Sunday, 21 July 2019

9. உண்மை என்பது என்ன? – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உண்மை பற்றிய கோட்பாடு. உண்மை என்பது ஒரு பொருள் மற்றும் நிகழ்வைப் பற்றிய அறிவு; அது எதார்த்தத்துடன் பொருந்தியிருக்கிறது, உண்மையான நிலையைப் பிரதிபலிக் கிறது. உண்மையான அறிவு எதார்த்தத்துடன் பொருந்தி யிருப்பதால் அது தனி மனிதரையோ, மனித சமூகத் தையோ பொறுத்திருக்கவில்லை''. (V. I. Lenin, Collected Works, vol. 14, p. 122. ) உண்மையான அறிவு நம்மிலிருந்து புறநிலையாக, சுயேச்சையாக இருக்கின்ற வெளியுலகத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அறிவு புறநிலையான உண்மை எனப்படும்.

புறநிலையான உண்மை மாறாதிருக்க முடியாது; ஏனென்றால் அதன் தொடர்ச்சியான இயக்கத்தில் இருக்கிறது, எப்பொழுதும் மாறிக் கொண்டும் வளர்ச்சியடைந்து கொண்டும் இருக் கிறது. ஆனால் நம்முடைய அறிவில் பிரதிபலிக்கப்படுகின்ற பொருள் மாறுகிறது என்றால், அது ஒரு பண்பு ரீதியான நிலையிலிருந்து மற்றொரு நிலையை அடைகிறது என்றால், அது தன்னுடைய இயல்புகள், தொடர்புகள் சிலவற்றை இழந்து வேறு சிலவற்றை உருவாக்கிக் கொள்கிறது என் றால் இப்பொருளைப் பற்றிய நம்முடைய அறிவும் மாறாமல் இருக்க முடியாது. முடிவான உண்மையாக இருப்பதற்குக் குறிப்பிட்ட பொருளைப் பற்றி நம்முடைய அறிவும் மாற வேண்டும், கூடுதலாகச் சேர்க்கப்பட்டு மாறுகின்ற எதார்த் தத்துடன் பொருந்தும்படிச் செய்யப்பட வேண்டும், அதனால்தான் புறநிலையான உண்மை சார்புநிலையாக இருக்கிறது. அது சமூக அறிவின் வளர்ச்சியுடன் சேர்ந்து, மாறுகின்ற எதார்த்தம் மற்றும் தன்னுடைய இருத்தலின் நிலைமைகளுடன் சேர்ந்து தவிர்க்க முடியாதபடி மாறு கிறது. எதார்த்தத்துடன் அரைகுறையாகப் பொருந்துகின்ற தம்முடைய அறிவு, அதாவது அறிதல் செயல்முறையின் போது இன்னும் அதிகத் துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டிய அறிவு சார்புநிலை உண்மை எனப்படும்.

ஆனால் நம்முடைய அறிவின் சார்புநிலையான தன்மை) தனிமுதலான உண்மை என்பதை இல்லாமற் செய்து விடவில்லை. ஏனென்றால் சார்புநிலையானதில் தனிமுத லான அம்சம் இருக்கிறது. புறநிலையான உண்மை சார்பு நிலையாகவும் இருக்கிறது, தனிமுதலாகவும் இருக்கிறது. அது எதார்த்தத்தின் சில அம்சங்களையும் அதற்குள்ளே இருக்கின்ற சில உறவுகளையும் சரியாகப் பிரதிபலிக்கின்ற படியால் தனிமுதலானது. அதே சமயத்தில் அது எதார்த் தத்தைப் பூரணமாகவும் முழுமையாகவும் ஒரு போதும் பிரதி பலிப்பதில்லை, குறிப்பிட்ட பொருளின் மொத்த உள் ளடக்கத்தை (அது முடிவில்லாதது) தழுவவில்லை - தழுவ முடியாது என்பது மெய்யே -என்பதால் சார்புநிலையானது.

நம்முடைய அறிவு எப்பொழுதுமே சார்புநிலையானது என்று கூறுகின்ற பொழுது அது புறநிலையானது அல்ல, ஆகவே அது தனிமுதலானது அல்ல என்று புரிந்து கொள்ளக் கூடாது. சரி .மனித சிந்தனை தன் இயல்பு காரணமாகச் சார்புநிலையான உண்மைகளின் கூட்டு மொத்தமாகிய தனிமுதலான உண்மையைக் கொடுக்க முடியும், அது அப்படிக் கொடுக்கிறது. அறிவியல் வளர்ச்சியரின் ஒவ்வொரு காலடியும் தனிமுதலான உண்மை என்னும் மொத்தத்தில் புதிய கூறுகளைச் சேர்க்கிறது; ஒவ்வொரு அறிவியல் கருதுகோளின் மெய்ம்மையின் வரையறைகளும் சார்பு நிலையானவை, அவை அறிவின் வளர்ச்சியுடன் ஒரு சம்யத்தில் விரிவடைகின்றன, மறு சமயத்தில் குறுகிவிடுகின்ன.
                (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)


8. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிதல் தத்துவம் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உலகம் அறியப்படக் கூடியதா? மார்க்சிய-லெனினியத் தத்துவம் இக்கேள்விக்கு "ஆம், உலகம் அறியப்படக் கூடியதே" என்ற தெளிவான, விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்ட பதிலைத் தருகிறது. உலகத்தை அறிய முடியும் என்னும் இந்த நம்பிக்கை நடைமுறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

அறிதல் என்பது மனிதனுடைய உணர்வில் எதார்த்தத் தின் பிரதிபலிப்பு ஆகும். நம்மைச் சுற்றியுள்ள உலகமே நம்முடைய அறிதலின் ஒரே தோற்றுவாய் ஆகும். இந்த உலகம் மனிதன் மீது தாக்கம் செலுத்துகிறது; அவனிடம் சில உணர்ச்சிகளை, எண்ணங்களை, கருத்தடைமப்புகளைத் தோற்றுவிக்கிறது; அவன் பின்னர் அவற்றைத் தன்னுடைய நடைமுறை நடவடிக்கையில் சோதித்துப் பார்க்கிறான்.

இயற்கை, சமூகம் ஆகிய இரண்டையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மனிதனுடைய நடவடிக்கையே நடைமுறை ஆகும். அது மனிதனுடைய செயலையும் பொருளாயத உற்பத்தியையும் அடிப்படையாகக் கொண் டிருக்கிறது; அரசியல் போராட்டம், வர்க்கப் போராட்டம், தேசிய விடுதலை இயக்கம், அறிவியல் பரிசோதனை ஆகிய வற்றை அது உள்ளடக்கியிருக்கிறது. சுற்றியுள்ள உலகத்தை அறிய முயலுவதன் ஆரம்பம் மற்றும் முடிவுக் கட்டமாக நடைமுறை இருக்கிறது.

இரண்டு பொருட்கள் - அவற்றில் ஒன்று அடுத்த பொரு ளைப் போல நூறு மடங்கு அதிக எடையுள்ளது - ஒரே உயரத்திலிருந்து கீழே போடப்படுகின்ற பொழுது அதிக எடையுள்ள பொருள் குறைவான எடையுள்ள பொருளைக் காட்டிலும் நூறு மடங்கு வேகத்துடன் பூமியில் விழும் என்று மத்திய காலத்தில் சமயவாதிகள் உறுதியாக் கூறினார் கள். கலிலியோ (1564-1642) இக்கருத்து தவறானது என் பதை நிரூபித்தார். அவர் ஒரு உயரமான ஸ் தூபியிலிருந்து வெவ்வேறு எடையுள்ள இரண்டு உருண்டைகளை கீழே போட்டார். அவை இரண்டும் ஒரே சமயத்தில் பூமியின் மீது விழுந்தன. சமயவாதிகளின் கருத்து தவறானது, கீழே விழுகின்ற பொருட்களின் எடை எப்படியிருந்தாலும் அவை ஒரே வேகத்தைக் கொண்டிருக்கின்றன என்பவற்றை அவர் நடைமுறையில் நிரூபித்தார்.

நடைமுறை அறிதலின் ஆரம்ப நிலையாக, அடிப்படை யாக இருக்கிறது. ஏனென்றால் அறிதல் நடைமுறை நடவடிக் கையிலிருந்து தோன்றுகிறது. உதாரணமாக, மனிதன் தன் னுடைய பிறந்த கால முதலாகவே உழைத்தான்; தன் னுடைய கடுமையான உழைப்பின் போது இயற்கைச் சக்திகளைப் பற்றி அறிந்து கொண்டான், அவைப் பற்றிய அறிவைச் சேகரித்தான்.

அறிதலின் நோக்கமும் நடைமுறையே; ஏனென்றால் மனிதன் உலகத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதும் அதன் வளர்ச்சியின் விதிகளைக் கண்டுபிடிப்பதும் தன்னுடைய நடைமுறை நடவடிக்கையில் அந்த அறிதலின் விளைவு களைப் பயன்படுத்திக் கொள்வதற்கே.

அறிதல் நிகழ்வுப் போக்கு. மனிதன் பிறக்கின்ற பொழுது அவனுடைய தலையில் அறிவு இருப்பதில்லை. அவனுடைய வாழ்க்கையில் அறிதலின் விளைவாக அது சிறிது சிறிதாகச் சேகரிக்கப்படுகிறது. மேலும் அறிதல் என்பது மனிதனுடைய மூளையில் உலகத்தைப் பற்றிய தானியக்கப் பிரதிபலிப்பு மட்டுமல்ல, அது ஒரு சிக்கலான நிகழ்வுப் போக்கு; அதில் அவனுடைய சிந்தனைகள் அறியாமையிலிருந்து அறிவை நோக்கி, அரைகுறையான, துல்லியமற்ற அறிவிலிருந்து அதிக முழுமையான, அதிகத் துல்லியமான அறிவை நோக்கி முன்னேறுகின்றன. உலகம் முடிவில்லாததாக இருப்பதால் அறிதலும் கூட முடிவில்லாததே, அறிதலின் கட்டங்கள் எவை?

முதல் கட்டம் புலனுணர்ச்சி அறிதல். மக்கள் தங் சுளுடைய கண்கள், காதுகள், தொட்டறியக் கூடிய உறுப்பு களின் மூலமாக உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள் கிறார்கள். நாம் பொருளாயத உலகத்தைப் பற்றிய தகவலை அவற்றின் மூலமாகப் பெறுகின்றோம்.

அறிதலின் இரண்டாவது கட்டம் தர்க்க ரீதியான அல்லது சூக்குமமான சிந்தனை எனப்படும். எந்த ஒரு நிகழ்வின் சாரத்தையும் அறிவதற்கு நம்முடைய புலனுறுப்பு களின் உதவியினால் பெற்ற தகவலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; தகவலை முறைப்படுத்த வேண்டும்; தற் செயலான, அற்பமான விவரங்களை ஒதுக்கி விட்டு முக்கியமானவற்றை வெளியே கொண்டு வர வேண்டும்.

ஆனால் நம்முடைய புலனுறுப்புகள் சரியான தகவல் களை அளிக்கின்றன என்று நாம் உறுதியாகக் கருதுவது எப்படி? அந்தத் தகவல் அனுப்பப்படுகின்ற, புரிந்து கொள்ளப் படுகின்ற செயல்முறையின் போது சிதைக்கப்படுதல் சாத்தியமா? அறிதல் செயல்முறையின் மூலம் பெறப்படு கின்ற அறிவு நடைமுறையில் நிரூபிக்கப்பட்ட பிறகுதான் முடிவான உண்மை தனக்குக் கிடைத்திருக்கின்ற அறிவுக்குப் பொருத்தமான என்று கருதப்படுகிறது. ஒரு நபர் விளைவை நடைமுறை நடவடிக்கையில் பெறுவாரானால் இந்த அறிவு முடிவான உண்மைக்கு, எதார்த்தத்துடன் பொருந்துகிறது என்பது அர்த்தமாகும்.
            (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

7. இயக்கவியலின் கருத்தினங்கள்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


இயக்கவியலின் கருத்தினங்கள். வேறு எந்த விஞ்ஞானத்தை யும் போல பொருள்முதல்வாத இயக்கவியல் விதிகளின் அமைப்பு மட்டுமல்ல, அது தத்துவஞானக் கருத்தினங்களின், அதாவது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தின் பொதுவான கூறுகளையும் தொடர்புகளையும், அம்சங்களையும் இயல்பு களையும் தொகுத்துக் கூறுகின்ற கருத்தமைப்புகளின் அமைப்பாகவும் இருக்கிறது.

