Sunday, 21 July 2019

3. உணர்வு - உயர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பண்பு– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உணர்வு - உயர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பண்பு. மனிதனுக்கு உணர்வு இருக்கிறது. அதாவது சிந்திக்க, உணர், அறியக் கூடிய திறமை, சொந்தக் கருத்துகள், எண்ணங்கள், இதரவற்றை உருவாக்கிக் கொள்கின்ற ஆற்றல் இருக்கிறது. இந்த நிகழ்வின் உண்மையான இயல்பு என்ன, அதன் பிறப்பிடம் எங்கே இருக்கிறது, உணர்வுக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவு என்ன என்ற கேள்வி தானாகவே தோன்றுகிறது.

மிகவும் தொன்மையான காலத்தில் மனிதன் தன்னுடைய அறிவின் மர்மத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். உயிரில்லாத பருப்பொருள் ஒரு குறிப்பிட்ட வார்ச்சிக் கட்டத்தை அடைந்ததும் உயிருள்ள பருப்பொருளை எப் படித் தோற்றுவிக்கிறது, அது உணர்வை எப்படி உருவாக்கு கிறது என்பதைப் பற்றி மக்கள் வியப்படைந்தார்கள்.

பருப்பொருளின் நீண்ட பரிணாமத்தின் விளைவாக உணர்வு உருவாகிறது என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித் திருக்கிறது. பருப்பொருள், இயற்கை ஆகியவை எப் (பொழுதுமே இருந்து வந்திருக்கின்றன. ஆனால் சிந்திக் கின்ற திறனுடைய மனிதன் தோன்றுவதற்குப் பல மில்லியன் ஆண்டுகளாயின.

உணர்வு வளர்ச்சியடைகின்ற பருப்பொருளிலிருந்து தோன்றியது; அதிலிருந்து அதைப் பிரிக்க முடியாது. பருப்பொருளிலிருந்து சுயேச்சையான முறையில் தோன்றி யிருக்கக் கூடிய உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஒரு வரும் ஒருபோதும் அனுபவித்ததில்லை. எல்லா மனிதர் சுளுக்கும் மூளை சிந்தனை உறுப்பாக இருக்கிறது; மூளை இருப்பதால் மட்டுமே உணர்வு இருக்கிறது. வேறு வார்த்தை களில் சொல்வதென்றால், உணர்வு எந்த ரகத்தைச் சேர்ந்த பருப்பொருளுக்கும் இயல்பு அல்ல; அது உயர்ந்த அமைப்பு ரீதியாக்கப்பட்ட பருப்பொருளுக்கு மட்டுமே இயல்பாகும், அது மனித மூளையின் நடவடிக்கையுடனும் பிரத்யேகமான மனிதத் தன்மையைக் கொண்ட, சமூக வாழ்க்கை முறை யுடனும் இணைந்திருக்கிறது.

உணர்வு மூளை இருத்தலை மட்டுமின்றி, மூளையின் மீது தாக்கம் செலுத்தி அதனால் பிரதிபலிக்கட்டாடுகின்ற பொருளாயதப் பொருட்களின் இருத்தலையும் வலியுறுத்து கிறது. பொருளாயத உலகம் புலனுறுப்புகளின் மூலமாக மூளையின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் வழியே உணர்வு தோன்றுகிறது. நம்முடைய புலனுறுப்புகள் உயிரி யின் உடலுக்குள் அல்லது புறச் சூழலில் ஏற்படுகின்ற பல்வேறு மாற்றங்களைப் பிரதிபலித்து உடலுக்குச் சமிக்கை அளிக்கின்ற "கருவிகளே''. நம்முடைய புலனுறுப்பு களிலிருந்து (காண்பது, கேட்டல், முகர்தல், ருசித்தல், தொடுதல், மூளைக்கு வருகின்ற சமிக்கைகள் பொருட்களின் இயல்புகளையும் அவற்றின் இணைப்புகளையும் அவை ஒன்றோடொன்று வைத்திருக்கின்ற தொடர்புகளையும் பற்றி செய்திகளைத் தருகின்றன, புலனுறுப்புகளின் மீது தாக்கத்தினால் கிளறிவிடப்படுகின்ற தூண்டுதல் மூளையை அடைகின்ற பொழுது மட்டுமே புலனுணர்ச்சியாக, உணர்வுக் காரணியாக ஆகிறது.
         (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment