மார்க்சிய
லெனினியம் என்றால் என்ன?
முன்னேற்றப்
பதிப்பகம்
கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் பாட்டாளி
வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தைத் தொகுப்புரை செய்து அதைப் பற்றித் தம்முடைய ஆராய்ச்சியின்
அடிப் படையில் இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்கின்ற புதிய தத்துவஞானத்தை
வளர்த்தார்கள், வி.இ.லெனின் புதிய சகாப்தத்தின் வரலாற்றுச் சாரத்தை ஆராய்ந்து எழுதிய
நூல்களில் மார்க்சியத் தத்துவஞானம் மேலும் வளர்த்துக் கூறப்பட்டது. மார்க்சிய-லெனினியத்
தத்துவஞானம் வாழ்கின்ற, படைப்புத் தன்மையுள்ள போதனை என்ற முறையில் உலக வரலாற்று அனுபவம்,
இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானங்களின் சாதனைகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்து வருகிறது.
இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மார்க்ஸ், எங் கெல்ஸ், லெனினுடைய போதனையின்
தத்துவஞான அடிப் படையாக இருக்கிறது; இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையில் வளர்ச்சியின்
ஆகப் பொதுப்படையான விதிகளைப் பற்றிய விஞ்ஞானமாக இருக்கிறது.
1) இயக்கவியல் பொருள்முதல்வாதம்
2) வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
No comments:
Post a Comment