இனி இயக்கவியலின் கருத்தினங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

தனியானதும் சிறப்பானதும் பொதுவானதும். ஒவ்வொரு பொருளும் நிகழ்வும் அவற்றுக்கு உரிய தனி வகையான, உள்ளுறையான கூறுகளைக் கொண்டிருக்கின்றன. எல்லா அம்சங்களிலும் முற்றான ஒருமையைக் கொண்டிருக்கின்ற இரண்டு பொருட்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் இருக்கின்ற, மற்ற நிகழ்வுகளில் இல்லாத அனைத்தும் தனியானவை எனப்படும். அதே சமயத்தில் மற்ற பொருட்கள், நிகழ்வுகளுடன் பொதுப்படையான எக்கூறுகளையும் கொண்டிராத பொருட்கள், நிகழ்வுகள் கிடையாது. ஒரு நிகழ்வில் மட்டுமின்றி பல நிகழ்வுகளில் இருக்கின்ற. திரும்பத் திரும்பத் தோன்றுகின்ற கூறுகள் பொதுவானவை எனப் படும். ஒரு பொருளை மற்ற பொருட்களுடன் ஒப்பிடுவதன் மூலம் அவற்றின் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் நாம் இனங்காணுகிறோம். ஒப்பிடத்தக்க பொருட்களை வேறுபடுத்திக் காட்டுபவை அவற்றிலுள்ள சிறப்பம்சம் எனப்படும். இயற்கையில் அடிக்கடி காணப்படுகின்ற இரும்பை உதாரணமாக எடுத்துக் கொள்வோம், உயிரற்ற இயற் கையின் கூறு என்ற முறையில் அதைப் பொதுவான நிகழ்வு எனக் கருதலாம்; உலோகம் என்ற முறையில் அது சிறப்பானது; இரும்பு என்ற வகையில் அது தனியான து. பனித சமூகத்தில் சமூகப் புரட்சி ஒரு பொது நிகழ்வு; தேசிய விடுதலைப் புரட்சியைப் புரட்சியின் சிறப்பான ரகம் எனக் கருதலாம்; ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடைபெற்றிருக்கின்ற அதே புரட்சியைத் தனியான நிகழ்வு என்று கூறலாம்.

தனியானவை, பொதுவானவை, சிறப்பானவை ஆகி யவை ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. தனியான து பொது அம்சத்தைக் கொண்டிருக்கிறது. பொதுவானது சிறப்பானதில், சிறப்பானதன் மூலமாக மட்டுமே இருக்கிறது.

காரணமும் விளைவும், ஒரு நிகழ்வை ஏற்படுத்துகின்ற மற்றொரு நிகழ்வு முந்திய நிகழ்வுக்குக் காரணம் எனப் படும். அந்தக் காரணத்தின் முடிவுதான் விளைவாகும். காரணகாரியத் தன்மை என்பது நிகழ்வுகளுக்கு இடையி லுள்ள உள்தொடர்பாகும்; அதில் ஒன்று நடைபெற்றவுடன் அடுத்தது உடனடியாகத் தொடர்கிறது, உதாரணமாக,
நீரைச் சூடாக்குதல் அது நீராவியாக மாறுவதற்குக் காரணம்; ஏனென்றால் நீரின் வெப்பநிலை அதிகரிக்கின்ற பொழுது அது மேன்மேலும் ஆவியாகிறது.

காரணகாரியத் தன்மை பொதுவான தன்மையைக் கொண்டிருக்கிறது. காரணம் இல்லாத நிகழ்வு அல்லது சம்பவம் கிடையாது, அது ஏற்பட முடியாது. நாம் பல நிகழ்வுகளைச் சந்திக்கிறோம், அவை ஏற்படுகின்ற காரணம் இன்னும் நமக்குத் தெரியவில்லை என்பது உண்மையே. எனினும் அறிதல் செயல்முறையின் முன்னேற்றம் இக் காரணங்களை இனங்காணுவதற்கு நமக்கு உதவி செய்யும். பொருளாயத உலகம் மற்றும் பொதுப்படையாகப் பருப் பொருளின் எந்த வளர்ச்சியும் காரணங்களையும் விளைவு களையும் கொண்ட சிக்கலான முடிச்சாகும்.

இன்றியமையாமையும் தற்செயலும். ஒரு நிகழ்வின் உறுப்பு களின் உள்ளார்ந்த தன்மையினால் ஏற்படுகின்ற இயல்பு களும் தொடர்புகளும் இன்றியமையாதவை என்று கூறப்படு கின்றன. வெளிப்புற சந்தார்ப்பங்களின் தாக்கத்தினால் ஏற்படுகின்ற இயல்புகளும் தொடர்புகளும் தற்செயலானவை எனப்படும். உதாரணமாக, ஒரு முதலாளி இன்றியமையா மையின் காரணமாக ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறார்; ஏனென்றால் தொழிலாளி இல்லாமல் முதலாளியினால் தொழிலை நடத்த முடியாது. ஆனால் அவர் இவான், பியோத்தர் அல்லது வேறு எந்தத் தொழி லாளியை வேலைக்கு அமர்த்துகிறார் என்பது தற்செய லானதாகும். குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் நிச்சயமாக நடைபெறுவது இன்றியமையாதது எனப்படும். குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடியது அல்லது நடை பெறாமற் போவது தற்செயலானது எனப்படும். தற்செய லானவற்றில் சம்பவங்கள் கற்பனை செய்யப்படக் கூடிய எந்த முறையிலும் நடைபெறலாம். தற்செயலானது இன்றியமையாமையின் வெளிப்பாடாக, அதற்குத் துணை செய்வதாக இருக்கிறது.

சாத்தியமும் எதார்த்தமும். தகுந்த நிலைமைகளில் நடை பெறக் கூடியது சாத்தியம் எனப்படும். ஏற்கெனவே நடை பெற்றிருப்பது எதார்த்தம் எனப்படும். வேறு வார்த்தை களில் சொல்வதென்றால் எதார்த்தத்தில் இல்லாத ஆனால் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறக் கூடிய எதார்த்தத்தின் உள்ளுறையான ஆற்றலின் காரணமாக எதிர் காலத்தில் தோன்றக் கூடிய இயல்புகள், நிகழ்வுப் போக்குகள், பொருட்கள் ஆகியவற்றை நாம் சாத்தியம் எனக் கருதுகிறோம். சாத்தியம் நிறைவேறுகின்ற பொழுது எதார்த்தமாக மாறுகிறது. ஆகவே எதார்த்தத்தை நிறை வேற்றப்பட்ட சாத்தியம் என்றும் சாத்தியத்தை எதிர்கால எதார்த்தம் என்றும் வரையறுக்கலாம்.

சாத்தியங்கள் எதார்த்தமானவையாகவும் சூக்குமமான வையாகவும் இருக்கக் கூடும். எதார்த்தமான சாத்தியங்கள் விதிவழிப்பட்ட வளர்ச்சிப் போக்கை வெளியிடுகின்றன. இந்த சாத்தியங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமான நிலைமைகள் மெய்யாகவே இருக்கின்றன (உதாரணமாக, சில வளர்முக நாடுகள் புதிய காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற முடியும் என்பதைப் போல). சூக்குமமான சாத்தியங்கள் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தில் எதார்த் தமாக மாறுவதற்கு உரிய நிலைமைகள் இல்லை; ஆனால் இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் தோன்றக் கூடும் (மனிதன் சூரிய மண்டலத்தில் உள்ள இதர கிரகங்களை ஆராய்வதைப் போல).

உள்ளடக்கமும் வடிவமும். எதார்த்தத்தில் எந்தப் பொருளும் உள்ளடக்கம் மற்றும் வடிவத்தின் ஒற்றுமையாக இருக்கிறது. பொருள்முதல்வாத இயக்கவியலின் கருத்தினம் என்ற முறையில் உள்ளடக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்விலுள்ள எல்லாக் கூறுகள், அவற்றின் இடைச்செயல் மற்றும் அவற்றின் மாற்றங்களின் கூட்டு மொத்தம் ஆகும். இந்த நிகழ்வில் உள்ளுறையாகவுள்ள இடைச்செயல்களும் மாற்றங்களும் முறைப்படியாக நடைபெறுகின்றன, சார்பு நிலையில் நிலையான உறவுகளின் அமைப்பையும் நிர்ணயிக் கப்பட்ட கட்டமைப்பையும் கொண்டிருக்கின்றன. உள்ளடக்கத்தின் பல்வித அம்சங்களுக்கும் இடையிலான, சார்பு நிலையில் நிலையான உறவுகளின் அமைப்பு, அதன் கட் டமைப்பு ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் வடிவமாக அமைகின்றன. வடிவமும் உள்ளடக்கமும் பிரிக்கப்பட முடி யாதவை; அவை ஒற்றுமையில் மட்டுமே இருக்கக் கூடிய இரண்டு எதிர்நிலைகள், உள்ளடக்கம் வடிவத்தை நிர் ணயிக்கிறது. அது வடிவத்தைக் காட்டிலும் வேகமாக மாறுகிறது, சீக்கிரத்தில் இரண்டும் மோதுகின்றன. புதிய உள்ளடக்கம் பழைய வடிவத்தை உதறி விட்டுப் புதிய வடிவத்தை அமைத்துக் கொள்கிறது. வடிவம் உள்ளடக்கத் தின் மீது தாக்கம் செலுத்துகிறது. புதிய வடிவம் வளர்ச்சி யை விரைவுபடுத்துகிறது, பழைய வடிவம் அதைப் பின் னால் இழுக்கிறது.

சாராம்சமும் நிகழ்வும். பொருட்கள், நிகழ்வுகளின் வெவ் வேறு அம்சங்களைக் குறிக்கின்ற இரண்டு கருத்தமைப்புகள் ஆகும். சாராம்சம் என்பது ஏதாவதொரு பொருளின் இன்றியமையாத அம்சங்கள் மற்றும் தொடர்புகளின் மொத் தமாகும்; ஒரு நிகழ்வு என்பது இந்த அம்சங்கள் மற்றும் தொடர்புகள் மேற்பரப்பில் வெளிப்படுதல் ஆகும்; அது சாராம்சத்தின் பொருளை வெளிக்கொண்டு வருகிறது. சாராம்சம் நிகழ்வுடன் அங்கக ரீதியில் இணைக்கப்பட் (டிருக்கிறது, தனது உள்ளடக்கத்தை நிகழ்விலும் அதன் மூலமாகவும் மட்டுமே வெளிப்படுத்துகிறது. நிகழ்வு சாராம் சத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அது இல்லாமல் இருக்க முடியாது. லெனின் சாராம்சத்துக்கும் நிகழ்வுக்கும் இடையிலான இடையுறவை ஒரு ஆழமான, வேகமான நீரோட்டத்துக்கு ஒப்பிட்டார்; அதன் ஆழத்தையும் வேகத் தையும் கண்களுக்குத் தெரிகின்ற அலைகளையும் நுரையை யும் கொண்டுதான் மதிப்பிட முடியும். “…மேலே நுரை, கீழே ஆழமான நீரோட்டங்கள், ஆனால் அந்த நுரை கூட சாராம்சத்தின் வெளியீடே” (* V. 1. Lenin, Collected Works, vol. 38, p. 130. )
              (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

6. பொருள்முதல்வாத இயக்கவியலின் பிரதான விதிகள்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


பொருள்முதல்வாத இயக்கவியலின் பிரதான விதிகள். எதிர் நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும், அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் பரிணமித்தல், நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆகியவை இயக்கவியலின் பிரதான விதிகள் ஆகும்.

எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும்

எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும், இயற்கை, சமூகம் மற்றும் அறிதலின் எல்லா நிகழ்வுகளிலும் அவற்றின் உன் எதிர்நிலைகள், முரண்படுகின்ற அம்சங்கள் மற்றும் போக்குகள் குணாம்சமாக இருக்கின்றன. உதாரணமாக, உயிரற்ற இயற்கையில் ஒரு பக்கத்தில் அணுவின் நேர்ச் சக்திக் கருவுக்கும் மறு பக்கத்தில் அதன் எலெக்ட்ரானுக்கும் இடையில் ஒற்றுமை மற்றும் எதிர்நிலையின் மூலம் இதை விளக்க முடியும்; உயிருள்ள இயற்கையில் இந்த எதிர்நிலை களை! தன்மயமாக்கல் மற்றும் சிதைதலில் விளக்க முடியும்; சமூகத்தில் இவை வர்க்க முரணியல்புகள் எனப்படுகின்றன, சிந்தனையில் இவை பகுப்பாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு எனப்படுகின்றன. இந்த இயக்கவியல் முரண்பாட்டில் ஒரு எதிர் நிலையானது மறு எதிர் நிலை இல்லாமல் இருக்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் எதிர் நிலைகள் ஒரே நிகழ்வுக்குள் இருக்கின்றன; ஒருமையில் தம்மை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, தன் பயமாக்கல் மற்றும் சிதைதலில் ஒரு சாதிர்நிலை தன் னுடைய மறு எதிர் நிலையிலிருந்து பிரிந்து விடுவதாகக் கண நேரம் கற்பனை செய்து பாருங்கள். இது உயிருள்ள பொருளைத் தவிர்க்க முடியாதபடி அழித்து விடும், அதாவது அந்த நிகழ்வை அழித்து விடும். அவை பிரிக்கப்பட முடியா தவை: அவை அதே சமயத்தில் சமாதானமான, உடன்பாட்டு முறையில் இருக்க முடியாது, ஏனென்றால் அவை எதிர் நிலை கள், அதனால்தான் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நிகழ்வும் எதிர்நிலைகளின் போராட்டத்தையும் அவற்றின் ஒருமையையும் கொண்டிருக்கின்றன.

ஒரு நிகழ்வினுடைய வளர்ச்சிக்கு அடிகோலுகின்ற போராட்டம் இங்கே தலைமையான பாத்திரத்தை வகிக் கிறது. இந்தப் போராட்டம் பொருட்கள் மற்றும் நிகழ்வு களின் எல்லாக் கட்டங்களிலும் நடைபெறுகிறது. அது அத்தகைய ஒற்றுமையின் ஒவ்வொரு தோற்றத்திலும் அதன் சுற்றுவட்டத்திற்குள்ளேயும் நடைபெறுகிறது. போராட்டம் ஒற்றுமையின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் இன்றியமையாததாக்குகிறது. இந்த ஒற்றுமை நொறுங்கித் தகர்ந்து புதிய ஒற்றுமைக்கு வழி வகுக்கின்ற பொழுது அது குறிப்பிடத்தக்க தீவிரமான வடிவங்களை அடைகிறது. எதிர்நிலைகளின் போராட்டம் பழைய ஒற்றுமை சீர் குலைவதற்கும் அதற்குப் பதிலாகப் புதிய நிலைமைகளுக்குப் பொருத்தமான புதிய ஒற்றுமை ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது.

