறையை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய பிரத்யேகமான விதிகளைக் கொண்டு இயங்குகின்ற, வளர்ச்சி
படைகின்ற ஒருங்கிணைந்த சமூக அமைப்பு அது.
உற்பத்தி முறையின் முக்கியமான அம்சம் அது எல்லாக்
காலத்திலும் மாறிக் கொண்டும் வளர்ச்சியடைந்து கொண்டும் இருக்கிறது என்பதாகும். உற்பத்தியில்
மாற்றுங்களும் வளர்ச்சியும் உற்பத்திச் சக்திகளின் மாற்றங்களுடன் தொடங்குகின்றன என்பது
முக்கியமாகும். இம்மாற்றங் களைத் தொடர்ந்து உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
பின்னர் அவை மொத்த சமூக அமைப்பின், சமூகத்தின் மேற்கட்டுமானமாக இருக்கின்ற சமூகக் கருத்துகளின்,
அரசியல் கண்ணோட்டங்களின் மாற்றத்துக்கு இட்டுச் செல்கின்றன.
மேற்கட்டுமானம் பொருளாதார அடிப்படையிலிருந்து (உற்பத்தி,
பரிவர்த்தனை மற்றும் வினியோகச் செயல்முறையில் நிலவுகின்ற உற்பத்தி உறவுகளின் மொத்தம்)
சுயேச்சையாக இருப்பது மட்டுமின்றி, அடிப்படையின் மீதும் தாக்கம் செலுத்துகிறது என்று
மார்க்சியத்தின் மூலவர்கள் வலியுறுத்தினார்கள், "அரசியல், சட்டவியல், தத்துவஞானம்,
சமயம், இலக்கியம், கலை, இதரவற்றின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
ஆனால் இவை அனைத்தும் ஒன்றின் மீதொன்றும் பொருளாதார அடிப்படை மீதும் தாக்கம் செலுத்துகின்றன.
பொருளாதார நிலைமைதான் காரணம் மற்றும் சுறுசுறுப்பான ஒரே சக்தி, மற்றவை அனைத்தும் செயலற்ற
தாக்கத்தையே கொண்டிருக்கின்றன. என்று ஒருவர் கருத முடியும். இல்லை, அதற்கு மாறாக, இடைச்செயல்
பொருளாதார அவசியத்தின் அடிப்படையில் - முடிவில் அது எப்பொழுதும் தன்னை நிறுவிக் கொள்கிறது
- நடைபெறுகிறது” என்று எங்கெல்ஸ் எழுதினார். (Marx, F, Engels, Selected
Correspondence, pp. 441-442.)
மார்க்சிய-லெனினியம் சமூக வாழ்க்கையில் எல்லா அம்
சங்களின் இடைச்செயலைப் பகுப்பாய்வு செய்வதிலிருந்து முன்னேறுகிறது; இந்த இடைச்செயலில்
பொருளாய்தச் செல்வத்தின் உற்பத்தி முறையை முக்கியமான, நிர்ணயகரமான, தலைமையான சக்தி
என்று கருதுகிறது.
ஒரு சமூக-பொருளாதார உருவாக்கத்தை மற்றொரு சமூக-பொருளாதார
உருவாக்கம் ஏன் அகற்றுகிறது. எப்படி அகற்றுகிறது?
உற்பத்தி முறையில் மிகவும் சுறுசுறுப்பான அம்சம்
உற்பத்திச் சக்திகளே. அவை தொடர்ச்சியான இயக்கத்தில் இருக்கின்றன, உற்பத்தி உறவுகளைக்
காட்டிலும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன, உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளிலிருந்து
பின் தங்கி விடுகின்றன, அவற்றுடன் மோது கின்றன, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
பழைய உற்பத்தி உறவுகளுக்கு பதிலாகப் புதிய உற்பத்தி உறவுகள் ஏற்படுவதன் மூலம் இம்மோதல்
தீர்க்கப்படுகிறது.
உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் இயல்பு,
வளர்ச்சி நிலையுடன் பொருந்தியிருக்க வேண்டும் என்னும் மார்க்சிய விதியின் சாரம் இதுவே.
இந்த விதி பொருளாயத் உற்பத்தியின் முன்னேற்றத்துக்கும் அதனுடன் சேர்ந்து மொத்தமாக சமூகத்தின்
முன்னேற்றத்துக்கும் அடிப்படையான இயக்குச் சக்தியாக இருக்கிறது. மனித சமூகத்தின் வரலாறு
முழுவதிலும் இயங்கியுள்ள, மிகவும் சர்வப்பொதுவான விதிகளில் இதுவும் ஒன்று ஆகும்.
உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும்
இடையிலான மோதல் பழைய சமூக-பொருளாதார உருவாக்கம் அழிக்கப்பட்டு அதனிடத்தில் புதியது
ஒன்று ஏற்படுவதை அவசியமாக்குகிறது. அதனால்தான் வரலாற்று ரீதியான வளர்ச்சி என்னும் பாதையில்
சமூகம் முன்னேறி வருகின்ற பொழுது பழைய சமூக-பொருளாதார உருவாக்கங்கள் அழிந்து அவற்றுக்குப்
பதிலாகப் புதியவை ஏற்படுகின்றன. வரலாற்றில் ஐந்து சமூக-பொருளாதார உருவாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன:
பூர்விகக் கூட்டு வாழ்க்கை, அடிமை உடைமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் மற்றும்
கம்யூனிசம் (அதன் முதல் கட்டம் சோஷலிசம் எனப்படும்).
ஒரு சமூக-பொருளாதார உருவாக்கத்திலிருந்து அடுத்த
தற்கு மாற்றம் ஆழமான சமூகக் கொந்தளிப்பைக் குறிக் கிறது; அது புரட்சி என்ற வடிவத்தை
மேற்கொள்கிறது. அடிமை உடைமைச் சமுதாயம் நிலப்பிரபுத்துவ சமுதாயத் துக்கும் அது முதலாளித்துவ
சமூகத்துக்கும் வழிவிட்டதைப் போல் அந்த சமூகம் கம்யூனிசத்துக்கு இடம் கொடுக்கப் போவது
உறுதி. இது மனித சமூகத்தின் வளர்ச்சியில் சமூக வரலாற்று மற்றும் விதிவழிப்பட்ட நிகழ்வுப்
போக்கு ஆகும்.
சமூக வளர்ச்சியின் முற்போக்கான இயல்பை அறிதல் மாபெரும்
செய்முறை முக்கியத்துவத்தைக் கொண்டிருக் கிறது; ஏனென்றால் அது உழைக்கும் மக்களுக்கு
எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும் தங்களுடைய வெற்றியைப் பற்றி உறுதியையும் கொடுக்கிறது.
தங்களுடைய இலட்சியம் வெற்றியடையும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்; ஏனென்றால்
வரலாற்று வளர்ச்சி விதிகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றன,
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)
No comments:
Post a Comment