Sunday 21 July 2019

1. பருப்பொருள் - அதன் குணாம்சங்களும் வாழ்நிலையின் வடிவங்களும் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


பருப்பொருளும் இயக்கமும். தத்துவஞானத்தின் அடிப்படை யான கேள்விக்கு மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் எப்படி பதிலளிக்கிறது? வெளியுலகம் நம்முடைய உணர் வுக்குச் சம்பந்தமில்லாத முறையில் புறநிலையாக இருக்கிறது என்ற அனுமானத்திலிருந்து அது முன்னேறுகிறது. இது பொருளாயத உலகம்.

மக்கள் சிகப்பு நிறத்துக்கு அப்பால் கண்ணுக்குப் புலப் படாத ஒளிக்கதிர்களை (infra-red radiation) அல்லது ஒலியைக் காட்டிலும் வேகமானவற்றை [ultra-Sound) அறியாத காலம் இருந்தது. அவை இருந்தன, ஆனால் மனிதன் அவற்றை அப்பொழுது அறியவில்லை. அவை மனிதனுடைய உணர்விலிருந்து புறநிலையானவை, சுயேச் சையாக இருப்பவை என்ற காரணத்தினால்தான் மார்க்சிய லெனினியத் தத்துவஞானம் பொருட்கள், நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றையும் பருப்பொருள் என்ற மொத்த இனத்தில் சேர்க்கிறது.

பருப்பொருளை அறிவது எப்படி? வெளியுலகத்திலுள்ள பொருட்களின் பொருளாய்தத் தன்மையை, அப்பொருட் கள் நம்முடைய புலனுறுப்புகளின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்திலிருந்தும் அவை நம்முடைய புலனுணர்ச்சிகளி. னால் பிரதிபலிக்கப்படுகின்ற தன்மையிலிருந்தும் அறிய முடியும். எல்லாவற்றையும் நாம் பார்க்க முடியாது அல்லது உணர முடியாது என்பது உண்மையே. உதாரணமாக, நாம் மின் அலையை அல்லது காந்தக் களத்தை நம்முடைய கைகளால் தொட முடியாது. ஆனால் விசேஷமான கருவி களைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடிக்க முடியும். பருப் பொருள் எந்த வடிவத்திலிருந்தாலும் நம்முடைய உணர்ச்சி களின் மூலமாக நாம் அதை அறிய முடியும்,

“பருப்பொருள்” என்பது பரந்த கருத்து; இரசாயனப் பொருள், புவி ஈர்ப்புக் களம் மற்றும் இதர ஸ்தூலமான ரகங்களில் ஏதாவது ஒன்றுடன் அதை இனங்கண்டு கொள்ளக் கூடாது. பருப்பொருள் என்பது உலகத்தின் ஒருமை மற்றும் பல்வகையானது; பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் -அவற் றின் குணாம்சங்கள், அவற்றுக்கு இடையிலான உறவுகளின் கூட்டு மொத்தம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பருப்பொருள் என்பது நம்முடைய புலனுணர்ச்சிகளின் மூலம் நாம் அறிகின்ற புறநிலை எதார்த்தம் ஆகும்.

பருப்பொருளின் கட்டமைப்பின் வேறுபடுந்தன்மை மற்றும் குறையாத தன்மையைப் பற்றிய ஆராய்ச்சி முடிவு களை ஆதாரமாகக் கொண்டு லெனின் பருப்பொருளைப் பற்றிய தத்துவஞானக் கருத்தைப் பின்வருமாறு வகுத் தளித்தார்: "பருப்பொருள் என்பது மனிதனுடைய புலனுணர்ச்சிகள் அவனுக்கு எடுத்துக்காட்டுகின்ற புறநிலை) எதார்த்தத்தைக் குறிக்கின்ற தத்துவஞான வகையினம்; அந்த எதார்த்தம் தமது புலனுணர்ச்சிகளிலிருந்து சுயேச் சையான முறையில் இருக்கிறது, அவற்றால் பிரதி எடுக்கப் படுகிறது, புகைப்படம் எடுக்கப்படுகிறது, பிரதிபலிக்கப் படுகிறது." (V. I. Lenin, Collected Works, vol. 14, p. 130.)

பருப்பொருளைப் பற்றி லெனின் கொடுத்துள்ள வரை யறுப்பு ஏற்கெனவே மனிதன் அறிந்திருக்கின்ற பொருட் களை மட்டுமன்றி, எதிர்காலத்தில் அறிவியல் கண்டுபிடிக்கக் கூடிய பொருட்களையும் உள்ளடக்கியிருக்கிறது. மக்கள் விண்வெளிக்குள் ஊடுருவுவதன் மூலம் அல்லது அணுத் திரண்மங்களை ஆராய்வதன் மூலம் பருப்பொருளின் புதிய ரகங்களைக் கண்டுபிடிப்பது உறுதி. ஆனால் பருப்பொருள் எவ்விதமான புதிய குணாம்சங்களைக் கொண்டிருந்தாலும் அது இன்னும் நம்முடைய உணர்விலிருந்து தனித்த முறை யில் புறநிலை எதார்த்தமாகவே இருக்கும்.

