சமூகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் உழைப்பின்
பாத்திரம். மனிதன் தோன்றியதிலிருந்து மனித சமூகம் தொடங்கியது. பூமியில் சுமார்
40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் இன்றைய வடிவத்தில் தோன்றினான்; ஆனால் உயிரின் தோற்றம்,
மிகப் பூர்விகமான, எளிமையான வடிவங்களிலிருந்து மனிதனைப் படைத்த உயிருலகத்தின் பரிணாமம்
அதற்குப் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
மனிதன் விலங்குலகத்திலிருந்து தோன்றினான், இன்னும்
துல்லியமாகக் கூறுவதென்றால் மிகவும் வளர்ச்சியடைந்த மனிதக் குரங்கிலிருந்து தோன்றினான்
என்பதை சார்லஸ் டார்வின் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தார். ஆனால் அது எப்படி ஏற்பட்டது,
ஏன் ஏற்பட்டது என்பதை அவரால் விளக்க முடியவில்லை. மனிதனுடைய தோற்றத்தில் உழைப்பு கேந்திரமான
பாத்திரத்தை வகித்தது என்பதை எங்கெல்சே நிரூபித்தார்.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனுடைய மிகப் பழங்காலத்து
முன்னோர்கள் தம்முடைய உறுப்புகளின் முனைப் பகுதிகளை எளிமையான காரியங்களுக்கு, ஒரு பொருளைப்
பற்றிப் பிடிக்கின்ற செயல்களுக்குப் பயன்படுத்துவதற்குக் கற்றுக் கொண்டார்கள். மனிதனு
டைய கரத்தின் செயலில் ஏற்பட்ட இந்த மாற்றம், அவன் நிமிர்ந்து நின்றது ஆகியவை மொத்த
மனித உடலின் வளர்ச்சியையும் பாதித்தன. இதன் விளைவாக மக்கள் ஒன்றுசேருதல் ஆரம்பமாயிற்று;
அவர்கள் பரஸ்பரம் உதவி செய்து கொண்டார்கள், கூட்டு நடவடிக்கைகள் தொடங்கின. உழைப்பு
நிகழ்வுப் போக்கிலிருந்து, உழைப்புடன் சேர்ந்து மனித உறவுக்கு அவசியமான மொழியும் திருத்த
மான பேச்சும் தோன்றின.
உழைப்பும் திருத்தமான பேச்சும் மனிதக் குரங்கின்
மூளை மனித மூளையாகப் படிப்படியாகப் பரிணமிப் பதற்கு முக்கியமான தூண்டுவிப்பிகளாக இருந்தன.
"... கையின் வளர்ச்சியுடன் படிப்படியாக மூளையும் வளர்ச்சி பெற்றுச் சென்றது. ஆரம்பத்தில்,
நடைமுறையில் பயனுள்ள தனித்தனி செய்கைகளுக்கு அவசியமான சூழ்நிலைகளைப்பற்றிய உணர்வும்,
பின்னர், அதிக சாதக நிலையிலுள்ள மக்களிடையே, அந்த உணர்விலிருந்து, அந்தச் சூழ்நிலைகளை
ஆளும் இயற்கை நியதிகளைப் பற்றிய உட்பார்வையும் வந்தன. இயற்கையின் நியதிகளைப் பற்றிய
அறிவு விரைவாகப் பெருகப்பெருக இயற்கையின் மீது எதிரியக்க மாகச் செயல்படுவதற்கான சாதனங்களும்
வளர்ந்தன...'' என்று எங்கெல்ஸ் எழுதினார். (பி. எங்கெல்ஸ், இயற்கையின் இயக்கவியல்,
மாஸ்கோ பதிப்பகம், 1973, பக்கம் 61.)
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)
No comments:
Post a Comment