மார்க்சிய-லெனினியம் தத்துவஞானத்தில் மெய்யான புரட்சியை
நிறைவேற்றியிருக்கிறது. அது முற்றிலும் புதிய உலகக் கண்ணோட்டத்தை, பாட்டாளி வர்க்கத்தின்
உலகக் கண்ணோட்டத்தை, மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தைப் படைத்திருக்கிறது.
உலகம் பொருளாயதமான இயல்பைக் கொண்டது, அதில் எல்லாமே
மாறிக் கொண்டும் வளர்ச்சியடைந்து கொண்டும் இருக்கின்றன, கீழ்நிலையானவற்றிலிருந்து உயர்
நிலையானவற்றுக்கு, பழமையிலிருந்து புதுமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்று
நிரூபிக்க முனைந்த ஒரே விஞ்ஞானத் தத்துவம் மார்க்சிய-லெனினியத் தத் துவஞானமே. அது மற்ற
எல்லா விஞ்ஞானங்களின் முடிவுகளையும் தொகுப்பதுடன் அவற்றுக்கு அறிதலைப் பற்றிய இயக்கவியல்
முறையை, நிகழ்வுகளை ஆராய்வதற்குச் சரி யான அணுகுமுறையைத் தருகிறது.
மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் உலகத்தைப் பற்றிய
சரியான சித்திரத்தைத் தருவதன் மூலம், இயற்கை மற்றும் சமூகத்தின் வளர்ச்சியின் அதிகப்
பொதுவான விதிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் புரட்சிகரமான நடவடிக்கைக்கு சக்தி வாய்ந்த
கருவியாக, ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ் வின் எல்லாவிதமான வடிவங்களையும் எதிர்த்துப் போராடி
நியாயமான, புதிய சமூகத்தை நிர்மாணிக்கின்ற கோடிக் கணக்கான மக்களின் உலகக் கண்ணோட்டமாக
இருக்கிறது. மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் மார்க்சியக் கட்சிகளின் போர்த்திட்டம்
மற்றும் செயல்தந்திரத்தின் தத்துவ அடிப்படையாக இருக்கிறது.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete