இயக்கவியல்
- வளர்ச்சி மற்றும் சர்வாம்சத் தொடர்பு பற்றிய போதனை. பொருள்முதல்வாத இயக்கவியல்
இயற்கையும் நம்மைச் சுற்றியுள்ள உலகமும் ஓய்வு நிலையில், அசையா நிலையில், தேக்க நிலையில்,
மாறா நிலையில் இருப்பதாகக் கருதவில்லை, ஆனால் அவை தொடர்ச்சியான இயக்கம் மற்றும் மாற்றம்
அல்லது உள்முரண்பாடுகளினால் தூண்டப் படுகின்ற தொடர்ச்சியான புத்தெழுச்சி மற்றும் வளர்ச்சி
நிலையில் இருக்கின்றன என்று கருதுகிறது. லெனின் தன் னுடைய இயக்கவியல் பிரச்சினையைப்
பற்றி (தத்துவஞானக் குறிப்பேடுகளில் ஒரு பகுதி) என்னும் கட்டுரையில் இயக்க வியலின்
கரு முரண்பாடுகளின் தத்துவம், எதிர் நிலைகளின் ஒருமைத் தத்துவம் என்ற அடிப்படையான கருத்தை
மார்க்சிய வரலாற்றில் முதல் தடவையாக வகுத்துக் கூறி நிறுவினார். சுருக்கமாகச் சொல்வதென்றால்,
இயக்க வியலை எதிர்நிலைகளின் ஒருமைத் தத்துவம் என்று வரையறுக்க முடியும்'' என்று அவர்
எழுதினார். (* Ibid, p. 222,)
பொருள்முதல்வாத இயக்கவியல் வளர்ச்சியின் தோற்று
வாய்களைப் பொருட்கள், நிகழ்வுகளிலேயே உள்ளுறையாக இருக்கின்ற முரண்பாடுகளில் காண்கிறது.
அது வளர்ச்சி யைக் கீழ்நிலையிலிருந்து உயர்நிலைக்கு, எளிமையான வற்றிலிருந்து சிக்கலானவற்றுக்கு
இயக்கம், பாய்ச்சலான, புரட்சிகர நிகழ்வுப் போக்கு என்று கருதுகிறது. இந்த இயக்கம் மூடிய
வளையத்துக்குள் நடைபெறவில்லை, ஒரு சுழலேணியில் நடைபெறுகிறது; அதன் ஒவ்வொரு சுழலும்
முந்தியதைக் காட்டிலும் ஆழமானதாக, வளமானதாக, பன்முகத்தன்மை உடையதாக இருக்கிறது.
பொருள்முதல்வாத இயக்கவியலுக்கு எதிரிடையான இயக்கமறுப்பியல்
மாற்றத்தை, பொதுவாக வளர்ச்சியை நிராகரிக்கிறது, அல்லது இந்த வளர்ச்சியை வெறும் அளவு
ரீதியில் குறைத்தல் அல்லது சேர்த்தல் என்பதாகச் சுருக்கி விடுகிறது. இயக்கமறுப்பியல்
நிகழ்ச்சிகளின் வளர்ச்சியின் உள் தோற்றுவாயை (முரண்பாடுகளைக்) காண்பதில்லை.
பொருளாயத உலகம் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பது மட்டுமின்றி,
ஒரு ஒற்றை மொத்தமாகவும் இருக்கிறது. வெவ்வேறு பொருட்களுக்கு இடையில், ஒவ்வொரு தனிப்
பொருளின் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் கூறுகளுக்கு இடையில் தொடர்பும் இடைச்செயலும் இல்லாமல்
வளர்ச்சி என்பது சாத்தியமல்ல. ஒவ்வொரு பொருளும் உலகத்தில் இதரவற்றுடன் இணைக்கப்பட்டு,
கடைசிப் பகுப்பாய்வில், எல்லாம் எல்லாவற்றுடன் சர்வப்பொதுவான தொடர்பும் இடைச் செயலும்
கொண்டிருக்கின்ற ஒற்றை அங்கக நிகழ்வுப் போக்காக இருக்கிறது. ஏதாவதொரு நிகழ்வைச் சரியாகப்
புரிந்து கொண்டு ஆராய வேண்டுமென்றால் அதை மற்ற நிகழ்வுகளுடன் தொடர்புடைய முறையில் பார்க்க
வேண்டும், அதன் தோற்றுவாய்களும் வளர்ச்சியும் நெருங்கி ஆராயப்பட வேண்டும் என்பதற்கு
இதுவே துல்லியமான காரணம் ஆகும். இயக்கவியல் சர்வப்பொதுவான தொடர் பின் விஞ்ஞானம் என்று
கூறப்படுவதற்கும் இதுவே காரணம்.
உலகத்தை ஒற்றை அங்கக மொத்தமாக ஆராய்தல், தனிப் பொருட்களுக்கு
இடையில் சர்வப்பொது இணைப்பு களை ஆராய்தல் ஆகியவற்றுக்குப் பொருள்முதல்வாத இயக்கவியலின்
விதிகளும் வகையினங்களும் துணை புரிகின்றன.
விதி என்பது என்ன? அதன் தத்துவஞான விளக்கம் என்ன?
விதி என்பது நிலையான தன்மை, திரும்பத் திரும்ப நிகழுதல் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட,
நிகழ்வுகள் மற்றும் பொருட்களுக்கு இடையில் உள்ள புறநிலையான, பொதுப்படையான, அவசியமான,
இன்றி யமையாத தொடர்பு ஆகும்.
மக்கள், இயற்கை மற்றும் சமூகத்தின் விதிகளைப் பற்றிய
தம்முடைய அறிவை ஆதாரமாகக் கொண்டு உணர்வுபூர்வ மாக நடந்து கொள்கிறார்கள், சம்பவங்கள்
நிகழவிருப்பதை முன்னரே அறிந்து கொள்கிறார்கள், இயற்கையின் பொருட் களையும் அவற்றின்
இயல்புகளையும் சமூக நலன்களுக்காக மாற்றியமைக்கிறார்கள், குறி வழிப்பட்ட முறையில் சமூக
நிலைமைகளை மாற்றுகிறார்கள். இடையிணைப்பைப் புரிந்து கொண்டதும் இருக்கின்ற நிலைமைகளின்
நிரந் தரமான அவசியத்தைப் பற்றி எல்லாத் தத்துவ ரீதியான நம்பிக்கைகளும் - அவை நடைமுறையில்
வீழ்ச்சியடைவதற்கு முன்பே - வீழ்ச்சி அடைந்து விடுகின்றன'' என்று மார்க்ஸ் எழுதினார்.
(* கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள் தொகுதி 6, பக்கம் 178.)
தனிப்பட்ட விதிகள் இயற்கை, சமூகம் அல்லது சிந்தனை
யின் தனித்துறைகளில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை எடுத்துக் கொள்கின்றன, ஆனால் மார்க்சிய-லெனினியத்
தத்துவஞானம் உலகத்தின் சர்வப்பொதுவான இடைத் தொடர்புகளை நிறுவுகின்ற பொது விதிகளை ஆராய்
கிறது. இந்த விதிகள் எல்லாப் பொருட்கள், நிகழ்வு களுக்கும் கையாளப்படுகின்றன; இவை இயக்கவியலின்
விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)
No comments:
Post a Comment