சமூக உணர்வின் பாத்திரம். சமூக உணர்வு என்பது சமூகத்தில்
இருக்கின்ற, மக்களுடைய வாழ்க்கையின் பொருளாயத நிலைமைகளைப் பிரதிபலிக்கின்ற கருத்துகள்,
தத்துவங்கள், எண்ணங்கள், கண்ணோட்டங்கள், உணர்ச்சிகள், பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளின்
மொத்தம் என்று மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் வரையறுக்கிறது.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சமூக உணர்வு
சமூக வாழ்நிலையை அல்லது மக்களுக்கு இடையிலுள்ள பொருளாயத உறவுகளைப் பிரதிபலிக்கிறது.
சமூக வாழ் நிலை என்பது மக்களுடைய பொருளாயத வாழ்க்கையையும் பொருளாய்தச் செல்வத்தின்
உற்பத்தி நிலைமைகளை யும் குறிக்கிறது என்றால் "சமூக உணர்வு”' என்னும் கருத்தமைப்பை
அவர்களுடைய அறிவு சார்ந்த நடவடிக் கைக்கும் கையாள முடியும்.
சமூக வாழ்நிலை சமூக உணர்வின் உள்ளடக்கத்தையும் அதன்
வர்க்க சாராம்சத்தையும் நிர்ணயிக்கிறது. அதே சமயத்தில் சமூக உணர்வு செயலற்றதல்ல, அதற்கு
முதலில் உயிர் கொடுத்த சமூக வாழ்நிலையின் மீது தாக்கம் செலுத்துகிறது.
இத்தாக்கம் சமூக உணர்வின் தன்மையை, அதாவது அதிலடங்கியிருக்கின்ற
கருத்துகள், தத்துவங்கள், கண்ணோட்டங்களைப் பொறுத்திருக்கிறது. இந்த சமூகத் தத் துவங்களும்
கருத்துகளும் உள்ளடக்கத்தில் இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவை. ஒரு பக்கத்தில் பழமையானவை,
பிற்போக்கானவை; மறு பக்கத்தில் புதியவை, முற்போக்கானவை, பழைய கருத்துகளும் தத்துவங்களும்
மறைந்து கொண்டிருக்கின்ற வர்க்கங்களின் நலன்களைப் பிரதிபலித்து வெளியிடுகின்றன, ஆகவே
அவை சமூக வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சியின் மீது பாதகமான தாக்கத்தைக் கொண் டிருக்கின்றன,
ஏனென்றால் அவை இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகின்றன. இதிலிருந்து மாறுபட்ட முறையில்
புதிய, முற்போக்கான கருத்துகளும் தத்துவங்களும் முற்போக்கான வர்க்கங்கள், சமூகப் பிரிவுகளின்
நலன்களைப் பிரதிபலிக்கின்றன; அதன் விளைவாக அவை சமூக முன் னேற்றத்தைத் தூண்டுகின்றன.
உணர்வு சமூக உணர்வு, தனிமனித உணர்வு என்னும் இரண்டு
ரகங்களைக் கொண்டிருக்கிறது. தனிமனித உணர்வு என்பது ஒரு தனி நபருடைய ஆன்மிக உலகமாகும்;
அவருடைய சிந்தனைகள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் விருப்பார்வங்கள். அது ஒரு
குறிப்பிட்ட மனித ருடைய வாழ்க்கையில், அவருடைய செய்முறை நடவடிக்கையின் நிகழ்வுப் போக்கில்
உருவாகி அவருடைய இருத்த லின் பொருளாயத நிலைமைகளைப் பிரதிபலிக்கிறது. தனி மனித உணர்வு
என்பது ஒரு தனி நபருடைய செய்முறை அனுபவம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் வெளி யீடாகும்.
மக்களுடைய பொது நலன்களை வெளியிடுகின்ற கருத்து கள்,
கண்ணோட்டங்கள், உணர்ச்சிகள், விருப்பார்வங்கள் சமூக உணர்வாக இருக்கின்றன. ஒரு வர்க்க
சமூகத்தில் இவை ஒரு வர்க்கம், சமூகப் பிரிவின் அல்லது ஒரு மக்கள் கூட்டின் பொது நலன்களாக
இருக்கின்றன.
உணர்வின் இந்த இரண்டு ரகங்களும் பின்னிப் பிணைந்
திருக்கின்றன; அவை இயக்கவியல் ஒற்றுமையில் இருக்கின்றன. சமூக உணர்வு தனிமனித உணர்வின்
மூலமாகவே வெளிப்படுகிறது; ஏனென்றால் எந்த ஒரு நபரும் சமூகத்தில் வாழ்கிறார், உழைக்கிறார்,
ஒரு குறிப்பிட்ட வர்க்கம், தேசிய இனம் மற்றும் சமூகக் கூட்டைச் சேர்ந்தவராக இருக்கிறார்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)
No comments:
Post a Comment