(பல்வேறு நூல்களில் இருந்து திரட்டப்பட்டது)
இயக்கம் என்பது பருப்பொருளின் நிலைநிற்புப் பாங்கு
ஆகும். இயக்கமின்றி பருப்பொருள் எங்கும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. இயக்கமில்லாப்
பருப்பொருள், பருபபொருள் இல்லாத இயக்கம் போலவே நினைத்துப் பார்க்க முடியாதது. ஆகவே
இயக்கம் பருப்பொருளைப் போலவே படைக்க முடியாதது மற்றும் அழிக்க முடியாதது.
இயக்கத்தில் இருக்கும் பருப்பொருள் விசும்பிலும்
காலத்திலும் தவிர வேறு வழியில் செயற்பட முடியாது. குறிப்பிட்ட பொருளின் உயரம், அகலம்,
நீளம் போன்றவை பிற பருப்பொருளிடம் இருந்து அதன் தூரம் ஆகியவற்றை விசும்பு வழியிலான
உறவைக் குறிக்கிறது. அதாவது ஒவ்வொரு பொருளுக்கும் இடையேயான தொடர்பு விசும்பில் நிகழ்கிறது.
இதுவே விசும்பு பற்றி மார்க்சிய தத்துவத்தின் கருதுகோளாகும்
அனைத்துப் பொருளும் குறிப்பிட்ட நேரத்தில் நீடித்திருக்கும்
தன்மையாகவும், இவ்வாறு நீடித்திருப்பதின் கட்டங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஒன்றை
அடுத்து மற்றொன்று என நிகழும் தன்மையையும் பெற்றுள்ளன. பருப்பொருள் நீடித்திருப்பதும்
அவை நிலவும் வரிசையும் காலத்தைப் பற்றிய மார்க்சிய தத்துவத்தின் கருதுகோளாகும்.
பருப்பொருள் விசும்பில் இருப்பது என்றால் ஒன்றின்
அருகே மற்றொன்று என்ற வடிவத்தில் இருக்கிறது, காலத்தில் இருப்பது என்றால் ஒன்றை அடுத்து
மற்றொன்று என்ற வரிசைதொடர் வடிவத்தில் இருக்கிறது.
விசும்பும் காலமும் பருப்பொருள் இருப்பின் சர்வபொது
வடிவங்களாகும். விசும்பிற்கும் காலத்திற்கும் அப்பால் பருப்பொருளின் இருப்பு கிடையாது.
பருப்பொரூள் எப்படி காலத்திற்கும் விசும்பிற்கும் அப்பால் இருக்க முடியாதோ அதே போல
காலமும் விசும்பும் பருப்பொருள் இன்றி நிலவ முடியாது.
பருப்பொருளைப் போன்றே விசும்பும் காலமும், மனிதனை
சாராத புறநிலையானது.
No comments:
Post a Comment