எதிர்நிலைகளின் ஒற்றுமை போராட்டத்தைப் போன்ற தல்ல, அது தற்காலிகமாக மட்டுமே இருக்கிறது. ஒற்றுமை போராட்டத்தின் விளைவாகத் தோன்றி அது பிணைக்கப் பட்டிருக்கின்ற முரண்பாடு முதிர்ச்சியடைந்து தீர்வு நிலையை அடைகின்ற வரை நீடித்த பிறகு, ஒரு புதிய ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த ஒற்றுமையின் எதிர்நிலைகளின் போராட்டத் தின் விளைவாக அது தகர்கிறது, அதன் பிறகு மற்றொரு ஒற்றுமை ஏற்படுகிறது, அதன் பிறகு நான்காவது ஒற்றுமை ஏற்படுகிறது, இப்படியே முடிவில்லாமல் நடைபெறுகிறது.

முரண்பாடுகள், எதிர்நிலைகளின் போராட்டம் எல்லா நிகழ்வுகள், நிகழ்வுப் போக்குகளின் இயக்கம் மற்றும் வளர்ச்சிக்கு உள் தோற்றுவாயாக இருக்கின்றன. உள் சக்திகளின் மூலம் பருப்பொருள் வளர்ச்சியடைகிறது; அது தனக்குள்ளே இந்த இயக்கத்தின் தோற்றுவாயைக் கொண்டிருக்கிறது.

இயக்கவியல் முரண்பாடுகளை எதிர்நிலைகள் ஒன்றை யொன்று முன்வைத்து, அதே சமயத்தில் ஒன்றையொன்று நிராகரிக்கின்ற பொழுது அவற்றின் இடையுறவு மற்றும் இடைத் தொடர்பு என்று தொகுத்துரைக்க முடியும். அவற்றுக்கு இடையிலான போராட்டமே வளர்ச்சியின் இயக்குச் சக்தியாகவும் தோற்றுவாயாகவும் இருக்கிறது, எதிர்நிலைகளின் ஒற்றுமை மற்றும் போராட்டத்தின் விதி இயக்கவியலின் மிக முக்கியமான குணாம்சங்களில் ஒன்றை வெளியிடுகிறது: இயக்கமும் வளர்ச்சியும் சுய இயக்கம், சுய வளர்ச்சி என்ற முறையில் நடைபெறுகின்றன.

அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் பரிணமித்தல் மற்றும் அதன் எதிரிடை

அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் பரிணமித்தல் மற்றும் அதன் எதிரிடை. எந்தப் பொருளுக்கும் அதை மற்ற பொருட்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற பண்பு உண்டு. அதற்கு ஒரு அளவுநிலை, அதாவது பரி மாணம் மற்றும் எடை இருக்கிறது.

அளவுநிலையும் பண்புநிலையும் நெருக்கமாக இணைந் திருப்பவை; அவற்றைப் பிரிக்க முடியாது. அதே சமயத்தில் அவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. பண்புநிலை மாற்றம் பொருளை மாற்றுகிறது. அது மற்றொரு பொரு ளாக மாறுவதற்கு இட்டுச் செல்கிறது. அளவுநிலை மாற்றங் கள் பொருளை உடனடியாக மாற்றிவிடுவதில்லை. உதார ணமாக, உலோகத்தின் வெப்ப நிலையைப் பத்து டிகிரிகள் - நூறு டிகிரிகள் கூட- அதிகப்படுத்த முடியும். எனினும் அது உடனே உருகி விடுவதில்லை. வெப்ப நிலை உச்ச கட்டத்தை, உருகு நிலையை அடைகின்ற வரை அது தன்னுடைய பெளதிக நிலையில் மாற்றமில்லாதிருக்கிறது; உருகு நிலையை அடைந்தவுடன் கடினமான பொருள் ஒரு திரவமாக மாறுகிறது. திரவம் கொதி நிலையை அடைகின்ற பொழுது வாயுவாக மாறுகிறது. இவ்விதத்தில் அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

அளவு ரீதியான மாற்றங்கள் இடையீடில்லாமலும் படிப் படியாகவும் நடைபெறுகின்றன. பண்பு ரீதியான மாற்றங் கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பாய்ச்சலைப் போல் நடைபெறுகின்றன. இயற்கையிலும் சமூகத்திலும் வளர்ச்சி மெதுவான பரிணாமம், வேகமான பாய்ச்சல்கள் என்னும் இரண்டு வடிவங்களில் நடைபெறுகின்றது.

அளவுநிலை மாற்றம் பண்புநிலை மாற்றமாகப் பரிணமிக் கின்ற நிகழ்வுப் போக்கு, ஒரு பொருள் அல்லது நிகழ்வு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல் பாய்ச்சல் எனப்படும். பண்புநிலை மொத்தமாக, உடனடியாக மாறு கின்ற பொழுது (உதாரணமாக, இரசாயனக் கிரியைகள் அல்லது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்) பாய்ச்சல் மிகவும் திடீரென்று நடைபெறக் கூடும். ஒரு பண்புநிலை மற்றொரு பண்புநிலையாகப் படிப்படியாக மாறுகின்ற பொழுது அது மெதுவாக நடைபெறக் கூடும் (உதாரண மாக, தாவரங்கள் பிராணிகளின் புதிய ரகங்கள் தோன்று தல்). இந்த உதாரணத்தில் பழைய பண்புநிலை புதிய பண்புநிலையாக உடனடியாக, முற்றாக அல்லாமல் பகுதி பகுதியாக மாறுகிறது; பழைய பண்புநிலையின் சில கூறுகள் அழிகின்றன; அவற்றுக்குப் பதிலாகப் புதிய பண்புநிலையின் கூறுகள் ஏற்படுகின்றன.

இந்த ரகத்தைச் சேர்ந்த பாய்ச்சலைப் பழைய பண்பு நிலையின் சுற்றுவட்டத்துக்குள் படிப்படியாக நடைபெறு கின்ற கூறுகளின் அளவு ரீதியான அதிகரிப்புடன் சேர்த்துக் கருதக் கூடாது.

அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங் களாகப் பரிணமித்தல் மற்றும் அதன் எதிரிடையின் விதி என்பது ஒரு பொருளின் அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான அம்சங்களின் இடைத் தொடர்பும் இடைச் செயலும் ஆகும், அங்கே சிறிய, ஆரம்பத்தில் புலனறியப்பட முடியாத, அளவு ரீதியான மாற்றங்கள் படிப்படியாகச் சேர்ந்து அடிப்படையான பண்புநிலை மாற்றங்களை ஏற் படுத்துகின்றன; அவை பாய்ச்சலில் நடைபெற்று பொருளின் இயல்பு மற்றும் அதன் வளர்ச்சியின் நிலைமை வற்புறுத்துகின்ற வடிவத்தை அடைகின்றன.

அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங் களாகப் பரிணமித்தலைப் பற்றிய புறநிலையான விதி பொருளாயத உலகத்தைப் புத்திளமையாக்குவதைக் குறிக் கிறது; அங்கே ஒவ்வொரு பாய்ச்சலும் பழமையை ஒழித்துப் புதுமையைத் தோற்றுவிக்கிறது.

நிலைமறுப்பின் நிலைமறுப்பு

நிலைமறுப்பின் நிலைமறுப்பு. முந்திய நிலையை நிலைமறுப்புச் செய்கின்ற பொழுது மட்டுமே பண்புநிலை மாற்றம் சாத்தியம், நிலைமறுப்பு எந்த வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாத, முறைப்படியான கட்டமாகும். இருத் தலின் பழைய வடிவங்களை நிலைமறுப்புச் செய்யாமல் எத்தகைய வளர்ச்சியும் சாத்தியமல்ல; ஏனென்றால் அப்படி நடைபெறும் பொழுது புதிதாக எதுவும் தோன்றாது என்பது இதற்குக் காரணமாகும். நிலைமறுப்பு என்றால் என்ன?

இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தின்படி நிலைமறுப்பு என்பது பழையனவற்றை முற்றிலும் ஒழித்தல் என்று அர்த்தமல்ல. முதலாவதாக, எளிமையான நிகழ்வு கள் அதிகச் சிக்கலான நிகழ்வுகளுடன் சேர்ந்தே இருக் கின்றன. உதாரணமாக, உயிருள்ள இயற்கையில் 1.1ல் பழங் காலத்து உயிரிகள் மிகவும் அமைப்பு ரீதியான பிற்காலத்துப் பிராணிகளுடன் சேர்ந்து வாழ்கின்றன. இரண்டாவதாக, ஏறுமுக வளர்ச்சி நிகழ்வுப் போக்கின் போது புதியவை பழையனவற்றிலிருந்து தோன்றுகின்ற பொழுது அவற்றிலிருக்கின்ற ஆக்கபூர்வமான மதிப்புடை யவை அனைத்தையும் தன்வயப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக, உயிருள்ள இயற்கையில் ஒவ்வொரு புதிய உயிரினமும் பரிணாம வளர்ச்சியின் போது முந்திய தலைமுறைகள் திரட்டிய ஆக்கபூர்வமான, மதிப்புடைய குணாம்சங்களைப் புனருற்பத்தி செய்து கொள்கிறது. மனித சமூக வரலாற்றிலும் கூட ஒவ்வொரு புதிய சமூக அமைப் பும் முந்திய சகாப்தங்களில் தோற்றுவிக்கப்பட்ட பொரு ளாயத, கலாசார மதிப்புகளை சுவீகரித்துக் கொள்கிறது.

நிலைமறுப்பு இணைப்பை, வளர்ச்சியின் தொடர்ச்சியை முன்னிலைப்படுத்துகிறது. நிலைமறுப்பின் விளைவாகத் தோன்றுகின்ற புதிய நிகழ்வு முந்திய கட்டத்தின் சாதனை களைத் தன்வயப்படுத்திக் கொள்கிறது, அதே சமயத்தில் ஏதோ புதிய ஒன்றாக, சாரத்தில் வளமான ஏதோ ஒன்றாக வெளிவருகிறது. நிலைமறுப்பின் நிலைமறுப்பு விதி வளர்ச்சியின் ஏறுமுகத் தன்மையை, கீழ்நிலையானவற்றி லிருந்து உயர்நிலையானவற்றுக்கு, எளிமையானவற்றி லிருந்து சிக்கலானவற்றை நோக்கி முன்னேறிச் செல்வதை விளக்குகிறது.
                  (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

5. பொருள்முதல்வாத இயக்கவியல்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


இயக்கவியல் - வளர்ச்சி மற்றும் சர்வாம்சத் தொடர்பு பற்றிய போதனை. பொருள்முதல்வாத இயக்கவியல் இயற்கையும் நம்மைச் சுற்றியுள்ள உலகமும் ஓய்வு நிலையில், அசையா நிலையில், தேக்க நிலையில், மாறா நிலையில் இருப்பதாகக் கருதவில்லை, ஆனால் அவை தொடர்ச்சியான இயக்கம் மற்றும் மாற்றம் அல்லது உள்முரண்பாடுகளினால் தூண்டப் படுகின்ற தொடர்ச்சியான புத்தெழுச்சி மற்றும் வளர்ச்சி நிலையில் இருக்கின்றன என்று கருதுகிறது. லெனின் தன் னுடைய இயக்கவியல் பிரச்சினையைப் பற்றி (தத்துவஞானக் குறிப்பேடுகளில் ஒரு பகுதி) என்னும் கட்டுரையில் இயக்க வியலின் கரு முரண்பாடுகளின் தத்துவம், எதிர் நிலைகளின் ஒருமைத் தத்துவம் என்ற அடிப்படையான கருத்தை மார்க்சிய வரலாற்றில் முதல் தடவையாக வகுத்துக் கூறி நிறுவினார். சுருக்கமாகச் சொல்வதென்றால், இயக்க வியலை எதிர்நிலைகளின் ஒருமைத் தத்துவம் என்று வரையறுக்க முடியும்'' என்று அவர் எழுதினார். (* Ibid, p. 222,)

பொருள்முதல்வாத இயக்கவியல் வளர்ச்சியின் தோற்று வாய்களைப் பொருட்கள், நிகழ்வுகளிலேயே உள்ளுறையாக இருக்கின்ற முரண்பாடுகளில் காண்கிறது. அது வளர்ச்சி யைக் கீழ்நிலையிலிருந்து உயர்நிலைக்கு, எளிமையான வற்றிலிருந்து சிக்கலானவற்றுக்கு இயக்கம், பாய்ச்சலான, புரட்சிகர நிகழ்வுப் போக்கு என்று கருதுகிறது. இந்த இயக்கம் மூடிய வளையத்துக்குள் நடைபெறவில்லை, ஒரு சுழலேணியில் நடைபெறுகிறது; அதன் ஒவ்வொரு சுழலும் முந்தியதைக் காட்டிலும் ஆழமானதாக, வளமானதாக, பன்முகத்தன்மை உடையதாக இருக்கிறது.