நம்மைச் சுற்றி இருக்கின்ற உலகம் ஒன்றுபட்ட பொரு ளாயத உலகம் ஆகும். எல்லாப் பொருட்களும் எல்லா நிகழ்வுப் போக்குகளும் பருப்பொருளின் வெளிப்பாடுகளும் வடிவங்களும் மட்டுமே. அறிவியலின் வளர்ச்சியும் மனித னுடைய மொத்த செய்முறை நடவடிக்கையும் உலகத்தின் பொருளாயத ஒருமையின் இருத்தலைச் சுட்டிக் காட்டு கின்றன. வான இயல், பெளதிகம் மற்றும் இரசாயன இயல் பூமி மற்றும் வான மண்டலத்திலுள்ள பொருட்களின் பெளதிக- இரசாயனக் கட்டமைப்பின் ஓரினத் தன்மையைச் சுட்டிக் காட்டுவதுடன் அவற்றின் இயக்கத்தை அதே விதிகள் நிர்ணயிக்கின்றன என்பதையும் நிரூபிக்கின்றன. உயிரியலும் மரபுவழிப்பண்பியலும் அனைத்து உயிரிகளின் கட்டமைப்பிலும், செயல்பாட்டிலும் உள்ள ஒருமையை, நிரூபிக்கின்றன. உடலியல் ஆன்மிக ஆற்றலுக்குப் பொரு ளாயத அடிப்படை இருப்பதை நிரூபிக்கிறது.

புறநிலை எதார்த்தம் என்ற முறையில் பருப்பொருளைப் பற்றிய கருதுகோள் பருப்பொருளின் எல்லா இயல்புகள், இயக்கத்தின் வடிவங்கள், இருத்தலின் விதிகள் இதரவற்றைக் குறிக்கிறது.

பருப்பொருளின் அழியாத இயல்புகளில் ஒன்று அது இயக்கத்தில் மட்டுமே இருக்கிறது, “...சாதாரண இடப் பெயர்ச்சி முதல் சிந்தனை வரை பிரபஞ்சத்தில் நிகழ்கிற எல்லா மாற்றங்களையும் வளர்ச்சிப் போக்குகளையும் விரி வாகத் தழுவுகிறது'', (கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், வி. இ. லெனின், இயக்கவியல் பொருள் முதல்வாதம், பக்கம் 85.) பிரபஞ்சத்தில் நடைபெறுகின்ற எல்லா பெளதிக, இரசாயன மற்றும் இதர நிகழ்வுப் போக்குகள் நின்று விடுவதாகக் கற்பனை செய்யுங்கள். உலகம் மொத்தமாக மறைவதற்கு அது சமமாக இருக்கும்.

பொதுவாக மாற்றம், முடிவில்லாத வளர்ச்சி நிகழ்வுப் போக்கு என்று கருதப்படுகின்ற இயக்கம் பருப் பொருளின் அடிப்படையான இயல்பு, அதன் இருத்தலின் சாதனம். எளிய துகள்கள், அணுக்கள், மூலக்கூறுகளின் இயக்கம் எல்லா பொருளாயதப் பொருட்களிலும் நடைபெறு கிறது. அப்படிப்பட்ட ஒவ்வொரு பொருளும் புறச்சூழலுடன் இடைச் செயல் புரிகிறது, அந்த இடைச் செயல் ஏதா வதொரு வகையான இயக்கமாகும். பூமியைப் பொறுத்த மட்டில் இயங்கா நிலையில் இருக்கின்ற எந்தவொரு பொருளும் அதனுடன் சேர்ந்து சூரியனைச் சுற்றி வருகிறது; சூரியனுடன் சேர்ந்து நட்சத்திர மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்களைப் பொறுத்தமட்டில் நகர்ந்து கொண் டிருக்கிறது; நட்சத்திர மண்டலம் இதர நட்சத்திர மண்டலங் களைப் பொறுத்தமட்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது, இதரவை. முற்றிலும் இயங்கா நிலை, முற்றிலும் சமநிலை, அசைவில்லாத நிலை என்று எதுவும் இல்லை, எந்த இயங்கா நிலை அல்லது, சமநிலையும் சார்புநிலையானவையே. உதார ணமாக, ஒரு பொருள் பூமியைப் பொறுத்தமட்டில் முற்றி லும் இயங்கா நிலையில் இருக்க முடியும்; ஆனால் அதே சமயத்தில் நம்முடைய கிரகத்துடன் சேர்ந்து சூரியனைச் சுற்றி வர முடியும்.

அறிவியல் இயக்கத்தின் பின்வரும் வடிவங்களை வரை யறுத்திருக்கிறது: இயந்திர வடிவம் (இடஞ்சார்ந்த இயக்கம்); பெளதிக வடிவம் (மின் காந்தம், புவி ஈர்ப்பு, வெப்பம், ஒலி, பொருளின் மொத்த நிலைகளில் மாற்றங்கள், இதரவை); இரசாயன வடிவம் (பொருட்களில் உள்ள அணுக்கள், மூலக்கூறுகளின் மாற்றம்); உயிரியல் வடிவம் (உயிரிகளின் வளர்சிதை மாற்றம்); சமூகவியல் வடிவம் (சமூக மாற்றங்கள், சிந்தனை நிகழ்வுப் போக்குகள்). இயக்கத்தின் புதிய வடிவங்கள் பல் சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன. எளிய துகள்களின் போக்குவரத்து மற்றும் உருமாற்றம், அணுக்கூறுகள், அணுக்கருக்களுக்கு உள்ளே நடைபெறுகின்ற நிகழ்வுப் போக்குகள், இதரவை இவற்றில் அடங்கும்.

ஆகவே இயக்கம் என்பது பருப்பொருளின் சர்வப் பொதுவான இயல்பு, அதன் இருத்தலின் சாதனம். இயக்கம் இல்லாமல் பருப்பொருள் இருக்க முடியாது; பருப்பொருள் இல்லாமல் இயக்கம் இருக்க முடியாது.
                                 (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment