Sunday, 21 July 2019

4. உணர்வு என்பது புறநிலையான உலகத்தின் அகநிலையான பிம்பம்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உணர்வு என்பது புறநிலையான உலகத்தின் அகநிலையான பிம்பம். ஒரு பிம்பத்தின் அகநிலைத் தன்மையைப் பற்றி நாம் பேசுகின்ற பொழுது அந்த பிம்பம் ஒரு மனிதனுடைய மூளையில் உருமாற்றப்பட்டு மறு செயல்முறைக்கு உள் ளாகிய பொருளாயத நிலை என்று பொருள் கொள் கிறோம். மனிதனுடைய மூளையில் ஒரு பொருள், ஒரு வஸ்து ஒரு பிம்பமாகிறது, ஸ்தூலமான பொருள் அதன் முன்மாதிரியாகிறது. பொருள்முதல்வாதிக்கும் கருத்து முதல்வாதத் தத்துவத்தை ஆதரிப்பவருக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு - பொருள்முதல்வாதி புலனு ணர்ச்சி, புலனறிவு, எண்ணம் பொதுவாக மனிதனுடைய உணர்வு ஆகியவை புறநிலை எதார்த்தத்தின் பிம்பம் என்று கருதுகின்ற மெய்விவரத்தில் அடங்கியிருக்கிறது. உலகம் என்பது நம்முடைய உணர்வினால் பிரதிபலிக்கப் படுகின்ற புறநிலை எதார்த்தத்தின் இயக்கம் ஆகும். எண்ணங் கள், புலனறிதல்கள், இதரவற்றின் இயக்கம் எனக்கு வெளியே இருக்கின்ற பருப்பொருளின் இயக்கத்துடன் பொருந்துகிறது'' என்று லெனின் கூறினார். (* V. L Lenin, Collected Works, vol. 14, p. 267)

மனிதனுடைய புலனுணர்ச்சிகளும் சிந்தனைகளும் புற நிலையான உலகத்தின் பொருட்களின் பிம்பங்கள், பிரதிகள் என்று லெனின் கூறுகின்ற பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை நம்முடைய உணர்வில் தன்னியக்க, செயலற்ற (முறையில் புகைப்படம் எடுத்தல் என்பது அர்த்தமல்ல. மனிதனுடைய மூளை புகைப்படத் தகடு அல்ல, அது கண்ணாடியும் அல்ல. ஒரு நபர் தன்னுடைய சமூக வளர்ச்சி, கல்வி நிகழ்வுப் போக்கில், சமூக நடைமுறை நிகழ்வுப் போக்கில் வெளியுலகத்தைப் புறநிலை ரீதியில் பிரதிபலிக்கின்ற திறமையை வளர்த்துக் கொள்கிறார். அவருடைய படைப்புத் திறமை, ஆற்றல்கள் வளர்ச்சி யடையவில்லை என்றால் இப்பிரதிபலிப்பு ஏற்படாது. அவர் பொருட்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் வேறுபடுத்திக் கொள்வதற்கும், பொதுமையில் குறிப்பிட்டவற்றைக் காண் பதற்கும் படைப்புத் திறமை அவசியம்.

உலகத்தை மாற்றுவதற்கும் மனிதன் மற்றும் சமூகத்தின் நலன்களுக்கு அதை உட்படுத்துவதற்கும் உரிய மனிதனுடைய நடவடிக்கை உணர்வின் தோற்றம் மற்றும் வளர்ச்சியின் முக்கியமான சாரமாகவும் வரலாற்று அவசியமாகவும் இருக்க கிறது. லெனின் உணர்வின் சுறுசுறுப்பான பாத்திரத்தைப் பின்வரும் சொற்களில் தொகுத்துக் கூறினார்: ''மனிதனு டைய உணர்வு புறநிலை உலகத்தைப் பிரதிபலிப்பது மட்டும் மின்றி, அதைப் படைக்கிறது. உலகம் மனிதனுக்குத் திருப்தி அளிக்கவில்லை, மனிதன் தன்னுடைய நடவடிக்கை யினால் அதை மாற்ற முடிவு செய்கிறான்.” (Lenin, Collected Work S. vol. 38, pp. 212-213)

மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் - இயக்கவியல் பொருள்முதல்வாதம் - பருப்பொருள் முதன்மையானது, உணர்வு, சிந்தனை மற்றும் உணர்ச்சி இரண்டாம் நிலையானது, பருப்பொருளிலிருந்து தோன்றியது என்று கருதுகிறது. உணர்வு பருப்பொருளிலிருந்து, இயற்கையி லிருந்து, அதன் வளர்ச்சியின் மிக உயர்ந்த உற்பத்தியாகத் தோன்றுகிறது. உணர்வு வெறும் பிம்பமே, வெளியுலகத்தின் பிரதிபலிப்பே.
             (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