பொருள்முதல்வாத இயக்கவியலுக்கு எதிரிடையான இயக்கமறுப்பியல் மாற்றத்தை, பொதுவாக வளர்ச்சியை நிராகரிக்கிறது, அல்லது இந்த வளர்ச்சியை வெறும் அளவு ரீதியில் குறைத்தல் அல்லது சேர்த்தல் என்பதாகச் சுருக்கி விடுகிறது. இயக்கமறுப்பியல் நிகழ்ச்சிகளின் வளர்ச்சியின் உள் தோற்றுவாயை (முரண்பாடுகளைக்) காண்பதில்லை.

பொருளாயத உலகம் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பது மட்டுமின்றி, ஒரு ஒற்றை மொத்தமாகவும் இருக்கிறது. வெவ்வேறு பொருட்களுக்கு இடையில், ஒவ்வொரு தனிப் பொருளின் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் கூறுகளுக்கு இடையில் தொடர்பும் இடைச்செயலும் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமல்ல. ஒவ்வொரு பொருளும் உலகத்தில் இதரவற்றுடன் இணைக்கப்பட்டு, கடைசிப் பகுப்பாய்வில், எல்லாம் எல்லாவற்றுடன் சர்வப்பொதுவான தொடர்பும் இடைச் செயலும் கொண்டிருக்கின்ற ஒற்றை அங்கக நிகழ்வுப் போக்காக இருக்கிறது. ஏதாவதொரு நிகழ்வைச் சரியாகப் புரிந்து கொண்டு ஆராய வேண்டுமென்றால் அதை மற்ற நிகழ்வுகளுடன் தொடர்புடைய முறையில் பார்க்க வேண்டும், அதன் தோற்றுவாய்களும் வளர்ச்சியும் நெருங்கி ஆராயப்பட வேண்டும் என்பதற்கு இதுவே துல்லியமான காரணம் ஆகும். இயக்கவியல் சர்வப்பொதுவான தொடர் பின் விஞ்ஞானம் என்று கூறப்படுவதற்கும் இதுவே காரணம்.

உலகத்தை ஒற்றை அங்கக மொத்தமாக ஆராய்தல், தனிப் பொருட்களுக்கு இடையில் சர்வப்பொது இணைப்பு களை ஆராய்தல் ஆகியவற்றுக்குப் பொருள்முதல்வாத இயக்கவியலின் விதிகளும் வகையினங்களும் துணை புரிகின்றன.

விதி என்பது என்ன? அதன் தத்துவஞான விளக்கம் என்ன? விதி என்பது நிலையான தன்மை, திரும்பத் திரும்ப நிகழுதல் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட, நிகழ்வுகள் மற்றும் பொருட்களுக்கு இடையில் உள்ள புறநிலையான, பொதுப்படையான, அவசியமான, இன்றி யமையாத தொடர்பு ஆகும்.

மக்கள், இயற்கை மற்றும் சமூகத்தின் விதிகளைப் பற்றிய தம்முடைய அறிவை ஆதாரமாகக் கொண்டு உணர்வுபூர்வ மாக நடந்து கொள்கிறார்கள், சம்பவங்கள் நிகழவிருப்பதை முன்னரே அறிந்து கொள்கிறார்கள், இயற்கையின் பொருட் களையும் அவற்றின் இயல்புகளையும் சமூக நலன்களுக்காக மாற்றியமைக்கிறார்கள், குறி வழிப்பட்ட முறையில் சமூக நிலைமைகளை மாற்றுகிறார்கள். இடையிணைப்பைப் புரிந்து கொண்டதும் இருக்கின்ற நிலைமைகளின் நிரந் தரமான அவசியத்தைப் பற்றி எல்லாத் தத்துவ ரீதியான நம்பிக்கைகளும் - அவை நடைமுறையில் வீழ்ச்சியடைவதற்கு முன்பே - வீழ்ச்சி அடைந்து விடுகின்றன'' என்று மார்க்ஸ் எழுதினார். (* கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள் தொகுதி 6, பக்கம் 178.)

தனிப்பட்ட விதிகள் இயற்கை, சமூகம் அல்லது சிந்தனை யின் தனித்துறைகளில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை எடுத்துக் கொள்கின்றன, ஆனால் மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் உலகத்தின் சர்வப்பொதுவான இடைத் தொடர்புகளை நிறுவுகின்ற பொது விதிகளை ஆராய் கிறது. இந்த விதிகள் எல்லாப் பொருட்கள், நிகழ்வு களுக்கும் கையாளப்படுகின்றன; இவை இயக்கவியலின் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
        (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

4. உணர்வு என்பது புறநிலையான உலகத்தின் அகநிலையான பிம்பம்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உணர்வு என்பது புறநிலையான உலகத்தின் அகநிலையான பிம்பம். ஒரு பிம்பத்தின் அகநிலைத் தன்மையைப் பற்றி நாம் பேசுகின்ற பொழுது அந்த பிம்பம் ஒரு மனிதனுடைய மூளையில் உருமாற்றப்பட்டு மறு செயல்முறைக்கு உள் ளாகிய பொருளாயத நிலை என்று பொருள் கொள் கிறோம். மனிதனுடைய மூளையில் ஒரு பொருள், ஒரு வஸ்து ஒரு பிம்பமாகிறது, ஸ்தூலமான பொருள் அதன் முன்மாதிரியாகிறது. பொருள்முதல்வாதிக்கும் கருத்து முதல்வாதத் தத்துவத்தை ஆதரிப்பவருக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு - பொருள்முதல்வாதி புலனு ணர்ச்சி, புலனறிவு, எண்ணம் பொதுவாக மனிதனுடைய உணர்வு ஆகியவை புறநிலை எதார்த்தத்தின் பிம்பம் என்று கருதுகின்ற மெய்விவரத்தில் அடங்கியிருக்கிறது. உலகம் என்பது நம்முடைய உணர்வினால் பிரதிபலிக்கப் படுகின்ற புறநிலை எதார்த்தத்தின் இயக்கம் ஆகும். எண்ணங் கள், புலனறிதல்கள், இதரவற்றின் இயக்கம் எனக்கு வெளியே இருக்கின்ற பருப்பொருளின் இயக்கத்துடன் பொருந்துகிறது'' என்று லெனின் கூறினார். (* V. L Lenin, Collected Works, vol. 14, p. 267)

மனிதனுடைய புலனுணர்ச்சிகளும் சிந்தனைகளும் புற நிலையான உலகத்தின் பொருட்களின் பிம்பங்கள், பிரதிகள் என்று லெனின் கூறுகின்ற பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை நம்முடைய உணர்வில் தன்னியக்க, செயலற்ற (முறையில் புகைப்படம் எடுத்தல் என்பது அர்த்தமல்ல. மனிதனுடைய மூளை புகைப்படத் தகடு அல்ல, அது கண்ணாடியும் அல்ல. ஒரு நபர் தன்னுடைய சமூக வளர்ச்சி, கல்வி நிகழ்வுப் போக்கில், சமூக நடைமுறை நிகழ்வுப் போக்கில் வெளியுலகத்தைப் புறநிலை ரீதியில் பிரதிபலிக்கின்ற திறமையை வளர்த்துக் கொள்கிறார். அவருடைய படைப்புத் திறமை, ஆற்றல்கள் வளர்ச்சி யடையவில்லை என்றால் இப்பிரதிபலிப்பு ஏற்படாது. அவர் பொருட்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் வேறுபடுத்திக் கொள்வதற்கும், பொதுமையில் குறிப்பிட்டவற்றைக் காண் பதற்கும் படைப்புத் திறமை அவசியம்.

