Sunday, 18 November 2018

1. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கட்டங்கள் (எங்கெல்ஸ்)


(எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலின் அடிப்படையில் சுருக்கப்பட்டது)

மனிதகுலத்தின் ஏடறியா வரலாற்றுத் துறையில் திட்டவட்டமான ஆய்வினை செய்தவர் மார்கன் ஆவார். தமது ஆய்வின் அடிப்படையில் மனிதகுல வரலாற்றை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார். முதலாவது காட்டுமிராண்டி நிலை, இரண்டாவது அநாகரிக நிலை, மூன்றாவது நாகரிக நிலை. மார்கன் முதல் இரண்டு நிலைகளைப் பற்றியும், மூன்றாவது நிலைக்கு மாறிச் செல்வதைப் பற்றியும் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் உயிர் வாழ்வதற்கு உரிய பொருட்சாதனங்களை உற்பத்தி செய்வதில் பெற்ற முன்னேற்றத்துக்குத் தக்கபடி இவ்விரண்டு சகாப்தங்கள் ஒவ்வொன்றையும் ஆரம்பகட்டம், இடைக்கட்டம் வளர்ச்சிக்கட்டம் என்று மூன்று உட்கட்டங்களாகப் பிரித்தார்.

மார்கன் கூறுகிறார்,”..ஜீவராசிகளில் மனிதன் மட்டும்தான் உணவு உற்பத்தியில் தனி முதலான கட்டுப்பாட்டைப் பெற்றிருந்தான் என்று கூறலாம். உயிர்வாழ்வதற்குரிய மூலாதாரங்களின் பெருக்கத்தை வைத்தே மனிதகுல முன்னேற்றத்தின் மகத்தான சகாப்தங்கள் அநேகமாக நேரடியாக அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கின்றன.”

குடும்பத்தின் வளர்ச்சி இதனுடன் ஒர் இணையான போக்கிலேயே செல்கிறது.

1.காட்டுமிராண்டி நிலை

அ) ஆரம்பக் கட்டம்

வெப்ப மண்டல அல்லது அரை வெப்ப மண்டலக் காடுகளில் தான் மனிதன் தோன்றினான். கொன்று தின்கிற பெரிய விலங்குகளிக்கு நடுவில் தான் வசித்து வந்தான். பழங்கள், கொட்டைகள், கிழங்குகள் ஆகியவை இந்தக் கட்டத்தில் உணவுகளாக இருந்தது. ஓசை சீருள்ள பேச்சிகள் இந்தக் கட்டத்தில் தோன்றின. மனிதயினம் இந்த ஆரம்பக் கட்டம் பல்லாயிரும் ஆண்டுகளுக்குத் தொடர்ந்திருக்கும்.

ஆ) இடைக்கட்டம்

இடைக்கட்டம் மீன்களைப் பிடித்தல், நெருப்பைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. இந்தப் புதிய உணவு தட்பவெப்ப நிலையில் இருந்தும், வட்டாரத்தில் இருந்தும் மனிதனை சுதந்திரம் அடையச் செய்தது. இந்தச் சுதந்திரம் அவனை ஆறுகளை நோக்கி நகர்வதற்கு உதவியது. இந்தக் கட்டத்திலேயே உலகின் பல இடங்களுக்கு பரவிப் படர்ந்து சென்றுள்ளான். அப்போது பயன்படுத்திய கரடுமுரடான, பட்டை தீட்டப்படாத கற்கருவிகளை பயன்படுத்தினான். அக்கருவிகள் எல்லா கண்டங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. மனிதர்களின் இடப்பெயர்ச்சிக்கு இவைகளை சான்றுகளாகும்.

இக்கட்டத்தில் தடி, ஈட்டி ஆகிய கருவிகளைப் பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடினான். வேட்டைத் தொழில் ஒன்றை மட்டும் கொண்டு உயிர் வாழ்கின்ற மக்களினங்கள் என்று புத்தங்களில் குறிக்கப்பட்ட நிலை, ஒருபோதும் இருந்ததில்லை. வேட்டையின் மூலம் கிடைக்கின்ற பலன்கள் மிகவும் நிச்சயமில்லாத படியால அது சாத்தியமில்லை. உணவு கிடைப்பத்தில் உள்ள நிச்சயம் தன்மையற்ற நிலை, மனித இறைச்சியைத் தின்னும் முறை உண்டாகி அது நெடுங்காலம்வரை நீடித்திருக்கலாம். இக்கட்டத்தினர் ஆஸ்திலேலியர்களும் போலினீசியர்களில் பலரும் இந்நாளிலும்கூட இந்தக் கட்டத்தில் இருந்து வருகின்றனர்.

இ) வளர்ந்த கட்டம்

காட்டுமிராண்டி நிலையின் வளர்ச்சிக் கட்டம் வில்லும் அம்பும் கண்டுபிடிக்கப்பட்டத்தில் இருந்து தொடங்குகிறது. இக்கருவிகளின் உதவியால், காட்டு விலங்கின் இறைச்சியை உணவாக ஏற்பது அதிகரித்தது. மரத்தால் செய்த கலயங்கள், கைகளால் துணி நெய்தல், நாணல் புல்களைக் கொண்டு கூடைகளை முடைதல், பட்டைத் தீட்டப்பட்ட கற்கருவிகள் ஆகிய வாழிக்கை சாதனங்களை உற்பத்தி செய்வதில் தேர்ச்சி பெறுதைக் காண்கிறோம்

மரத்தைக் குடைந்து ஓடம் செய்தல், சில இடங்களில் வீடு கட்டுவதற்கு மரக்கட்டைகளும் பலகைகளும் செய்யப்பட்டது.