3. உணர்வு - உயர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பண்பு– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


உணர்வு - உயர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பண்பு. மனிதனுக்கு உணர்வு இருக்கிறது. அதாவது சிந்திக்க, உணர், அறியக் கூடிய திறமை, சொந்தக் கருத்துகள், எண்ணங்கள், இதரவற்றை உருவாக்கிக் கொள்கின்ற ஆற்றல் இருக்கிறது. இந்த நிகழ்வின் உண்மையான இயல்பு என்ன, அதன் பிறப்பிடம் எங்கே இருக்கிறது, உணர்வுக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவு என்ன என்ற கேள்வி தானாகவே தோன்றுகிறது.

மிகவும் தொன்மையான காலத்தில் மனிதன் தன்னுடைய அறிவின் மர்மத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். உயிரில்லாத பருப்பொருள் ஒரு குறிப்பிட்ட வார்ச்சிக் கட்டத்தை அடைந்ததும் உயிருள்ள பருப்பொருளை எப் படித் தோற்றுவிக்கிறது, அது உணர்வை எப்படி உருவாக்கு கிறது என்பதைப் பற்றி மக்கள் வியப்படைந்தார்கள்.

பருப்பொருளின் நீண்ட பரிணாமத்தின் விளைவாக உணர்வு உருவாகிறது என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித் திருக்கிறது. பருப்பொருள், இயற்கை ஆகியவை எப் (பொழுதுமே இருந்து வந்திருக்கின்றன. ஆனால் சிந்திக் கின்ற திறனுடைய மனிதன் தோன்றுவதற்குப் பல மில்லியன் ஆண்டுகளாயின.

உணர்வு வளர்ச்சியடைகின்ற பருப்பொருளிலிருந்து தோன்றியது; அதிலிருந்து அதைப் பிரிக்க முடியாது. பருப்பொருளிலிருந்து சுயேச்சையான முறையில் தோன்றி யிருக்கக் கூடிய உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஒரு வரும் ஒருபோதும் அனுபவித்ததில்லை. எல்லா மனிதர் சுளுக்கும் மூளை சிந்தனை உறுப்பாக இருக்கிறது; மூளை இருப்பதால் மட்டுமே உணர்வு இருக்கிறது. வேறு வார்த்தை களில் சொல்வதென்றால், உணர்வு எந்த ரகத்தைச் சேர்ந்த பருப்பொருளுக்கும் இயல்பு அல்ல; அது உயர்ந்த அமைப்பு ரீதியாக்கப்பட்ட பருப்பொருளுக்கு மட்டுமே இயல்பாகும், அது மனித மூளையின் நடவடிக்கையுடனும் பிரத்யேகமான மனிதத் தன்மையைக் கொண்ட, சமூக வாழ்க்கை முறை யுடனும் இணைந்திருக்கிறது.

உணர்வு மூளை இருத்தலை மட்டுமின்றி, மூளையின் மீது தாக்கம் செலுத்தி அதனால் பிரதிபலிக்கட்டாடுகின்ற பொருளாயதப் பொருட்களின் இருத்தலையும் வலியுறுத்து கிறது. பொருளாயத உலகம் புலனுறுப்புகளின் மூலமாக மூளையின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் வழியே உணர்வு தோன்றுகிறது. நம்முடைய புலனுறுப்புகள் உயிரி யின் உடலுக்குள் அல்லது புறச் சூழலில் ஏற்படுகின்ற பல்வேறு மாற்றங்களைப் பிரதிபலித்து உடலுக்குச் சமிக்கை அளிக்கின்ற "கருவிகளே''. நம்முடைய புலனுறுப்பு களிலிருந்து (காண்பது, கேட்டல், முகர்தல், ருசித்தல், தொடுதல், மூளைக்கு வருகின்ற சமிக்கைகள் பொருட்களின் இயல்புகளையும் அவற்றின் இணைப்புகளையும் அவை ஒன்றோடொன்று வைத்திருக்கின்ற தொடர்புகளையும் பற்றி செய்திகளைத் தருகின்றன, புலனுறுப்புகளின் மீது தாக்கத்தினால் கிளறிவிடப்படுகின்ற தூண்டுதல் மூளையை அடைகின்ற பொழுது மட்டுமே புலனுணர்ச்சியாக, உணர்வுக் காரணியாக ஆகிறது.
         (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

2. விசும்பும் காலமும் - பருப்பொருள் நிலவும் வடிவங்கள்– வி.காரட்நோவ், வி.புசுயெவ்


விசும்பும் காலமும் - பருப்பொருள் நிலவும் வடிவங்கள். பருப்பொருளின் இயக்கம் விசும்பிலும் காலத்திலும் நடை பெறுகிறது. விசும்புக்கும் காலத்துக்கும் வெளியே பருப் பொருள் இருப்பதில்லை. அவற்றின் தத்துவஞான விளக்கம் என்ன?

விசும்பும் காலமும் நம்முடைய உணர்விலிருந்து புற நிலையாக, சுயேச்சையாக இருக்கின்றன. தத்துவஞானம் விசும்பைப் பருப்பொருள் நிலவும் வடிவமாகக் கருதுகிறது; விசும்பு பருப்பொருளின் விரிவை, பொருளாயத உலகத்தின் மற்ற பொருட்கள் மத்தியில் அதன் இடத்தையும் நிலைமாறு வதையும் குறிக்கிறது.

பருப்பொருள் நிலவும் மற்றொரு வடிவம் காலம். அது எல்லாப் பொருட்களின் இருத்தலின் கால அளவையும் அவற்றின் நிலைமைகள் ஒன்றை மற்றொன்று அகற்றுகின்ற காலவரிசை முறையையும் குறிக்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் விசும்பில் இருத்தல் என்பது மற்ற பொருட்களுடன் உள்ள உறவில், ஒன்று மற்றொன்றுடன் கொண்டுள்ள உறவில் இருத்தல் எனப் பொருள்படும்; காலத்தில் இருத்தல் என்பது அடுத் தடுத்துத் தொடர்கின்ற கால வரிசையில் இருத்தல் எனப் பொருள்படும்.

பருப்பொருள், விசும்பு, காலம் ஆகியவை மனித உணர் விலிருந்து சுயேச்சையான முறையில் இருக்கின்றன; அவை நெருக்கமாக இணைந்திருக்கின்றன, பருப்பொருள் காலத் துக்கும் விசும்புக்கும் அப்பால் இருக்க முடியாது என்பதைப் போல் அவையும் பருப்பொருள் இல்லாமல் இருக்க முடியாது. விசும்பும் காலமும் பருப்பொருளுடன் பிணைக்கப்பட் டிருப்பது மட்டுமன்றி அவை ஒன்றோடொன்று பிணைக்கப் பட்டிருக்கின்றன. உலகத்தில் இயக்கத்தில் இருக் கின்ற பருப்பொருளைத் தவிர வேறு எதுவுமில்லை; இயக்கத் தில் இருக்கின்ற பருப்பொருள் விசும்டையும் காலத் தையும் அன்றி வேறு முறையில் இயங்க முடியாது" என்று லெனின் கூறினார். (V. I. Lenin, Collected Works, vol. 14, p. 175.)

நித்தியமான பொருட்கள், நிகழ்வுப் போக்குகள் அல்லது நிகழ்வுகள் என்பவை கிடையா என்பதை மனிதகுலத்தின் மொத்த அனுபவமும் நிரூபித்திருக்கிறது. பல பில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகின்ற வான மண்டலப் பொருட் கள் கூட ஆரம்பத்தையும் முடிவையும் கொண்டிருக்கின்றன; ஏனென்றால் அவை தோன்றி முடிவில் மறைகின்றன, ஆனால் தத்துவஞான அர்த்தத்தில் பருப்பொருள் நித் தியமானது; ஏனென்றால் சிதைவுறுதல் அல்லது அழிதல் மூலம் பொருட்கள் எந்தச் சுவடும் இல்லாமல் மறைவதில்லை; அவை வேறு பொருட்களாக, நிகழ்வுகளாக மாற்றமடை கின்றன. உதாரணமாக, ஒரு பொருளின் மூலக்கூறுகள் சிதைவுறுதல் வேறு பொருட்களின் மூலக்கூறுகள் தோன்று வதற்கு வழி வகுக்கிறது. உயிரிகளின் ஒரு தலைமுறை - உயிரினங்கள் கூட- அடுத்த தலைமுறைகளாலும் உயிரினங் களாலும் அகற்றப்படுகின்றன. ஒரு விண்மீன் அழிந்து விட்டது என்றால் அதன் பொருளில் எதுவும் மிஞ்சவில்லை என்பது அர்த்தமல்ல. பருப்பொருளின் நிலைப்பு விதிகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானங்கள் பருப்பொருள் பல்வேறு மாற்றங்களை அடைந்தாலும் அது ஒருபோதும் ''ஒன்றுமில் லாததாக" மறைந்து விடுவதில்லை, அது ஒன்றுமில்லாத்தி லிருந்து தோன்றுவதும் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. பருப்பொருள் நித்தியமானது, அதைப் படைக்க முடியாது, அழிக்கவும் முடியாது. பருப்பொருள் எப்பொழுதும் எங்கும் இருக்கிறது.

பருப்பொருள் காலத்தைப் பொறுத்தமட்டில் நித்தியமாக இருப்பது மட்டுமன்றி, விசும்பைப் பொறுத்தமட்டில் முடிவில் லாததாகவும் இருக்கிறது. இயற்கை விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புகள் நமக்குத் தெரிந்துள்ள உலகத்தின் விசும்பின் எல்லைகளைத் தொடர்ச்சியாக விரிவுபடுத்திக் கொண்டிருக் கின்றன. நம்மிடமிருந்து பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கின்ற விண்மீன்களை நாம் பார்ப்பதற்கு நவீனத் தொலைநோக்கிகள் நமக்கு உதவுகின்றன. ஒரு மின்னணு நுண்ணோக்கியினால் கூடக் கண்டுபிடிக்கப்பட முடியாத மிகச் சிறிய தூரங்களை அளப்பதற்கு அணுத்துகள் களின் முடுக்குப் பொறிகள் உதவுகின்றன. பொருளாயத உலகத்தின் எல்லைகள் உண்மையாகவே முடிவில்லாதவை ஆகும்.
(மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

1. பருப்பொருள் - அதன் குணாம்சங்களும் வாழ்நிலையின் வடிவங்களும் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


பருப்பொருளும் இயக்கமும். தத்துவஞானத்தின் அடிப்படை யான கேள்விக்கு மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் எப்படி பதிலளிக்கிறது? வெளியுலகம் நம்முடைய உணர் வுக்குச் சம்பந்தமில்லாத முறையில் புறநிலையாக இருக்கிறது என்ற அனுமானத்திலிருந்து அது முன்னேறுகிறது. இது பொருளாயத உலகம்.

மக்கள் சிகப்பு நிறத்துக்கு அப்பால் கண்ணுக்குப் புலப் படாத ஒளிக்கதிர்களை (infra-red radiation) அல்லது ஒலியைக் காட்டிலும் வேகமானவற்றை [ultra-Sound) அறியாத காலம் இருந்தது. அவை இருந்தன, ஆனால் மனிதன் அவற்றை அப்பொழுது அறியவில்லை. அவை மனிதனுடைய உணர்விலிருந்து புறநிலையானவை, சுயேச் சையாக இருப்பவை என்ற காரணத்தினால்தான் மார்க்சிய லெனினியத் தத்துவஞானம் பொருட்கள், நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றையும் பருப்பொருள் என்ற மொத்த இனத்தில் சேர்க்கிறது.

பருப்பொருளை அறிவது எப்படி? வெளியுலகத்திலுள்ள பொருட்களின் பொருளாய்தத் தன்மையை, அப்பொருட் கள் நம்முடைய புலனுறுப்புகளின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்திலிருந்தும் அவை நம்முடைய புலனுணர்ச்சிகளி. னால் பிரதிபலிக்கப்படுகின்ற தன்மையிலிருந்தும் அறிய முடியும். எல்லாவற்றையும் நாம் பார்க்க முடியாது அல்லது உணர முடியாது என்பது உண்மையே. உதாரணமாக, நாம் மின் அலையை அல்லது காந்தக் களத்தை நம்முடைய கைகளால் தொட முடியாது. ஆனால் விசேஷமான கருவி களைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடிக்க முடியும். பருப் பொருள் எந்த வடிவத்திலிருந்தாலும் நம்முடைய உணர்ச்சி களின் மூலமாக நாம் அதை அறிய முடியும்,

“பருப்பொருள்” என்பது பரந்த கருத்து; இரசாயனப் பொருள், புவி ஈர்ப்புக் களம் மற்றும் இதர ஸ்தூலமான ரகங்களில் ஏதாவது ஒன்றுடன் அதை இனங்கண்டு கொள்ளக் கூடாது. பருப்பொருள் என்பது உலகத்தின் ஒருமை மற்றும் பல்வகையானது; பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் -அவற் றின் குணாம்சங்கள், அவற்றுக்கு இடையிலான உறவுகளின் கூட்டு மொத்தம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பருப்பொருள் என்பது நம்முடைய புலனுணர்ச்சிகளின் மூலம் நாம் அறிகின்ற புறநிலை எதார்த்தம் ஆகும்.

பருப்பொருளின் கட்டமைப்பின் வேறுபடுந்தன்மை மற்றும் குறையாத தன்மையைப் பற்றிய ஆராய்ச்சி முடிவு களை ஆதாரமாகக் கொண்டு லெனின் பருப்பொருளைப் பற்றிய தத்துவஞானக் கருத்தைப் பின்வருமாறு வகுத் தளித்தார்: "பருப்பொருள் என்பது மனிதனுடைய புலனுணர்ச்சிகள் அவனுக்கு எடுத்துக்காட்டுகின்ற புறநிலை) எதார்த்தத்தைக் குறிக்கின்ற தத்துவஞான வகையினம்; அந்த எதார்த்தம் தமது புலனுணர்ச்சிகளிலிருந்து சுயேச் சையான முறையில் இருக்கிறது, அவற்றால் பிரதி எடுக்கப் படுகிறது, புகைப்படம் எடுக்கப்படுகிறது, பிரதிபலிக்கப் படுகிறது." (V. I. Lenin, Collected Works, vol. 14, p. 130.)

பருப்பொருளைப் பற்றி லெனின் கொடுத்துள்ள வரை யறுப்பு ஏற்கெனவே மனிதன் அறிந்திருக்கின்ற பொருட் களை மட்டுமன்றி, எதிர்காலத்தில் அறிவியல் கண்டுபிடிக்கக் கூடிய பொருட்களையும் உள்ளடக்கியிருக்கிறது. மக்கள் விண்வெளிக்குள் ஊடுருவுவதன் மூலம் அல்லது அணுத் திரண்மங்களை ஆராய்வதன் மூலம் பருப்பொருளின் புதிய ரகங்களைக் கண்டுபிடிப்பது உறுதி. ஆனால் பருப்பொருள் எவ்விதமான புதிய குணாம்சங்களைக் கொண்டிருந்தாலும் அது இன்னும் நம்முடைய உணர்விலிருந்து தனித்த முறை யில் புறநிலை எதார்த்தமாகவே இருக்கும்.

நம்மைச் சுற்றி இருக்கின்ற உலகம் ஒன்றுபட்ட பொரு ளாயத உலகம் ஆகும். எல்லாப் பொருட்களும் எல்லா நிகழ்வுப் போக்குகளும் பருப்பொருளின் வெளிப்பாடுகளும் வடிவங்களும் மட்டுமே. அறிவியலின் வளர்ச்சியும் மனித னுடைய மொத்த செய்முறை நடவடிக்கையும் உலகத்தின் பொருளாயத ஒருமையின் இருத்தலைச் சுட்டிக் காட்டு கின்றன. வான இயல், பெளதிகம் மற்றும் இரசாயன இயல் பூமி மற்றும் வான மண்டலத்திலுள்ள பொருட்களின் பெளதிக- இரசாயனக் கட்டமைப்பின் ஓரினத் தன்மையைச் சுட்டிக் காட்டுவதுடன் அவற்றின் இயக்கத்தை அதே விதிகள் நிர்ணயிக்கின்றன என்பதையும் நிரூபிக்கின்றன. உயிரியலும் மரபுவழிப்பண்பியலும் அனைத்து உயிரிகளின் கட்டமைப்பிலும், செயல்பாட்டிலும் உள்ள ஒருமையை, நிரூபிக்கின்றன. உடலியல் ஆன்மிக ஆற்றலுக்குப் பொரு ளாயத அடிப்படை இருப்பதை நிரூபிக்கிறது.

புறநிலை எதார்த்தம் என்ற முறையில் பருப்பொருளைப் பற்றிய கருதுகோள் பருப்பொருளின் எல்லா இயல்புகள், இயக்கத்தின் வடிவங்கள், இருத்தலின் விதிகள் இதரவற்றைக் குறிக்கிறது.

பருப்பொருளின் அழியாத இயல்புகளில் ஒன்று அது இயக்கத்தில் மட்டுமே இருக்கிறது, “...சாதாரண இடப் பெயர்ச்சி முதல் சிந்தனை வரை பிரபஞ்சத்தில் நிகழ்கிற எல்லா மாற்றங்களையும் வளர்ச்சிப் போக்குகளையும் விரி வாகத் தழுவுகிறது'', (கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், வி. இ. லெனின், இயக்கவியல் பொருள் முதல்வாதம், பக்கம் 85.) பிரபஞ்சத்தில் நடைபெறுகின்ற எல்லா பெளதிக, இரசாயன மற்றும் இதர நிகழ்வுப் போக்குகள் நின்று விடுவதாகக் கற்பனை செய்யுங்கள். உலகம் மொத்தமாக மறைவதற்கு அது சமமாக இருக்கும்.

பொதுவாக மாற்றம், முடிவில்லாத வளர்ச்சி நிகழ்வுப் போக்கு என்று கருதப்படுகின்ற இயக்கம் பருப் பொருளின் அடிப்படையான இயல்பு, அதன் இருத்தலின் சாதனம். எளிய துகள்கள், அணுக்கள், மூலக்கூறுகளின் இயக்கம் எல்லா பொருளாயதப் பொருட்களிலும் நடைபெறு கிறது. அப்படிப்பட்ட ஒவ்வொரு பொருளும் புறச்சூழலுடன் இடைச் செயல் புரிகிறது, அந்த இடைச் செயல் ஏதா வதொரு வகையான இயக்கமாகும். பூமியைப் பொறுத்த மட்டில் இயங்கா நிலையில் இருக்கின்ற எந்தவொரு பொருளும் அதனுடன் சேர்ந்து சூரியனைச் சுற்றி வருகிறது; சூரியனுடன் சேர்ந்து நட்சத்திர மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்களைப் பொறுத்தமட்டில் நகர்ந்து கொண் டிருக்கிறது; நட்சத்திர மண்டலம் இதர நட்சத்திர மண்டலங் களைப் பொறுத்தமட்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது, இதரவை. முற்றிலும் இயங்கா நிலை, முற்றிலும் சமநிலை, அசைவில்லாத நிலை என்று எதுவும் இல்லை, எந்த இயங்கா நிலை அல்லது, சமநிலையும் சார்புநிலையானவையே. உதார ணமாக, ஒரு பொருள் பூமியைப் பொறுத்தமட்டில் முற்றி லும் இயங்கா நிலையில் இருக்க முடியும்; ஆனால் அதே சமயத்தில் நம்முடைய கிரகத்துடன் சேர்ந்து சூரியனைச் சுற்றி வர முடியும்.

அறிவியல் இயக்கத்தின் பின்வரும் வடிவங்களை வரை யறுத்திருக்கிறது: இயந்திர வடிவம் (இடஞ்சார்ந்த இயக்கம்); பெளதிக வடிவம் (மின் காந்தம், புவி ஈர்ப்பு, வெப்பம், ஒலி, பொருளின் மொத்த நிலைகளில் மாற்றங்கள், இதரவை); இரசாயன வடிவம் (பொருட்களில் உள்ள அணுக்கள், மூலக்கூறுகளின் மாற்றம்); உயிரியல் வடிவம் (உயிரிகளின் வளர்சிதை மாற்றம்); சமூகவியல் வடிவம் (சமூக மாற்றங்கள், சிந்தனை நிகழ்வுப் போக்குகள்). இயக்கத்தின் புதிய வடிவங்கள் பல் சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன. எளிய துகள்களின் போக்குவரத்து மற்றும் உருமாற்றம், அணுக்கூறுகள், அணுக்கருக்களுக்கு உள்ளே நடைபெறுகின்ற நிகழ்வுப் போக்குகள், இதரவை இவற்றில் அடங்கும்.

ஆகவே இயக்கம் என்பது பருப்பொருளின் சர்வப் பொதுவான இயல்பு, அதன் இருத்தலின் சாதனம். இயக்கம் இல்லாமல் பருப்பொருள் இருக்க முடியாது; பருப்பொருள் இல்லாமல் இயக்கம் இருக்க முடியாது.
                                 (மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?)

தத்துவஞானத்தின் அடிப்படைக் கேள்வி – வி.காரட்நோவ், வி.புசுயெவ்


தத்துவஞானத்தின் அடிப்படைக் கேள்வி. நெடுங்காலத்துக்கு முன்பு மக்கள் முதன்முறையாக உலகத்தின் தோற்றுவாய்கள், அதன் கட்டமைப்பு, அந்த உலகத்தில் மனிதன் வகித்த இடம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்த பொழுது தத்துவஞானம் தோன்றியது.

நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருட்களும் பொரு ளாயதமானவை அல்லது கருத்தியலானவை அல்லது பொரு ளாயதம் அற்றவை என்ற உண்மை உலகத்தைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானதாகும். சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி மக்களுடைய அணுகுமுறை என்ன, உலகத்தின் தோற்றத்தை அவர்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் ஆகியவை தத்துவஞானிகளைக் கருத்துமுதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் என்னும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றன. வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும், பொருளாயதத்துக்கும் ஆன்மிகத்துக்கும் இடையிலுள்ள உறவு தத்துவஞானத்தின் அடிப்படைக் கேள்வியாகும். இந்த இரண்டு பிரிவினரும் பல நூற்றாண்டுகளாக இதைப் பற்றிக் காரசாரமான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

