தத்துவஞானத்தின்
அடிப்படைக் கேள்வி.
நெடுங்காலத்துக்கு முன்பு மக்கள் முதன்முறையாக உலகத்தின் தோற்றுவாய்கள், அதன் கட்டமைப்பு,
அந்த உலகத்தில் மனிதன் வகித்த இடம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்த பொழுது தத்துவஞானம்
தோன்றியது.
நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருட்களும் பொரு ளாயதமானவை
அல்லது கருத்தியலானவை அல்லது பொரு ளாயதம் அற்றவை என்ற உண்மை உலகத்தைப் புரிந்து கொள்வதற்கு
முக்கியமானதாகும். சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி மக்களுடைய அணுகுமுறை என்ன, உலகத்தின்
தோற்றத்தை அவர்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் ஆகியவை தத்துவஞானிகளைக் கருத்துமுதல்வாதிகள்,
பொருள்முதல்வாதிகள் என்னும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றன. வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும்,
பொருளாயதத்துக்கும் ஆன்மிகத்துக்கும் இடையிலுள்ள உறவு தத்துவஞானத்தின் அடிப்படைக் கேள்வியாகும்.
இந்த இரண்டு பிரிவினரும் பல நூற்றாண்டுகளாக இதைப் பற்றிக் காரசாரமான போராட்டத்தை நடத்தி
வருகிறார்கள்.
பருப்பொருள் முதன்மையானது, உணர்வு இரண்டாம் நிலையானது,
உணர்வு பருப்பொருளிலிருந்து தோன்றுகிறது என்று பொருள்முதல்வாதிகள் கருதுகிறார்கள்.
நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை; அது சுயேச்சையான எந்த அறிவினாலோ,
ஆன்மாவினாலோ படைக்கப்படவில்லை. உணர்விலிருந்து சுயேச்சையாக இருக்கின்ற புறநிலையான பொருட்களை
மக்களுடைய உணர்வு பிரதிபலிக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இயற்கை தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்டே!
மெய்ப்பொருள் (பகுத்தறிவு, ஆன்மா, இதரவை) இருக்கிறது. உண்மையில் அதைப் படைத்ததும் அதுவே
என்று கருத்துமுதல்வாதிகள் கூறுகிறார்கள். ஆனால் எந்த உணர்வு உலகத்தைப் படைத்தது''
என்ற கேள்விக்குப் பதிலளிக் கின்ற பொழுது கருத்துமுதல்வாதிகள் பிரிந்து விடுகிறார்கள்.
வெளியுலகத்தின் பொருட்களும் நிகழ்வுகளும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனாலும் படைக்கப்பட்டவை
என்று அகநிலைக் கருத்துமுதல்வாதிகள் கருதுகிறார்கள், "மொத்த உலகமும் என்னுடைய
பல உணர்ச்சிகளின் தொகுதியே'' என்னும் வாக்கியத்தில் அவர்கள் தம்முடைய தத்துவம் முழுவதையும்
சுருக்கிக் கூறுகிறார்கள். பொரு ளாய்த் உலகம் தனி நபருடைய உணர்வுக்கு அப்பால் எங்கோ
இருக்கின்ற ஏதோ ஒரு விதமான சர்வப்பொது அறிவின் விளைவு என்று புறநிலைக் கருத்துமுதல்வாதிகள்
கருது கிறார்கள்.
தத்துவஞானத்தின் அடிப்படையான கேள்வி இரண்டு அம்சங்களில்
ஆராயப்படுகிறது. முதலில் தோன்றியது பருப் பொருளா, உணர்வா என்ற கேள்வி இதில் ஒரு அம்சமாகும்;
உலகம் அறியப்படக் கூடியதா, மனிதன் இயற்கையின் ரகசியங்களுக்குள் ஊடுருவிச் சென்று அதன்
விதிகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு இரண்டாவது அம்சம் பதிலளிக்க முற்படுகிறது.
உலகம் அறியப்படக் கூடியதே என்று பொருள்முதல்வாதிகள் வலியுறுத்துகிறார்கள். சில கருத்துமுதல்வாதிகள்
இதை மறுத்து உலகம் அறியப்படக் கூடியதல்ல என்று கூறுகிறார்கள். ஆகவே அவர்கள் அறியொணாவாதிகள்
என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு நபர் தன்னுடைய சொந்தச் சிந்தனைகள், உணர்ச்சிகளை மட்டுமே
அறிய முடியும் என்று அகநிலைக் கருத்துமுதல் வாதிகள் கூறுகிறார்கள். மனிதன் மெய்ப்பொருள்"',
ஏதோ ஒரு வகையான இறைஞானப் “பரம கருத்து, இதரவற்றை மட்டுமே அறிய முடியும் என்று புறநிலைக்
கருத்துமுதல்வாதிகள் வலியுறுத்துகிறார்கள்.
வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் இடையேயுள்ள உறவு மற்றும்
உலகத்தை அறிதல் பற்றிய கேள்வி தத்துவஞானத்தின் அடிப்படையான கேள்வியாகும், ஏனென்றால்
இதற்குத்தரப்படுகின்ற பதிலே சுற்றியுள்ள உலகத்தின் வளர்ச்சி விதிகளின் தன்மை, உலகத்தை
அறிகின்ற வழிகள், இதரவை போன்ற தத்துவஞானப் பிரச்சினைகள் அனைத்தின் தீர்வுக்கும் ஆதாரமாக
இருக்கிறது. உதாரணமாக, உணர்வு, மெய்ப்பொருள் அல்லது கருத்து முதன்மையானது என்றால்,
நிலவுகின்ற சுரண்டல் சமூக அமைப்பு மாற்றப்பட முடி யாதது. நிரந்தரமானது என்று கருதப்படும்;
அது கடவுளால் படைக்கப்பட்டது, ஆகவே அதை மாற்ற முடியாது. பருப்பொருள் முதன்மையானது என்றால்,
மக்கள் தம்மால் வெறுக்கப்படுகின்ற சமூக-பொருளாதார அமைப்பை ஒழித்து சுரண்டலற்ற புதிய
சமூகத்தை நிர்மாணிக்க முடியும். கருத்துமுதல்வாதம் பிற்போக்கான சமூக சக்திகளின் நலன்களுக்குப்
பாடுபடுகிறது, பொருள்முதல்வாதம் முற்போக் கான, புரட்சிகர சக்திகளின் நலன்களுக்கு உதவுகிறது.
No comments:
Post a Comment