Sunday 21 July 2019

2. விசும்பும் காலமும் - பருப்பொருள் நிலவும் வடிவங்கள்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


விசும்பும் காலமும் - பருப்பொருள் நிலவும் வடிவங்கள். பருப்பொருளின் இயக்கம் விசும்பிலும் காலத்திலும் நடை பெறுகிறது. விசும்புக்கும் காலத்துக்கும் வெளியே பருப் பொருள் இருப்பதில்லை. அவற்றின் தத்துவஞான விளக்கம் என்ன?

விசும்பும் காலமும் நம்முடைய உணர்விலிருந்து புற நிலையாக, சுயேச்சையாக இருக்கின்றன. தத்துவஞானம் விசும்பைப் பருப்பொருள் நிலவும் வடிவமாகக் கருதுகிறது; விசும்பு பருப்பொருளின் விரிவை, பொருளாயத உலகத்தின் மற்ற பொருட்கள் மத்தியில் அதன் இடத்தையும் நிலைமாறு வதையும் குறிக்கிறது.

பருப்பொருள் நிலவும் மற்றொரு வடிவம் காலம். அது எல்லாப் பொருட்களின் இருத்தலின் கால அளவையும் அவற்றின் நிலைமைகள் ஒன்றை மற்றொன்று அகற்றுகின்ற காலவரிசை முறையையும் குறிக்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் விசும்பில் இருத்தல் என்பது மற்ற பொருட்களுடன் உள்ள உறவில், ஒன்று மற்றொன்றுடன் கொண்டுள்ள உறவில் இருத்தல் எனப் பொருள்படும்; காலத்தில் இருத்தல் என்பது அடுத் தடுத்துத் தொடர்கின்ற கால வரிசையில் இருத்தல் எனப் பொருள்படும்.

பருப்பொருள், விசும்பு, காலம் ஆகியவை மனித உணர் விலிருந்து சுயேச்சையான முறையில் இருக்கின்றன; அவை நெருக்கமாக இணைந்திருக்கின்றன, பருப்பொருள் காலத் துக்கும் விசும்புக்கும் அப்பால் இருக்க முடியாது என்பதைப் போல் அவையும் பருப்பொருள் இல்லாமல் இருக்க முடியாது. விசும்பும் காலமும் பருப்பொருளுடன் பிணைக்கப்பட் டிருப்பது மட்டுமன்றி அவை ஒன்றோடொன்று பிணைக்கப் பட்டிருக்கின்றன. உலகத்தில் இயக்கத்தில் இருக் கின்ற பருப்பொருளைத் தவிர வேறு எதுவுமில்லை; இயக்கத் தில் இருக்கின்ற பருப்பொருள் விசும்டையும் காலத் தையும் அன்றி வேறு முறையில் இயங்க முடியாது" என்று லெனின் கூறினார். (V. I. Lenin, Collected Works, vol. 14, p. 175.)

நித்தியமான பொருட்கள், நிகழ்வுப் போக்குகள் அல்லது நிகழ்வுகள் என்பவை கிடையா என்பதை மனிதகுலத்தின் மொத்த அனுபவமும் நிரூபித்திருக்கிறது. பல பில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகின்ற வான மண்டலப் பொருட் கள் கூட ஆரம்பத்தையும் முடிவையும் கொண்டிருக்கின்றன; ஏனென்றால் அவை தோன்றி முடிவில் மறைகின்றன, ஆனால் தத்துவஞான அர்த்தத்தில் பருப்பொருள் நித் தியமானது; ஏனென்றால் சிதைவுறுதல் அல்லது அழிதல் மூலம் பொருட்கள் எந்தச் சுவடும் இல்லாமல் மறைவதில்லை; அவை வேறு பொருட்களாக, நிகழ்வுகளாக மாற்றமடை கின்றன. உதாரணமாக, ஒரு பொருளின் மூலக்கூறுகள் சிதைவுறுதல் வேறு பொருட்களின் மூலக்கூறுகள் தோன்று வதற்கு வழி வகுக்கிறது. உயிரிகளின் ஒரு தலைமுறை - உயிரினங்கள் கூட- அடுத்த தலைமுறைகளாலும் உயிரினங் களாலும் அகற்றப்படுகின்றன. ஒரு விண்மீன் அழிந்து விட்டது என்றால் அதன் பொருளில் எதுவும் மிஞ்சவில்லை என்பது அர்த்தமல்ல. பருப்பொருளின் நிலைப்பு விதிகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானங்கள் பருப்பொருள் பல்வேறு மாற்றங்களை அடைந்தாலும் அது ஒருபோதும் ''ஒன்றுமில் லாததாக" மறைந்து விடுவதில்லை, அது ஒன்றுமில்லாத்தி லிருந்து தோன்றுவதும் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. பருப்பொருள் நித்தியமானது, அதைப் படைக்க முடியாது, அழிக்கவும் முடியாது. பருப்பொருள் எப்பொழுதும் எங்கும் இருக்கிறது.

பருப்பொருள் காலத்தைப் பொறுத்தமட்டில் நித்தியமாக இருப்பது மட்டுமன்றி, விசும்பைப் பொறுத்தமட்டில் முடிவில் லாததாகவும் இருக்கிறது. இயற்கை விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புகள் நமக்குத் தெரிந்துள்ள உலகத்தின் விசும்பின் எல்லைகளைத் தொடர்ச்சியாக விரிவுபடுத்திக் கொண்டிருக் கின்றன. நம்மிடமிருந்து பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கின்ற விண்மீன்களை நாம் பார்ப்பதற்கு நவீனத் தொலைநோக்கிகள் நமக்கு உதவுகின்றன. ஒரு மின்னணு நுண்ணோக்கியினால் கூடக் கண்டுபிடிக்கப்பட முடியாத மிகச் சிறிய தூரங்களை அளப்பதற்கு அணுத்துகள் களின் முடுக்குப் பொறிகள் உதவுகின்றன. பொருளாயத உலகத்தின் எல்லைகள் உண்மையாகவே முடிவில்லாதவை ஆகும்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

No comments:

Post a Comment