பருப்பொருள் முதன்மையானது, உணர்வு இரண்டாம் நிலையானது, உணர்வு பருப்பொருளிலிருந்து தோன்றுகிறது என்று பொருள்முதல்வாதிகள் கருதுகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை; அது சுயேச்சையான எந்த அறிவினாலோ, ஆன்மாவினாலோ படைக்கப்படவில்லை. உணர்விலிருந்து சுயேச்சையாக இருக்கின்ற புறநிலையான பொருட்களை மக்களுடைய உணர்வு பிரதிபலிக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இயற்கை தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்டே! மெய்ப்பொருள் (பகுத்தறிவு, ஆன்மா, இதரவை) இருக்கிறது. உண்மையில் அதைப் படைத்ததும் அதுவே என்று கருத்துமுதல்வாதிகள் கூறுகிறார்கள். ஆனால் எந்த உணர்வு உலகத்தைப் படைத்தது'' என்ற கேள்விக்குப் பதிலளிக் கின்ற பொழுது கருத்துமுதல்வாதிகள் பிரிந்து விடுகிறார்கள். வெளியுலகத்தின் பொருட்களும் நிகழ்வுகளும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனாலும் படைக்கப்பட்டவை என்று அகநிலைக் கருத்துமுதல்வாதிகள் கருதுகிறார்கள், "மொத்த உலகமும் என்னுடைய பல உணர்ச்சிகளின் தொகுதியே'' என்னும் வாக்கியத்தில் அவர்கள் தம்முடைய தத்துவம் முழுவதையும் சுருக்கிக் கூறுகிறார்கள். பொரு ளாய்த் உலகம் தனி நபருடைய உணர்வுக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ஏதோ ஒரு விதமான சர்வப்பொது அறிவின் விளைவு என்று புறநிலைக் கருத்துமுதல்வாதிகள் கருது கிறார்கள்.

தத்துவஞானத்தின் அடிப்படையான கேள்வி இரண்டு அம்சங்களில் ஆராயப்படுகிறது. முதலில் தோன்றியது பருப் பொருளா, உணர்வா என்ற கேள்வி இதில் ஒரு அம்சமாகும்; உலகம் அறியப்படக் கூடியதா, மனிதன் இயற்கையின் ரகசியங்களுக்குள் ஊடுருவிச் சென்று அதன் விதிகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு இரண்டாவது அம்சம் பதிலளிக்க முற்படுகிறது. உலகம் அறியப்படக் கூடியதே என்று பொருள்முதல்வாதிகள் வலியுறுத்துகிறார்கள். சில கருத்துமுதல்வாதிகள் இதை மறுத்து உலகம் அறியப்படக் கூடியதல்ல என்று கூறுகிறார்கள். ஆகவே அவர்கள் அறியொணாவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு நபர் தன்னுடைய சொந்தச் சிந்தனைகள், உணர்ச்சிகளை மட்டுமே அறிய முடியும் என்று அகநிலைக் கருத்துமுதல் வாதிகள் கூறுகிறார்கள். மனிதன் மெய்ப்பொருள்"', ஏதோ ஒரு வகையான இறைஞானப் “பரம கருத்து, இதரவற்றை மட்டுமே அறிய முடியும் என்று புறநிலைக் கருத்துமுதல்வாதிகள் வலியுறுத்துகிறார்கள்.

வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் இடையேயுள்ள உறவு மற்றும் உலகத்தை அறிதல் பற்றிய கேள்வி தத்துவஞானத்தின் அடிப்படையான கேள்வியாகும், ஏனென்றால் இதற்குத்தரப்படுகின்ற பதிலே சுற்றியுள்ள உலகத்தின் வளர்ச்சி விதிகளின் தன்மை, உலகத்தை அறிகின்ற வழிகள், இதரவை போன்ற தத்துவஞானப் பிரச்சினைகள் அனைத்தின் தீர்வுக்கும் ஆதாரமாக இருக்கிறது. உதாரணமாக, உணர்வு, மெய்ப்பொருள் அல்லது கருத்து முதன்மையானது என்றால், நிலவுகின்ற சுரண்டல் சமூக அமைப்பு மாற்றப்பட முடி யாதது. நிரந்தரமானது என்று கருதப்படும்; அது கடவுளால் படைக்கப்பட்டது, ஆகவே அதை மாற்ற முடியாது. பருப்பொருள் முதன்மையானது என்றால், மக்கள் தம்மால் வெறுக்கப்படுகின்ற சமூக-பொருளாதார அமைப்பை ஒழித்து சுரண்டலற்ற புதிய சமூகத்தை நிர்மாணிக்க முடியும். கருத்துமுதல்வாதம் பிற்போக்கான சமூக சக்திகளின் நலன்களுக்குப் பாடுபடுகிறது, பொருள்முதல்வாதம் முற்போக் கான, புரட்சிகர சக்திகளின் நலன்களுக்கு உதவுகிறது.