உலகத்தை மாற்றுவதற்கும் மனிதன் மற்றும் சமூகத்தின் நலன்களுக்கு அதை உட்படுத்துவதற்கும் உரிய மனிதனுடைய நடவடிக்கை உணர்வின் தோற்றம் மற்றும் வளர்ச்சியின் முக்கியமான சாரமாகவும் வரலாற்று அவசியமாகவும் இருக்க கிறது. லெனின் உணர்வின் சுறுசுறுப்பான பாத்திரத்தைப் பின்வரும் சொற்களில் தொகுத்துக் கூறினார்: ''மனிதனு டைய உணர்வு புறநிலை உலகத்தைப் பிரதிபலிப்பது மட்டும் மின்றி, அதைப் படைக்கிறது. உலகம் மனிதனுக்குத் திருப்தி அளிக்கவில்லை, மனிதன் தன்னுடைய நடவடிக்கை யினால் அதை மாற்ற முடிவு செய்கிறான்.” (Lenin, Collected Work S. vol. 38, pp. 212-213)

மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் - இயக்கவியல் பொருள்முதல்வாதம் - பருப்பொருள் முதன்மையானது, உணர்வு, சிந்தனை மற்றும் உணர்ச்சி இரண்டாம் நிலையானது, பருப்பொருளிலிருந்து தோன்றியது என்று கருதுகிறது. உணர்வு பருப்பொருளிலிருந்து, இயற்கையி லிருந்து, அதன் வளர்ச்சியின் மிக உயர்ந்த உற்பத்தியாகத் தோன்றுகிறது. உணர்வு வெறும் பிம்பமே, வெளியுலகத்தின் பிரதிபலிப்பே.
             (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

3. உணர்வு - உயர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பண்பு– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உணர்வு - உயர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பண்பு. மனிதனுக்கு உணர்வு இருக்கிறது. அதாவது சிந்திக்க, உணர், அறியக் கூடிய திறமை, சொந்தக் கருத்துகள், எண்ணங்கள், இதரவற்றை உருவாக்கிக் கொள்கின்ற ஆற்றல் இருக்கிறது. இந்த நிகழ்வின் உண்மையான இயல்பு என்ன, அதன் பிறப்பிடம் எங்கே இருக்கிறது, உணர்வுக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவு என்ன என்ற கேள்வி தானாகவே தோன்றுகிறது.

மிகவும் தொன்மையான காலத்தில் மனிதன் தன்னுடைய அறிவின் மர்மத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். உயிரில்லாத பருப்பொருள் ஒரு குறிப்பிட்ட வார்ச்சிக் கட்டத்தை அடைந்ததும் உயிருள்ள பருப்பொருளை எப் படித் தோற்றுவிக்கிறது, அது உணர்வை எப்படி உருவாக்கு கிறது என்பதைப் பற்றி மக்கள் வியப்படைந்தார்கள்.

பருப்பொருளின் நீண்ட பரிணாமத்தின் விளைவாக உணர்வு உருவாகிறது என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித் திருக்கிறது. பருப்பொருள், இயற்கை ஆகியவை எப் (பொழுதுமே இருந்து வந்திருக்கின்றன. ஆனால் சிந்திக் கின்ற திறனுடைய மனிதன் தோன்றுவதற்குப் பல மில்லியன் ஆண்டுகளாயின.

உணர்வு வளர்ச்சியடைகின்ற பருப்பொருளிலிருந்து தோன்றியது; அதிலிருந்து அதைப் பிரிக்க முடியாது. பருப்பொருளிலிருந்து சுயேச்சையான முறையில் தோன்றி யிருக்கக் கூடிய உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஒரு வரும் ஒருபோதும் அனுபவித்ததில்லை. எல்லா மனிதர் சுளுக்கும் மூளை சிந்தனை உறுப்பாக இருக்கிறது; மூளை இருப்பதால் மட்டுமே உணர்வு இருக்கிறது. வேறு வார்த்தை களில் சொல்வதென்றால், உணர்வு எந்த ரகத்தைச் சேர்ந்த பருப்பொருளுக்கும் இயல்பு அல்ல; அது உயர்ந்த அமைப்பு ரீதியாக்கப்பட்ட பருப்பொருளுக்கு மட்டுமே இயல்பாகும், அது மனித மூளையின் நடவடிக்கையுடனும் பிரத்யேகமான மனிதத் தன்மையைக் கொண்ட, சமூக வாழ்க்கை முறை யுடனும் இணைந்திருக்கிறது.

உணர்வு மூளை இருத்தலை மட்டுமின்றி, மூளையின் மீது தாக்கம் செலுத்தி அதனால் பிரதிபலிக்கட்டாடுகின்ற பொருளாயதப் பொருட்களின் இருத்தலையும் வலியுறுத்து கிறது. பொருளாயத உலகம் புலனுறுப்புகளின் மூலமாக மூளையின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் வழியே உணர்வு தோன்றுகிறது. நம்முடைய புலனுறுப்புகள் உயிரி யின் உடலுக்குள் அல்லது புறச் சூழலில் ஏற்படுகின்ற பல்வேறு மாற்றங்களைப் பிரதிபலித்து உடலுக்குச் சமிக்கை அளிக்கின்ற "கருவிகளே''. நம்முடைய புலனுறுப்பு களிலிருந்து (காண்பது, கேட்டல், முகர்தல், ருசித்தல், தொடுதல், மூளைக்கு வருகின்ற சமிக்கைகள் பொருட்களின் இயல்புகளையும் அவற்றின் இணைப்புகளையும் அவை ஒன்றோடொன்று வைத்திருக்கின்ற தொடர்புகளையும் பற்றி செய்திகளைத் தருகின்றன, புலனுறுப்புகளின் மீது தாக்கத்தினால் கிளறிவிடப்படுகின்ற தூண்டுதல் மூளையை அடைகின்ற பொழுது மட்டுமே புலனுணர்ச்சியாக, உணர்வுக் காரணியாக ஆகிறது.
         (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)