உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள் இரண்டும்
சேர்ந்து உற்பத்திச் சாதனங்கள் (Means
of Production) என்றழைக்கப்படும். இவைகள் கடந்த கால உழைப்பின்
விளைபொருளாகும். இவை இரண்டும் தாமே பொருட்களை உற்பத்தி செய்திட முடியாது.
உழைப்பைப் பயன்படுத்தாத உற்பத்திச் சாதனங்கள் உயிரற்ற பொருட் குவியலாக, பயனற்று வீணாய்க்கிடக்கும். மக்களின் உழைப்புச்சக்தி இதனோடு இணைந்து
செற்பட்டால் தான் உற்பத்தியை நிகழ்த்த முடியும்.
உற்பத்தி அனுபவமும் திறமையும் கொண்ட மக்களின்
உழைப்பு சக்தியும், உற்பத்திச் சாதனங்களும் சேர்ந்து உற்பத்திச் சக்திகள் (Productive
Forces) என அழைக்கப்படும்.
மக்கள் தான் சமூகத்தின் முதன்மையான
உற்பத்திச் சக்தியாகும். உற்பத்திச் சக்திகள் எப்போதும் சமூகத் தன்மை கொண்டவையாக
இருக்கிறது.
கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் மட்டும், அவைகள்
உற்பத்திச் சக்தியாகிவிடாது, அதே போல் வனங்களில்
வனச்செல்வங்கள் நிறைந்து இருந்தால் மட்டும் போதாது, மனித
உழைப்பு அதில் செலுத்தப்பட்டால் தான், அவை உற்பத்திச்
சக்தியாகிறது.
அறிவியலும், தொழில் நுட்பமும் மேம்பாடு
அடைவதைத் தொடர்ந்து, உற்பத்திக் கருவிகள் செம்மையுறுகிறது.
இதனோடு மக்களின் திறமை தேர்ச்சியும், அனுபவமும்
விரிவடைகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, சமூகத்தின்
வளர்ச்சியை விரிவாக்குகிறது.
No comments:
Post a Comment