மார்க்சிய-லெனினியத் தத்துவம் – வி.காரட்நோவ், வி.புசுயெவ்



மார்க்சிய லெனினியம் என்றால் என்ன?
முன்னேற்றப் பதிப்பகம்
மாஸ்கோ1988


கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தைத் தொகுப்புரை செய்து அதைப் பற்றித் தம்முடைய ஆராய்ச்சியின் அடிப் படையில் இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்கின்ற புதிய தத்துவஞானத்தை வளர்த்தார்கள், வி.இ.லெனின் புதிய சகாப்தத்தின் வரலாற்றுச் சாரத்தை ஆராய்ந்து எழுதிய நூல்களில் மார்க்சியத் தத்துவஞானம் மேலும் வளர்த்துக் கூறப்பட்டது. மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் வாழ்கின்ற, படைப்புத் தன்மையுள்ள போதனை என்ற முறையில் உலக வரலாற்று அனுபவம், இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானங்களின் சாதனைகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மார்க்ஸ், எங் கெல்ஸ், லெனினுடைய போதனையின் தத்துவஞான அடிப் படையாக இருக்கிறது; இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையில் வளர்ச்சியின் ஆகப் பொதுப்படையான விதிகளைப் பற்றிய விஞ்ஞானமாக இருக்கிறது.


2) வரலாற்றுப் பொருள்முதல்வாதம்


Thursday, 18 July 2019

பருப்பொருள், விசும்பு, காலம் ஆகியற்றின் புறநிலைத் தன்மையைப் பற்றி:-


(பல்வேறு நூல்களில் இருந்து திரட்டப்பட்டது)


இயக்கம் என்பது பருப்பொருளின் நிலைநிற்புப் பாங்கு ஆகும். இயக்கமின்றி பருப்பொருள் எங்கும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. இயக்கமில்லாப் பருப்பொருள், பருபபொருள் இல்லாத இயக்கம் போலவே நினைத்துப் பார்க்க முடியாதது. ஆகவே இயக்கம் பருப்பொருளைப் போலவே படைக்க முடியாதது மற்றும் அழிக்க முடியாதது.

இயக்கத்தில் இருக்கும் பருப்பொருள் விசும்பிலும் காலத்திலும் தவிர வேறு வழியில் செயற்பட முடியாது. குறிப்பிட்ட பொருளின் உயரம், அகலம், நீளம் போன்றவை பிற பருப்பொருளிடம் இருந்து அதன் தூரம் ஆகியவற்றை விசும்பு வழியிலான உறவைக் குறிக்கிறது. அதாவது ஒவ்வொரு பொருளுக்கும் இடையேயான தொடர்பு விசும்பில் நிகழ்கிறது. இதுவே விசும்பு பற்றி மார்க்சிய தத்துவத்தின் கருதுகோளாகும்

அனைத்துப் பொருளும் குறிப்பிட்ட நேரத்தில் நீடித்திருக்கும் தன்மையாகவும், இவ்வாறு நீடித்திருப்பதின் கட்டங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஒன்றை அடுத்து மற்றொன்று என நிகழும் தன்மையையும் பெற்றுள்ளன. பருப்பொருள் நீடித்திருப்பதும் அவை நிலவும் வரிசையும் காலத்தைப் பற்றிய மார்க்சிய தத்துவத்தின் கருதுகோளாகும்.

பருப்பொருள் விசும்பில் இருப்பது என்றால் ஒன்றின் அருகே மற்றொன்று என்ற வடிவத்தில் இருக்கிறது, காலத்தில் இருப்பது என்றால் ஒன்றை அடுத்து மற்றொன்று என்ற வரிசைதொடர் வடிவத்தில் இருக்கிறது.

விசும்பும் காலமும் பருப்பொருள் இருப்பின் சர்வபொது வடிவங்களாகும். விசும்பிற்கும் காலத்திற்கும் அப்பால் பருப்பொருளின் இருப்பு கிடையாது. பருப்பொரூள் எப்படி காலத்திற்கும் விசும்பிற்கும் அப்பால் இருக்க முடியாதோ அதே போல காலமும் விசும்பும் பருப்பொருள் இன்றி நிலவ முடியாது.

பருப்பொருளைப் போன்றே விசும்பும் காலமும், மனிதனை சாராத புறநிலையானது.