பொருளாயத உற்பத்தி - வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சி
பின் அடிப்படை. பொருளாயத உற்பத்தியில் ஏராளமான அம்சங்கள் அடங்கியிருக்கின்றன. முதலாவதாக,
மனிதன் தனக்குத் தேவையான பொருட்களை உருவாக்குவதற்கு அவசியமான முதல் பொருட்கள் - இவற்றில்
பூமி, அதன் உட்பகுதி, தாவர உலகம், பிராணி உலகம் அடங்கும்; வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,
மனிதன் தனது உழைப்பில் பயன்படுத்துகின்ற பொருட்கள் அல்லது உழைப்புப் பொருட்கள் தேவைப்படுகின்றன,
பொருளாயத உற்பத்தியில் ஈடுபடுவதற்கு உழைப்புச்சாதனங்கள் அல்லது மக்கள் தமக்கும் உழைப்புப்
பொருட்களுக்கும் இடையில் வைக்கின்ற, அதா வது உழைப்புப் பொருட்களின் மீது செயல்படுகின்ற
பொருட்கள் அவசியமாக இருக்கின்றன. இந்த ரகத்தில் முதலாவதாக, உழைப்புக் கருவிகள் (கோடரி, ரம்பம், கடைசல் கருவி, பலவிதமான இயந்திரங்கள்,
இதரவை) அடங்கும். இக்கருவிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
உழைப்புப் பொருட்களும் உழைப்புக் கருவிகளும் உற்பத்திச் சாதனங்கள் ஆகும்.
உற்பத்திச் சாதனங்கள் தாமாகவே செயல்பட முடியாது.
பொருளாயதச் செல்வத்தைப் படைக்கின்ற நிகழ்வுப் போக்கில் உழைக்கும் மக்கள், (அவர்களுடைய அறிவு, ஆற்றல்) தலைமையான பாத்திரத்தை
வகிக்கின்றனர். மக் கள் உடைப்புச் சாதனங்களைப் படைத்து அவற்றை இயக்கு கிறார்கள். உழைப்புச்
சாதனங்களும் பொருளாயுதச் செல்வத்தைப் படைக்கின்ற மக்களும் சமூகத்தின் உற்பத்திச் சக்திகளாக
இருக்கிறார்கள். உற்பத்திச் சக்திகள் சமூகத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான பொருளாயத
உறவுகளைக் குணாம்சப்படுத்துகின்றன. அவற்றின் வளர்ச்சி மட்டம் இயற்கையின் மேல் மனிதனுடைய
ஆதிக்கத்தின் அளவை எடுத்துக் காட்டுகிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மட்டம் உற்பத்திக்
கருவிகளின் வளர்ச்சியின் அளவினால், உற்பத்தியில் மனித சக்தியின் விகிதாசாரத் தினால்,
மக்களுடைய தொழில் தேர்ச்சியினால், அவர்களுடைய தொழில் நுட்ப அறிவு மற்றும் அனுபவத்தினால்
நிர்ணயிக்கப்படுகிறது.
மக்கள் பழங்காலத்திலிருந்தே உயிர் வாழ்வதற்காக,
தம்மைச் சுற்றியுள்ள பகைமையான சூழலிலிருந்து ஜீவனத்தைப் பெறுவதற்காக, காட்டு விலங்குகளையும்
பாதகமான பருவ நிலைமைகளையும் எதிர்த்துப் போராடுவதற்காக ஒன்றுசேர்ந்து வாழ வேண்டியிருந்தது.
சில மனிதர்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்கின்ற இந்த நிலை உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியுடன்
சேர்ந்து அதிகரித்தது. உழைப்புச் சாதனங்கள், உற்பத்தி அனுபவம் மற்றும் உழைப்பின் உற்பத்திப்
பொருட்கள் மக்களுடைய கூட்டு நடவடிக்கைகளின் விளைவாக ஏற்பட்டன.
மக்கள் பொருளாயதச் செல்வத்தைப் படைக்கின்ற செயல்முறையில்
அவசியமாகவே தமக்குள் உற்பத்தி உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் உற்பத்திச்
சாதனங்கள் மீதான உடைமையை அடிப்படையாகக் கொண் டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,
உற்பத்திச் செயல்முறையின் போது மக்களுக்கு இடை யிலான உறவுகள் பிரதானமாக உற்பத்திச்
சாதனங் களுக்கு யார் உடைமையாளர் என்பதைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன.
உற்பத்திச் சாதனங்கள் பொது உடைமையாக இருக்கின்ற
அமைப்பில் மக்களுக்கு இடையில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி என்னும் உறவுகள் ஏற்படுகின்றன;
அவர்களுடைய உழைப்பின் பலன்கள் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன.
தனியுடைமை சுரண்டல், ஒடுக்குமுறை ஆகிய உறவுகளைத் தோற்றுவிக்கின்றது. சுரண்டல்காரர்கள்
சுரண்டப்படுகின்ற வர்க்கங் களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருளாய்தச் செல்வத்தில் மாபெரும்
பகுதியைச் சுவீகரிக்கின்றார்கள்; ஒடுக்கப்பட்ட மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.
உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் மொத்தமாக
உற்பத்தி முறை எனப்படும். உற்பத்தி முறையும் அதன் உட்பகுதிகளும் -உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் -
மக்களுடைய விருப்பம், சித்தம், உணர்விலிருந்து சுயேச்சையான முறையில் புறநிலை எதார்த்தமாக
இருக் கின்றன. லெனின் உற்பத்தி முறையை சமூகத்தின் 'எலும் புக்கூடு'', "தசை, ரத்தத்தினால்"',
அதாவது மற்ற எல்லா சமூக நிகழ்வுகள், உறவுகள் மற்றும் நிறுவனங்களினாலும் மூடப்பட்ட எலும்புக்கூடு
என்று வர்ணித்தார். (* V.I. Lenin, Collected Works, vol. 1, p. 317.)அவை ஒன்று சேர்ந்து
ஒரு வாழ்கின்ற மொத்தமாக, ஒரு குறிப் பிட்ட சமூக அமைப்பாக, குறிப்பிட்ட சமூக-பொருளாதார
உருவாக்கமாக இருக்கின்றன.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)
No comments:
Post a Comment