“மனிதர்களின் செயல்கள்,
புறவயமான, அவசிய நிகழ்ச்சிகளின் தொடர் நிகழ்ச்சியாக நடக்கின்றன. இதுதான் வரலாற்று வளர்ச்சிப்
போக்கை உருவாக்குவதாக உள்ளது. மனிதர்கள் தங்கள் வாழ்ககைக்குத் தேவையான அனைத்தையும்
அவர்களே படைக்கிறார்கள், கருவிகளை மேம்படுத்துகிறார்கள், தங்களது குறிக்கோளை அடைய முற்படுகிறார்கள்.
மேலும் சிறந்த வாழ்ககைத் தரத்தை அடையப் போராடுகிறார்கள், இவ்வாறு பல முயற்சிகளில் ஈடுபட்டு,
தங்களது சமூக வாழ்ககையை உருவாக்கிறார்கள்.
சமூக வளர்ச்சி விதிமுறைகள்
எதுவுமே, மனிதர்களின் நடைமுறைச் செயல்களுக்கு அப்பால் இருக்கவே முடியாது. ஆனால் சூழ்நிலைகளின்
தாக்கத்திற்கு உட்பட்டே சூழ்நிலையை மனிதர்கள் மாற்ற முயல்கிறார்கள் என்பதுதான் வரலாற்றின்
இயக்க இயலாகும். இதுவும் மனிதர்களின் நடைமுறைச் செயல்கள் மூலம்தான வெளியிடப்படுகிறது.
வளர்ச்சியின் விதிமுறைகள் இத்தகைய செயல்களின் போக்கையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கின்றன”
(பக்கம் 37 -38 வரலாற்றுப் பொருள்முதல்வாதம்)
No comments:
Post a Comment