உணர்வு என்பது
புறநிலையான உலகத்தின் அகநிலையான பிம்பம். ஒரு பிம்பத்தின் அகநிலைத் தன்மையைப் பற்றி நாம்
பேசுகின்ற பொழுது அந்த பிம்பம் ஒரு மனிதனுடைய மூளையில் உருமாற்றப்பட்டு மறு செயல்முறைக்கு
உள் ளாகிய பொருளாயத நிலை என்று பொருள் கொள் கிறோம். மனிதனுடைய மூளையில் ஒரு பொருள்,
ஒரு வஸ்து ஒரு பிம்பமாகிறது, ஸ்தூலமான பொருள் அதன் முன்மாதிரியாகிறது. பொருள்முதல்வாதிக்கும்
கருத்து முதல்வாதத் தத்துவத்தை ஆதரிப்பவருக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு - பொருள்முதல்வாதி
புலனு ணர்ச்சி, புலனறிவு, எண்ணம் பொதுவாக மனிதனுடைய உணர்வு ஆகியவை புறநிலை எதார்த்தத்தின்
பிம்பம் என்று கருதுகின்ற மெய்விவரத்தில் அடங்கியிருக்கிறது. உலகம் என்பது நம்முடைய
உணர்வினால் பிரதிபலிக்கப் படுகின்ற புறநிலை எதார்த்தத்தின் இயக்கம் ஆகும். எண்ணங் கள்,
புலனறிதல்கள், இதரவற்றின் இயக்கம் எனக்கு வெளியே இருக்கின்ற பருப்பொருளின் இயக்கத்துடன்
பொருந்துகிறது'' என்று லெனின் கூறினார். (* V. L Lenin, Collected Works, vol. 14,
p. 267)
மனிதனுடைய புலனுணர்ச்சிகளும் சிந்தனைகளும் புற நிலையான
உலகத்தின் பொருட்களின் பிம்பங்கள், பிரதிகள் என்று லெனின் கூறுகின்ற பொழுது நம்மைச்
சுற்றியுள்ள பொருட்களை நம்முடைய உணர்வில் தன்னியக்க, செயலற்ற (முறையில் புகைப்படம்
எடுத்தல் என்பது அர்த்தமல்ல. மனிதனுடைய மூளை புகைப்படத் தகடு அல்ல, அது கண்ணாடியும்
அல்ல. ஒரு நபர் தன்னுடைய சமூக வளர்ச்சி, கல்வி நிகழ்வுப் போக்கில், சமூக நடைமுறை நிகழ்வுப்
போக்கில் வெளியுலகத்தைப் புறநிலை ரீதியில் பிரதிபலிக்கின்ற திறமையை வளர்த்துக் கொள்கிறார்.
அவருடைய படைப்புத் திறமை, ஆற்றல்கள் வளர்ச்சி யடையவில்லை என்றால் இப்பிரதிபலிப்பு ஏற்படாது.
அவர் பொருட்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் வேறுபடுத்திக் கொள்வதற்கும், பொதுமையில்
குறிப்பிட்டவற்றைக் காண் பதற்கும் படைப்புத் திறமை அவசியம்.
உலகத்தை மாற்றுவதற்கும் மனிதன் மற்றும் சமூகத்தின்
நலன்களுக்கு அதை உட்படுத்துவதற்கும் உரிய மனிதனுடைய நடவடிக்கை உணர்வின் தோற்றம் மற்றும்
வளர்ச்சியின் முக்கியமான சாரமாகவும் வரலாற்று அவசியமாகவும் இருக்க கிறது. லெனின் உணர்வின்
சுறுசுறுப்பான பாத்திரத்தைப் பின்வரும் சொற்களில் தொகுத்துக் கூறினார்: ''மனிதனு டைய
உணர்வு புறநிலை உலகத்தைப் பிரதிபலிப்பது மட்டும் மின்றி, அதைப் படைக்கிறது. உலகம் மனிதனுக்குத்
திருப்தி அளிக்கவில்லை, மனிதன் தன்னுடைய நடவடிக்கை யினால் அதை மாற்ற முடிவு செய்கிறான்.”
(Lenin, Collected Work S. vol. 38, pp. 212-213)
மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் - இயக்கவியல் பொருள்முதல்வாதம்
- பருப்பொருள் முதன்மையானது, உணர்வு, சிந்தனை மற்றும் உணர்ச்சி இரண்டாம் நிலையானது,
பருப்பொருளிலிருந்து தோன்றியது என்று கருதுகிறது. உணர்வு பருப்பொருளிலிருந்து, இயற்கையி
லிருந்து, அதன் வளர்ச்சியின் மிக உயர்ந்த உற்பத்தியாகத் தோன்றுகிறது. உணர்வு வெறும்
பிம்பமே, வெளியுலகத்தின் பிரதிபலிப்பே.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)
No comments:
Post a Comment