இரும்பு வாள் அநாகரிக நிலைக்கும், துப்பாக்கி நாகரிக நிலைக்கும் நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதைப் போல காட்டுமிராண்டி நிலைக்கு வல்லும் அம்பும் நிர்ணயமான ஆயுதங்களாக விளங்கின.

2.அநாகரிக நிலை

அ) ஆரம்ப கட்டம்

மண் பாண்டங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இக்கட்டம் தொடங்குகிறது. கூடைகளும் மரப் பாத்திரங்களும் உணவிற்காக நெருப்பில் வைத்துப் பயன்படுத்தும் போது, அவற்றின் மீது களிமண் பூசியதில் இருந்து இந்தக் கலை தோன்றியது. நெருப்பில் இடப்பட்ட களிமண் கூடைகளில் இருந்து விலகியப் போது, பார்த்தைக் கொண்டு சுட்டக் களிமண்ணே பாத்திரமாக பயன்படுத்தப்பட்டது.

விலங்குகளை பழக்குதல், பயிரிடுதல் ஆகியவை அநாகரிக கட்டத்தின் சிறப்புத் தன்மையாகும்.

ஆ) இடைக்கட்டம்

கிழக்கு கண்டத்தில் விலங்குகளை பழக்குவதில் இருந்தும், மேற்குக் கண்டத்தில் உணவுக்குரிய பயிர்களை சாகுபடி செய்தல், கல்லால் அமைந்த கட்டடங்கள் கட்டுதல் ஆகியவற்றில் இருந்து இந்தக்கட்டம் தொடங்குகிறது. செவ்விந்தியர்களை கண்டுபிடித்த போது அவர்கள் இந்தக் கட்டத்தில் இருந்தார்கள்.

கால்நடைகளை திரட்டி வைத்திருந்தனர் ஆரியர்களும் செமைட்டுகளும். இந்த கால்நடைகளின் தீவனத்துக்குத் தான் தானிய சாகுபடி உருவாயிற்று. இதற்கு சிறிது காலத்துககுப் பிறகுதான் மனித ஊட்டத்துக்கு பயிறிடல் முக்கியமாயிற்று என்பதே அநேகமாக உண்மையாக இருக்கும்

இ) வளர்ந்த கட்டம்

இருப்பைக் கண்டுபிடித்து பயன்படுத்துவதில் இந்தக் கட்டம் உருவாகிறது. எழுத்துக்களை கண்டுபிடித்தல், இலக்கிய ஆவணங்களுக்கு அதைப் பயன்படுத்துல் ஆகியவற்றின் மூலம் இந்தக் கட்டம் நாகரிக நிலையை நோக்கி முன்னேறுகிறது. இக்கட்டத்தில் செய்யப்பட்ட உற்பத்தியின் முன்னேற்றம் முந்திய கட்டங்கள் அனைத்து உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகும்.

இரும்புக் கலப்பையைக் கொண்டு உழுவது மண்ணைப் பண்படுத்தி பயிரிடல், அன்றைய நிலைமைகளில், உயிர் வாழ்வதற்குரிய சாதனங்கள் நடைமுறையில் வரம்பற்ற விதத்தில் அதிகரிப்பதையும் சாத்தியமாக்கிற்று. இந்நிலையில் காடுகள் வெட்டித் திருத்தப்பட்டு வயல்களாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் மாற்றப்படுகிறது. இக்கட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்தது.

ஹோமரின் கவிதைகளில் குறிப்பாக இலியாத் காவியத்தில அநாகரிக நிலையின் ஆரம்பக்கட்டம் உச்சியில் இருப்பதைக் காண்கிறோம்.

மார்கனின் காலவரிசை முறையைப் பின்வருமாறு பொதுமைப்படுத்தலாம்:-

அ) காட்டுமிராண்டி நிலை – பயன்படுத்துவதற்கு தயாராக இருந்த இயற்கைப் பொருட்களை உபயோகிப்பது மேலோங்கி இருந்த நிலையே காட்டுமிராண்டி நிலை. காட்டுமிராண்டி நிலையின் மணமுறை குழு மணம்.

ஆ) அநாகரிக நிலை – கால்நடை வளர்ப்பு, நிலத்தில் பயிரிடுதல் ஆகியவை குறித்த அறிவைப் பெற்ற கட்டம் அநாகரிக நிலையாகும். அநாகரிக நிலைக்கு மணமுறை இணை மணம்.

இ) நாகரிக நிலை- இயற்கைப் பொருட்களை மேலும் பண்படுத்திக் கொள்வது பற்றி, தொழில் மற்றும் கலையைப் பற்றிய அறிவைப் பெற்ற கட்டம் நாகரிக நிலையாகும். நாகரிக நிலைக்கு மணமுறை ஒரு தார மணம்.


No comments:

Post a Comment